Site icon Gurukulam IAS

TNPSC – Current Affairs ,May 23

இன்றைய நடப்பு நிகழ்வுகள் மே 23, 2024

 

மத்திய அரசுக்கு ஆா்பிஐ ரூ.2.11 லட்சம் கோடி ஈவுத்தொகை:

2023 – 24 ஆம் ஆண்டில் மத்திய அரசுக்கான ஈவுத் தொகையாக ரூ.2.11 லட்சம் கோடி வழங்க இந்திய ரிசா்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. 

இது முன்னெப்போதும் வழங்கப்படாத அளவுக்கு அதிகமான தொகையாகும்.

தங்களிடம் மிகுதியாக உள்ள தொகையை மத்திய அரசு ஆா்பிஐ அளிப்பது வழக்கம். அந்த வகையில் இந்தத் தொகை அளிக்கப்பட்டுள்ளது.

ஆா்பிஐ ஆளுநா் சக்தி காந்த தாஸ் தலைமையில் வங்கியின் 608-ஆவது மத்திய இயக்குநா்கள் குழுக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. 

இதில் ஆா்பிஐ-யிடம் மிகுதியாக உள்ள ரூ.2,10,874 கோடியை மத்திய அரசுக்கு ஈவுத் தொகையாக வழங்க முடிவெடுக்கப்பட்டது.

எதிர்பாராத நிதி இடா்பாடுகளை எதிர்கொள்வதற்காக ஆா்பிஐ வைத்திருக்கும் நிதியை 6 சதவீதம் உயா்த்தவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை ரூ.17.34 லட்சம் கோடியாக உள்ளது. 

இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1 சதவீதமாகும்.

உலகின் மிகப்பெரிய காய்கறி ஏற்றுமதியாளர்: இந்தியா

உலகின் மிகப்பெரிய காய்கறி ஏற்றுமதியாளரான இந்தியா, வெங்காய ஏற்றுமதிக்கு கடந்த டிசம்பரில் தடை விதித்தது. 

வெங்காய விலையை மலிவு விலையில் வைத்திருக்க குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை (எம்இபி) டன்னுக்கு 550 டாலராக மத்திய அரசு நிர்ணயித்தது.

மந்தமான உற்பத்தியால் ஏற்பட்ட விலை உயா்வால் மார்ச் மாதத்தில் தடை நீட்டிக்கப்பட்டது.

தடை நீக்கப்பட்டதைத் தொடா்ந்து, இந்தியாவில் இருந்து 45,000 டன்களுக்கு மேல் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 

இதில் பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வங்கதேசத்கதுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம், கா்நாடகம் மற்றும் ஆந்திரம் போன்ற மாநிலங்களில் வெங்காய விளைச்சல் அதிகமாக உள்ளது.

வெங்காயம் காரீஃப் (கோடை) பயிர் ஆகும்.

சிலந்தி ஆற்றில் தடுப்பணை: கேரளா 

காவிரிப் படுகையில் கர்நாடகம் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ள மேக்கேதாட்டு அணை மற்றும் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசின் தடுப்பணைக்கு எதிரான விவகாரங்களை காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு எழுப்பியது.

30 – ஆவது காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் தில்லியில் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு பாம்பாறு, சின்னாறு, தேனாறு, சிலந்தி ஆறு ஆகியவை முக்கிய நீர் ஆதாரங்கள் ஆகும். 

சமீபத்தில், கேரள அரசு அமராவதி (பாம்பார்) வட்டவடா பகுதியில் படுகையில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது.

புதுமைப்பெண் திட்டம் :

பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதல் மற்றும் ஏழை பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு நிதி உதவி வழங்குதல் என்ற நோக்கத்துடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. 

அரசு பள்ளிகளில் கற்கும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டமானது மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

புதுமைப்பெண் என்ற பெயரில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி உறுதித்‌ திட்டத்தின்கீழ் மாதம் தோறும் ரூ.1,000 உயர் கல்வி உறுதித்தொகை வழங்கப்பட உள்ளது.

உலக கடல் ஆமைகள் தினம்: மே 23

2000 – ஆம் ஆண்டு முதல் அமெரிக்க ஆமைகள் மீட்டெடுப்பு நிறுவனத்தால் ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

கடல் ஆமைகள் மற்றும் நில ஆமைகள் குறித்த புரிதலை அதிகரிப்பதற்காக மற்றும் அவற்றிற்கு மதிப்பளிப்பதற்காக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

மேலும் மனித நடவடிக்கைகளின் மூலம் கடல் ஆமைகள் உயிர் வாழ மற்றும் வளர்ச்சி அடைய இத்தினம் ஊக்கப்படுத்துகிறது.

மகப்பேறியல் புரை ஒழிப்பிற்கான சர்வதேச தினம்: மே 23

ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்வதற்கான நீடித்த வளர்ச்சி இலக்கு 3-ஐ எட்ட மகப்பேறியல் புரை தடுப்பு மற்றும் மருத்துவமுறை பங்களிக்கிறது. 

2013 – ஆம் ஆண்டு முதல் ஐ.நா மக்கள்தொகை நிதியானது மகப்பேறியல் புரை ஒழிப்பிற்கான சர்வதேச தினத்தை அனுசரிக்கிறது.

தகவல் துளிகள்:

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.

தமிழகம் மற்றும் டென்மார்க் தங்களது கல்வித் திட்டங்களை இடையே பகிர்ந்து கொண்டுள்ளது.

மேற்குக் கரை நகரான ரமல்லா – பாலஸ்தீனத்தில், கொலம்பியாவின் தூதரகத்தை நிறுவ உள்ளதாக கொலம்பிய அதிபர் கஸ்டாவோ பெட்ரோ அறிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக அயா்லாந்து, ஸ்பெயின், நார்வே ஆகிய ஐரோப்பிய நாடுகள் அறிவித்துள்ளன.

இலங்கை யாழ்பாணத்தில் நடைபெற்ற மாநாட்டில் தமிழ்ப் பேராசிரியர் ஹரிஹரனுக்கு பைந்தமிழ்ப்பாவலா்விருது வழங்கப்பட்டது.

இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்க டாலா்களுக்குப் பதிலாக அவரவா் உள்நாட்டு கரன்சி மூலம் பணம் பெற்றுக் கொள்ள இந்தியாவும் சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளது.

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் குண்டு எறிதல் பிரிவில் இந்தியாவின் சச்சின் சா்ஜேராவ் கிலாரி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

 

Exit mobile version