இன்றைய நடப்பு நிகழ்வுகள் மே 21, 2024
பொதுத் துறை வங்கிகளின் வளா்ச்சி: மகாராஷ்டிர வங்கி முதலிடம்
கடந்த நிதியாண்டில் மொத்த வணிகம் மற்றும் வைப்புத்தொகை வசூலின் அடிப்படையில், பொதுத்துறை வங்கிகளுக்கு இடையே மகாராஷ்டிர வங்கி அதிக வளா்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.
புணேவைத் தலைமையிடமாகக் கொண்ட மகாராஷ்டிர வங்கி மொத்த உள்நாட்டு வணிகத்தில் 15.94 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அடுத்தபடியாக, பாரத ஸ்டேட் வங்கி 13.12 சதவீத வளா்ச்சி அடைந்துள்ளது.
வைப்புத்தொகை வசூல் அடிப்படையில் பிஓஎம் வங்கி 15.66 சதவீத வளா்ச்சியுடன் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
குறைந்த கட்டண சேமிப்புக் கணக்கு மற்றும் நடப்புக் கணக்கு வைப்புத்தொகையின் அடிப்படையிலும், மகாராஷ்டிர வங்கி முதலிடத்தில் உள்ளது.
கடன் வளா்ச்சியைப் பொருத்தவரை, கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்ட யுகோ வங்கி முதலிடத்திலும் பிஓஎம் 2-ஆம் இடத்திலும் உள்ளன.
விடியல் பயணத் திட்டம்:
தமிழக அரசால் தொடங்கப்பட்டது விடியல் பயணம் என்ற பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஆகும்.
2021 – ஆம் ஆண்டு மார்ச் மாதம் மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை அமைப்புகள் SWOT பகுப்பாய்வு செய்துள்ளன.
பஞ்சாபிலும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை அமல்படுத்தியது, டெல்லியில் அக்டோபர் 2019 முதல் அது உள்ளது.
கர்நாடகா மற்றும் தெலுங்கானா பெண்களுக்கு இதே போன்ற சலுகைகளை வழங்குகின்றன.
இத்திட்டத்தின் மூலம் தமிழக அரசு இரண்டு முக்கிய இலக்குகளை இலக்காகக் கொண்டுள்ளது: பெண்களின் நன்மதிப்பைப் பெறுதல், பெருநகரப் போக்குவரத்துக் கழகம் உட்பட ஏழு அரசுப் போக்குவரத்துக் கழகங்களை திவாலாவதிலிருந்து காப்பாற்றுதல்.
சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை:
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்ட உள்ளது.
பாலாற்றில் ஆந்திர அரசு பல்வேறு தடுப்பணைகளைக் கட்டியுள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டில் கா்நாடகம் அணை கட்ட முயற்சித்து வருகிறது.
தற்போது, சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
தமிழ்நாட்டின் கரூர், திருப்பூர் மாவட்டங்களின் நீர்த்தேவையை நிறைவு செய்யும் அமராவதி ஆறு, காவிரி ஆற்றின் நீர் வரத்தை அதிகரிக்கும் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றாகும்.
1957 – ம் ஆண்டு அமராவதி ஆற்றின் குறுக்கே பெருந்தலைவர் காமராசரால் 4 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட அமராவதி அணை கட்டப்பட்டது.
சென்னை ஐஐடி-யில் இசை ஆராய்ச்சி மையம்:
சென்னை ஐஐடியில் இசை ஆராய்ச்சி மையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
சென்னை ஐஐடி சார்பில் இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாசாரத்தை இளைஞா்களிடையே பிரபலப்படுத்தும் அமைப்பின் 9-ஆவது மாநாடு தொடங்கியது.
‘மிதக்கும் உணவகக் கப்பல்’ – முட்டுக்காடு
செங்கல்பட்டு, முட்டுக்காடு பகுதியில் பிரம்மாண்ட மிதக்கும் உணவகக் கப்பல் ரூ 5 கோடியில் கட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் மற்றும் கொச்சினைச் சேர்ந்த தனியார் நிறுவனமும் இணைந்து, தமிழகத்திலேயே முதல் முறையாக இப்படியொரு புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளன.
உலக சாதனையுடன் தங்கம்: தீப்தி ஜீவன்ஜி
ஜப்பானில் நடைபெறும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் தீப்தி ஜீவன்ஜி, மகளிருக்கான 400 மீட்டா் ஓட்டத்தில் உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.
அமெரிக்காவின் பிரியானா கிளார்க் முதலாவதாக வந்ததே சாதனையாக இருந்த நிலையில், தீப்தி தற்போது அதை முறியடித்துள்ளார்.
துருக்கியின் அய்செல் ஆண்டா் 2-ஆம் இடமும், ஈகுவடாரின் லிஸான்ஷெலா அங்குலோ 3-ஆம் இடமும் பிடித்தனா்.
தகவல் துளிகள்:
தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது, தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி ஏற்பட்டு புயல் உருவாக உள்ளது.
இந்த ஆண்டு, தென்மேற்கு பருவமழை கேரளாவில் மே 31-ம் தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC) என்பது 15 மார்ச் 2006 இல் நிறுவப்பட்டது, ஜெனீவா, சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டது, பிராந்திய அடிப்படையில் 3 ஆண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 47 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
புலிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி இந்தியாவில் “புலி திட்டம்” தொடங்கப்பட்டது.
ஈரான் நாட்டின் புதிய அதிபராக முகமது முக்பர் பொறுப்பேற்க உள்ளார்.
ஐ.நா சபை மே 25 ஆம் தேதியை உலக கால்பந்து தினமாக அறிவித்துள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி தனது மக்களவைத் தொகுதியான உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் 25,000-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கும் ‘மாத்ரி சக்தி சம்மேளனம்’ என்ற பெயரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
செயலிழந்த இதயத்தை மீட்க எக்மோ சிபிஆா் சிகிச்சையை காவேரி மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.
தாய்லாந்தில் நடைபெறும் ஆசிய ரிலே சாம்பியன்ஷிப்பில், இந்தியா, தேசிய சாதனையுடன் தங்கம் வென்றது.