இன்றைய நடப்பு நிகழ்வுகள் மே 20, 2024
நான் முதல்வன் ஒலிம்பியாட் திட்டம்:
தமிழகத்தில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான ‘நான் முதல்வன் ஒலிம்பியாட்’ திட்டம் தொடங்கப்பட்டது.
மாணவர்களின் திறனை சோதிக்கும் வகையில் மொழித்திறன், கணிதத் திறன், சிந்திக்கும் ஆற்றல் உள்ளிட்டவற்றின் கீழ் கையடக்க கணினி வழியே 50 மதிப்பெண்களுக்கான தேர்வு நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் 18 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம்:
தமிழகத்தில் உள்ள 15,280 வருவாய் கிராமங்களில் ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும், அதிகமாக சாகுபடி செய்யப்படும் பயிரில், 5 முதல், 10 ஏக்கர் பரப்பளவில் செயல் விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
அதில் திடல் அமைத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பயருக்கான நிலம் தயாரிப்பு, உயர் விளைச்சலுக்கான ரகங்கள், விதை நேர்த்தி, விதை விதைப்பு, ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்படும்.
மண் பரிசோதனையின் அடிப்படையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை தொழில்நுட்பங்களையும், இச்செயல் விளக்க திடலில் செயல்படுத்தப்படும்.
முதல்வரின் தாயுமானவர் திட்டம்:
தமிழகத்தில் வரும் 2 ஆண்டுகளுக்கு வறுமையை குறைக்கும் விதமாக முதல்வரின் தாயுமானவர் திட்டம் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களால் பிப்ரவரி 19, 2024 அன்று அறிவிக்கப்பட்டது .
2024 – 25 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யும் போது, சட்டசபையில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். வறுமையை போக்க தமிழக அரசு தாயுமானவர் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.
இந்த திட்டத்திற்கு ரூ.27,922 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஏறக்குறைய ஐந்து லட்சம் ஏழைக் குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க முயல்கிறது.
மாநிலத்தின் ஏழ்மையான குடும்பங்களில் சுமார் ஐந்து லட்சம் மக்களை வறுமையில் இருந்து உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலக அளவியல் தினம் : மே 20
1875 – ஆம் ஆண்டு மே 20 அன்று மீட்டர் உடன்படிக்கையில் 17 நாடுகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டதைக் கொண்டாடும் விதமாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
மீட்டர் உடன்படிக்கையின் உண்மையான நோக்கம் உலகளவில் அளவீடுகள் சீரான அளவில் இருப்பதாகும்.
இந்த அளவீடுகள் 1875 ஆம் ஆண்டில் இருந்ததைப் போல தற்காலத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
தற்பொழுது உலக அளவியல் தினமானது சர்வதேச எடைகள் மற்றும் அளவீடுகள் ஆணையம் மற்றும் சர்வதேச மெய் அளவியல் ஆணையத்தால் அனுசரிக்கப்படுகிறது.
உலக தேனீக்கள் தினம் :மே 20
2017 – ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபையானது மே 20 ஆம் தேதியை உலக தேனீக்கள் தினமாக ஒருமனதாக அறிவித்தது.
2018 – ஆம் ஆண்டு மே 20 அன்று முதல் தேனீக்கள் தினம் கடைபிடிக்கப்பட்டது.
தகவல் துளிகள்:
உலக அளவில் உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெறும் கைப்பந்து போட்டியில் தமிழக காவல் துறையைச் சோ்ந்த இரு காவலா்கள் காவலா்கள் எஸ்.கண்ணன், எம்.கபில் கண்ணன் பங்கேற்றுள்ளனா்.
இந்தோனேசியாவின் பாலி தீவில் அமெரிக்க தொழிலதிபரான எலான் மஸ்க், தனது ‘ஸ்பேஸ்-எக்ஸ்’ நிறுவனத்தின் ‘ஸ்டார்லிங்க்’ செயற்கைக்கோள் இணையச் சேவை செயல்பாட்டை தொடங்கி வைத்தார்.
ஜப்பானில் நடைபெறும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் ஆடவருக்கான உயரம் தாண்டுதல் நிஷாத் குமார் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளி பெற்றார், ராம் பால் 6-ஆம் இடம் பிடித்தார்.
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையா் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம்
தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை சாம்பியன் பட்டம் வென்றது.
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பானின் கோபே நகரில் நடைபெற்று வருகின்றன. அதில் உயரம் தாண்டுதல் போட்டியில், ஆண்கள் பிரிவில் இந்தியாவின் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.