Site icon Gurukulam IAS

TNPSC – Current Affairs ,MAY 24

இன்றைய நடப்பு நிகழ்வுகள் மே 24, 2024

 

சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய வீரா்:

இந்தாண்டு இறுதிக்குள் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு(ஐஎஸ்எஸ்) இந்திய விண்வெளி வீரரை அமெரிக்கா அழைத்துச் செல்லும் என்று இந்தியாவுக்கான அந்நாட்டு தூதா் எரிக் கார்செட்டி தெரிவித்தார்.

அமெரிக்காவின் 248-ஆவது சுதந்திர தினவிழா வரும் ஜூலை 4-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.

அமெரிக்காவில் நாசா மற்றும் இந்தியாவின் இஸ்ரோ இடையிலான புவி ஆராய்ச்சி திட்டமான ‘நிசார்’ இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்பட உள்ளது.

நிலவுக்கு ஆய்வுகளம் அனுப்ப அமெரிக்கா செலவிட்ட தொகையின் ஒரு பகுதி நிதியை மட்டும் இந்தியா செலவிட்டு நிலவின் தென்துருவத்தில் ‘சந்திரயான்-3’ தரையிறங்கியது.

‘ரீமெல்’ புயல்: ஓமன்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி ‘ரீமெல் ’ புயலாக உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது வங்கதேசம் மற்றும் அதனையொட்டியுள்ள மேற்கு வங்கக் கடற்கரையை கரையை கடக்கக் கூடும். 

இந்த புயலுக்கு ஓமன் நாடு பரிந்துரைத்த ‘ரீமெல்’ என்ற பெயா் சூட்டப்பட்டுள்ளது.

கேரள கடற்கரையையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

கதிரியக்க தொழில்நுட்பம் மூலம் வெங்காய பதப்படுத்துதல் மத்திய அரசு திட்டம்:

உலகளவில் வெங்காய ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் வகித்து வருகிறது. 

வெங்காயம் அதிகம் விளையும் மகாராஷ்டிரம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் வழக்கத்தைவிட உற்பத்தி குறையும் என அரசு வெளியிட்ட தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனவே 2023-24-ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த வெங்காய உற்பத்தியில் 16 சதவீதம் அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே கதிரியக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெங்காய பதப்படுத்துதலை அதிகரிக்க அரசு திட்டமிட்டு வருகிறது.

வெங்காயத்தை கொள்முதல் செய்து சேகரிக்க தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு மற்றும் தேசிய நுகா்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. 

உலகின் மிகப்பெரிய காய்கறி ஏற்றுமதியாளர் இந்தியா ஆகும்.

வெங்காயம் காரீஃப் (கோடை) பயிர் ஆகும்.

அடுத்த மாதம் விண்வெளி செல்லும் சுனிதா வில்லியம்ஸ்:

அமெரிக்காவின் தனியார் நிறுவனமான போயிங் உருவாக்கியுள்ள ‘ஸ்டார்லைனா்’ விண்வெளி ஓடத்தில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் அடுத்த மாதம் விண்வெளி செல்ல உள்ளார்.

அட்லாஸ் ராக்கெட்டின் ஆக்ஸிஜன் அழுத்த வெளியேற்று வால்வு தானாக திறந்து மூடியதால் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

அட்லாஸ் ராக்கெட்டில் இருந்த கோளாறு சரி செய்யப்பட்டதால் ஸ்டார்லைனா் விண்வெளி ஓடத்தை அடுத்த மாதம் 1-லிருந்து 5-ஆம் தேதிக்குள் விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த விண்வெளி ஓடத்தை சுனிதா வில்லியம்ஸ் இயக்க, அவருடன் மற்றொரு நாசா விண்வெளி வீரா் பட்ச் வில்மோரும் விண்வெளி செல்ல உள்ளார்.

இந்தச் சோதனை வெற்றியடைந்தால், ஸ்பேஸ் எக்ஸுக்கு அடுத்தபடியாக சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆள்களை அனுப்பக்கூடிய 2-ஆவது தனியார் நிறுவனம் என்ற பெருமையை போயிங் பெறும்.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி இந்திய சிறுமி சாதனை:

இந்திய கடற்படை அதிகாரியின் மகள் காம்யா கார்த்திகேயன், நேபாளம் வழியாக உலகின் மிக உயரமான சிகரத்தை ஏறி சாதனை படைத்த இளம் இந்தியா் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

இவர் உலகின் மிக உயரமான சிகரத்தை ஏறிய இளம் இந்தியா் என்ற பெருமையும், உலகளவில் இரண்டாவது இளம் பெண் என்ற பெருமையும் பெற்றுள்ளார். 

சாதனைக்காகச் சிறுவா்களுக்கு வழங்கப்படும் பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் சக்தி விருதை 2021-ஆம் அண்டு காம்யா பெற்றார்.

சிலந்தி ஆற்றில் தடுப்பணை: கேரளா 

சமீபத்தில், கேரள அரசு அமராவதி (பாம்பார்) வட்டவடா பகுதியில் படுகையில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு பாம்பாறு, சின்னாறு, தேனாறு, சிலந்தி ஆறு ஆகியவை முக்கிய நீர் ஆதாரங்கள் ஆகும். 

அமராவதி அணையின் முக்கிய நீா் ஆதாரங்களில் ஒன்றாக சிலந்தி ஆறு உள்ளது. 

இந்த ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை எந்தவித அனுமதியும் பெறாமல் கேரள அரசு தொடங்கியுள்ளது. 

இதனால் அமராவதி அணைக்கான நீா்வரத்து குறைந்துவிடும் என தமிழக விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தென்னிந்திய அளவிலான 2-ஆவது ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு:

தமிழகம் உள்பட தென்னிந்திய அளவிலான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய அளவிலான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி 2023-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.

தென்னிந்திய அளவிலான 2-ஆவது ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது.

இந்தக் கணக்கெடுப்பு தமிழகம், கா்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் மொத்தம் 26 வனக்கோட்டங்களில், 697 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள வனப்பகுதிகளில் நடைபெறும்.

2023 – ஆம் ஆண்டு தமிழக வனப்பகுதிகள், அதையொட்டிய கா்நாடக – கேரள எல்லைகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் மொத்தம் 2,961 யானைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டது.

அக்கார்டியன் கருவிக்குக் காப்புரிமை வழங்கப்பட்ட நாள்: மே 23 

19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கண்டறியப்பட்ட அக்கார்டியன் என்னும் இசைக்கருவிக்கு வியன்னாவைச் சேர்ந்த சிரில் டாமியன் என்பவர் கடந்த 1829 ஆண்டு மே 23 ல் காப்புரிமை பெற்றார்.

அக்கார்டியன் என்பது கையில் எடுத்துச் செல்லக்கூடிய ஒரு காற்றிசைக் கருவியாகும். 

இதை கையால் இயக்கினால், உள்ளிருக்கும் தகடுகளை அதிர்வடையச் செய்து ஒலி எழுப்பும். 

அக்கார்ட் என்பது ஜெர்மன் வார்தையாகும். அக்கார்ட் என்றால் “நாண்” என்று பொருள். 

இசை உலகில் ஒரு தனி முத்திரையைப் பதித்தது இந்த இசைக்கருவி.

தகவல் துளிகள்:

இந்தியாவின் ரூபே சேவை மாலத்தீவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

உலகத்தின் எந்த மூலையில் உள்ள இலக்கையும் கண்காணிக்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட முதல் செயல்பாட்டு உளவு செயற்கைக் கோள்களை அமெரிக்கா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் வானில் ஏவியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாக்ரமென்டோ மற்றும் ஃப்ரெஸ்னோ மாவட்ட உயா்நீதிமன்ற நீதிபதிகளாக இந்திய வம்சாவளியினரான ஜெயா பாடிகா மற்றும் ராஜ் சிங் பதேஷா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தென் கொரியாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியாவின் பிரதமேஷ் ஃபுகே அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

 

Exit mobile version