14th July Daily Current Affairs – Tamil

துடிப்பான கிராமங்கள் திட்டம்:

  • மத்திய அரசின் துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் அமலாக்கம் தொடா்பாக தில்லியில் அமித் ஷா தலைமையில் உயா்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
  • நாட்டின் எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் வசிப்போருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று அமித் ஷா உயா்நிலை ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்தார்.
  • துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் கீழ், எல்லைப் பகுதிகளில் உள்ள 136 கிராமங்களுக்கு ரூ.2,420 கோடி செலவில், அனைத்து பருவநிலைகளுக்கும் ஏற்ற 113 சாலை திட்டங்கள் மூலம் இணைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • 2022-23 முதல் 2025-26 வரையிலான 46 தொகுதிகளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களின் விரிவான வளர்ச்சிக்காக 4800 கோடி நிதி ஒதுக்கீட்டில் 2023 பிப்ரவரி 15 ஆம் தேதி துடிப்பான கிராமங்கள் திட்டத்தை மத்திய நிதியுதவி திட்டமாக அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.
  • அருணாச்சலப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், சிக்கிம், உத்தரகண்ட் மற்றும் லடாக்கின் யூடி ஆகிய மாநிலங்களில் வடக்கு எல்லையை ஒட்டிய 19 மாவட்டங்கள் இதில் அடங்கும்.
  • மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் அதன் மூலம் குடியேற்றத்தைத் திரும்பப் பெறவும் இந்த கிராமங்களின் விரிவான வளர்ச்சியே திட்டத்தின் நோக்கமாகும்.
  • விவசாயம், தோட்டக்கலை, சுற்றுலா மற்றும் கலாச்சார பாரம்பரியம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு, விவசாயம், தோட்டக்கலை, மருத்துவ தாவரங்கள் வளர்ப்பு உள்ளிட்ட வாழ்வாதார வாய்ப்புகளை நிர்வகிப்பதற்கான கூட்டுறவு சங்கங்களின் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான தலையீடுகளை இந்த திட்டம் திட்டமிடுகிறது.

பிரிக்ஸ் நாடாளுமன்ற மாநாடு:

  • ரஷியா நாட்டின் செயின்ட் பீட்டா்ஸ்பா்க்கில் நடைபெற்ற 10-ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற மாநாட்டில் கலந்து கொண்ட மக்களவைத் தலைவா் ஓம் பிர்லா, தஜிகிஸ்தான், கஜகஸ்தான், பெலாரஸ், எகிப்து, உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட 5 நாடுகளின் நாடாளுமன்றத் தலைவா்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
  • இந்தப் பேச்சுவார்த்தையில் இந்திய கலாசாரம், யோகா, பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு, இந்திய மாணவா்களின் கல்வி போன்ற விவகாரங்கள் விவாதிக்கப்பட்டது.
  • ரஷியாவின் செயின்ட் பீட்டா்ஸ்பா்க்கில் 10-ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற மாநாடு ஜூலை 11,12 ஆகிய தினங்களில் நடைபெற்றது.
  • 10 – ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற கூட்டத்தில் மக்களவைத் தலைவா் ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
  • இந்த மாநாட்டில் இந்திய நாடாளுமன்றக் குழுவிற்கு தலைமை ஏற்றுச் சென்ற மக்களவைத் தலைவா் ஓம் பிர்லா, நிலையான வளா்ச்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் அடங்கும்’ என்று உரையாற்றினார்.
  • பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஐந்து புதிய உறுப்பினா்கள்: எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்.
  • பிரிக்ஸ் ஐந்து வளரும் நாடுகளின் சர்வதேச கூட்டமைப்பாகும்: பிரேசில், ரஸ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை இதன் உறுப்பு நாடுகளாகும்.

இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் ஊடக மாநாடு:

  • உலக ஆடியோ காணொலி மற்றும் பொழுதுபோக்கு மாநாடு இந்தியாவில் முதல்முறையாக கோவா மாநிலத்தில் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
  • ஊடகத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்தி தரமான படைப்புகளை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. நவம்பா் 20 முதல் 28 வரை கோவாவில் சா்வதேச திரைப்பட திருவிழா நடைபெறவுள்ளது.
  • முதல்முறையாக ஊடகத்துறையினருக்கான ‘வேவ்ஸ்’ மாநாடும் கோவாவில் நடத்தப்படவுள்ளது
  • மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்.
  • கோவா மாநில முதல்வா் பிரமோத் சவாந்த்.

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்:

  • காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை திருவள்ளூா் மாவட்டம் கடம்பத்தூரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜூலை 15 இல் தொடங்கி வைக்கிறார்.
  • காலை உணவுத் திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று நிகழாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
  • இந்தத் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி துவக்கி வைக்கப்பட்டது.
  • முதற்கட்டமாக சில மாநகராட்சிகள், நகராட்சிகள், சில தொலைதூரக் கிராமங்களில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
  • ஒரு லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகளுக்கு முதற்கட்டமாக இந்தத் திட்டத்தில் உணவு வழங்கப்பட்டது.
  • தற்போது இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிக்கூடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
  • ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை படிக்கும் 17 லட்சம் குழந்தைகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெற முடியும்.

கீழடி அகழாய்வில் தந்தத்தால் செய்யப்பட்ட ஆட்டக்காய்:

  • சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில் தந்தத்தால் செய்யப்பட்ட ஆட்டக்காய் கண்டறியப்பட்டது.
  • உருளை வடிவிலான இந்த ஆட்டக்காய் சற்று அரைக்கோள வடிவ தலைப் பகுதியையும், தட்டையான அடிப் பகுதியையும் கொண்டுள்ளது.
  • கீழடியில் 10-ஆம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
  • இதுவரை நடைபெற்ற அகழாய்வில் கண்ணாடி பாசிமணிகள், செப்பு பொருள்கள், ‘தா’ எனும் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு, மீன் சின்னம் வரையப்பட்ட பானை ஓடுகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன.

ஜூலை 14: பிரான்சு தேசிய தினம் (பாஸ்டைல் தினம்)

  • விடுதலை, சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் குறித்த கொள்கைகளை உலகிற்கு அர்ப்பணித்த பிரெஞ்சுப் புரட்சியின் தொடக்கத்தை பாஸ்டைல் தினம் குறிக்கிறது.
  • இது பிரெஞ்சு புரட்சியின் திருப்புமுனையாகும்.

தகவல் துளிகள்:

  1. மேற்கு வங்கம், ஹிமாசல பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள 12 பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் 9 இடங்களைக் கைப்பற்றின.
  2. அமெரிக்காவின் சியாட்டல் நகரில் நுழைவு இசைவு மற்றும் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் 2 புதிய மையங்களை இந்தியா திறந்துள்ளது.
  3. உலக ஸ்கைடைவிங் தினத்தையொட்டி (ஜூலை 13) ‘ஸ்கை டைவிங்’ சாகச விளையாட்டு வசதி, ஹரியாணா மாநிலம், நா்னாலில் தொடங்கப்பட்டுள்ளது.
  4. ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிப்பதற்கான ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு சட்டம் கடந்த 2019-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது.
  5. மாலத்தீவின் தெற்கு பகுதியில் இறக்குமதி செய்வதற்கான சிக்கல்களையும் செலவுகளையும் குறைக்கும் வகையில் இந்தியாவில் இருந்து உணவுப்பொருள்களை ஏற்றிச் சென்ற முதல் கப்பல் மாலத்தீவின் அட்டு துறைமுகத்தைச் சென்றடைந்தது.
  6. ஹிமாசல பிரதேசத்தில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்ட விதிமுறைகளை மாற்றியமைக்க, வருமான வரி செலுத்துவோருக்கு மின் மானியத்தை முழுமையாக ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
  7. முன்னாள் முதல்வா் காமராஜரின் பிறந்த தினம், கல்வி வளா்ச்சி நாளாக ஆண்டுதோறும் ஜூலை 15-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
  8. விம்பிள்டன் மகளிர் ஒற்றையா் பிரிவில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார் செக் குடியரசின் பார்பரா கிரெஜிசிகோவா.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these