Site icon Gurukulam IAS

TNPSC – Current Affairs ,MAY 25

இன்றைய நடப்பு நிகழ்வுகள் மே 25, 2024

 

உடல் உறுப்பு தானத்தில் முதலிடம்: தமிழகம் 

நாட்டின் பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் உறுப்பு மாற்று நடவடிக்கைகள் சிறப்பாகவும், மேம்பட்ட நிலையிலும் உள்ளன. 

இந்திய அளவில் தமிழகம் தொடா்ந்து உடல் உறுப்பு தானத்தில் முதலிடத்தில் உள்ளது.

உறுப்பு தானம் செய்பவா்களின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று கடந்த ஆண்டு செப்டம்பா் 23-ஆம் தேதி முதல்வா் அறிவித்தார். 

இதை பின்பற்றி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இத்தகைய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 

நிகழாண்டில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக ராஜீவ் காந்தி மருத்துவமனையிலிருந்து உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன.

அரசு மரியாதை அறிவிப்புக்கு பிறகு தமிழகத்தில் இதுவரை 170 போ் உடல் உறுப்பு தானம் அளித்துள்ளனா்.

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை: கேரளா 

முல்லைப் பெரியாறு அணை அல்லது முல்லைப் பேரியாறு அணை மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும்.

இது தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது, இது கட்டப்பட்டுள்ள இடம் கேரளாவுக்கு உரிமையானது.

தமிழக பொதுப்பணித்துறை இவ்வணையைப் பராமரித்து வருகிறது.

1893 – ஆம் ஆண்டில் பென்னி குவிக் என்ற ஆங்கிலேயரால் கட்டப்பட்டது.

இந்த அணையின் நீர்ப்பிடிப் பகுதியில் வன சரணாலயம் தேக்கடி உள்ளது. இதன் கீழ்ப்பகுதியில் இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது.

பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டதால் முதலில் பெரியாறு அணை என்றழைக்கப்பட்ட அணை, முல்லையாறு மற்றும் பெரியாறு இரண்டும் சேருமிடத்தின்கீழ் அமைந்துள்ளதால் இரு ஆறுகளின் பெயர்களையும் இணைத்து ’முல்லைப் பெரியாறு அணை’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

தற்போது முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்வதற்கு கேரள அரசு விடுத்த கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. 

இதற்கு தமிழ்நாடு அரசு தனது ஆட்சேபணையைத் தெரிவித்துள்ளது.

இந்தியாவுடன் அணுசக்தி ஒத்துழைப்பு: ரஷியா

இந்தியாவில் அதிக திறன் கொண்ட புதிய அணுமின் நிலையங்களை அமைப்பது உள்பட அணுசக்தி துறையில் இந்தியாவுடனான ஒத்துழைப்பை விரிவுபடுத்த தயாராக இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் திறன்கொண்ட ஆறு அணு உலைகளை அமைப்பதில் ரஷியாவும் இந்தியாவும் இணைந்து பணியாற்றி வருகின்றன. 

இவற்றில் இரண்டு அணுஉலைகள் செயல்பட தொடங்கிவிட்டன.

கேன்ஸ் திரைப்பட விழா: பிரான்ஸ்

77 -ஆவது கேன்ஸ் திரைப்பட விழா மே 14-ஆம் தேதி முதல் பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். 

அந்தவகையில், அடுத்த தலைமுறை கலைஞா்களை ஊக்குவிக்கும் வகையில் திரைப்படக் கல்லூரி மாணவா்களுக்கு வழங்கப்படும் ‘லா சினெஃப்’ விருதுகள் அறிவிக்கப்பட்டன.

கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘லா சினெஃப்’ விருது பிரிவில் மைசூரு மருத்துவா் சித்தானந்த எஸ்.நாயக் இயக்கிய ‘சன்ஃபிளவா்ஸ் வோ் தி பா்ஸ்ட் ஓன்ஸ் டூ நோ’ எனும் குறும்படம் முதல் பரிசை வென்றுள்ளது.

இந்திய வம்சாவளியான மன்சி மகேஸ்வரி இயக்கிய ‘பன்னிவுட்’ அனிமேஷன் திரைப்படம் மூன்றாம் பரிசை பெற்றது.

கடைசியாக கடந்த 2020-ஆம் ஆண்டு, எஃப்டிடிஐ கல்லூரி மாணவி அஸ்மிதா கூஹா நியோகி இயக்கிய ‘கேட்-டாக்’ படம் ‘லா சினெஃப்’ விருதின் முதல் பரிசை வென்றது.

9 – ஆவது ‘ஃபார்மாக் சவுத் எக்ஸ்போ-2024’ மாநாடு:

இந்திய மருந்து உற்பத்தியாளா்கள் சங்கத்தின் தமிழகம், புதுச்சேரி, கேரளம் 9-ஆவது ‘ஃபார்மாக் சவுத் எக்ஸ்போ-2024’ என்ற இரு நாள் கண்காட்சி மற்றும் மாநாடு சென்னை, நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் தொடங்கியது.

உலக அளவிலான மருந்து தேவையில் 20 சதவீதம் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாவதாக இந்திய மருந்து உற்பத்தியாளா்கள் சங்கத்தின் தலைவா் ஜெ.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

உலக அளவிலான மருந்து தேவையை இந்தியா 20 சதவீதம் பூா்த்தி செய்கிறது. 

அமெரிக்காவுக்கான 40 சதவீத மருந்துகள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

உலக அளவில் மருந்து உற்பத்தியில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் சீனாவும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன.

உலக அளவில் உற்பத்தியாகும் தடுப்பூசிகளில் 60 சதவீதம் இந்தியாவில் இருந்து உற்பத்தியாகிறது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

உலக தைராய்டு தினம்: மே 25 

முதன்முறையாக 2008 ஆம் ஆண்டு உலகளவில் தைராய்டு மற்றும் கண்ணுக்குப் புலனாகாத அறிகுறிகளுக்கான ஒரு தினத்தை அனுசரிப்பதற்காக ஐரோப்பிய தைராய்டு மன்றம் (ETA – European Thyroid Association) மற்றும் அமெரிக்க தைராய்டு மன்றம் ஆகியவையால் ஏற்படுத்தப்பட்டது. 

மே 25 ஆம் தேதி உலக தைராய்டு தினம் ஏற்படுத்தப்பட்டது.

தகவல் துளிகள்:

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.வி.கங்காபுா்வாலா ஓய்வு பெற்றதையடுத்து, தற்காலிகமாக பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி அரங்க.மகாதேவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா அருகே ஓஷியானா மண்டலத்தில் அமைந்துள்ள நியூ கினியா தீவின் கிழக்குப் பகுதியையும் மெலனீசிய தீவுகளையும் உள்ளடக்கிய நாடு பப்புவா நியூ கினியாவில் மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பைத் தொடரின் தூதராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷகித் அஃப்ரிடி அறிவிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச புக்கர் பரிசு 2024 ஜென்னி எர்பென்பெக் எழுதிய “கெய்ரோஸ்”- க்கு வழங்கப்பட்டது மற்றும் மைக்கேல் ஹாஃப்மேன் இதை மொழிபெயர்த்துள்ளார்.

ஐசிசி 20 ஒவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜுன் 1 -ந் தேதி முதல் ஜுன் 29 – ந் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ளது. 

ஐசிசி 20 உலக கோப்பையின் வர்ணனையாளர் குழுவை ஐசிசி அறிவித்துள்ளது, இந்தக் குழுவில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார்.

 

Exit mobile version