மாநிலங்களவையில் பாஜகவின் பலம் குறைந்தது:
- மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 86-ஆகவும், அக்கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 101-ஆகவும் சரிந்துள்ளது.
- இது மாநிலங்களவையில் ஒரு கட்சி அல்லது கூட்டணி பெரும்பான்மை வகிக்க தேவையான 113 இடங்களைவிட குறைவாகும்.
- இதனால், மாநிலங்களவையில் மசோதாவை நிறைவேற்ற மேலும் 12 உறுப்பினா்களின் ஆதரவு தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான மத்திய அரசுக்கு தேவைப்படுகிறது.
- 245 இடங்களைக் கொண்ட மாநிலங்களவையின் தற்போதைய பலம் 226-ஆவது உள்ளது.
- தற்போதைக்கு மாநிலங்களவையில் மொத்தம் 19 இடங்கள் காலியாக உள்ளன.
- கடந்த 2019-ஆம் ஆண்டு மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட நிலையில், தற்போது அங்கு சட்டப்பேரவை இல்லை. இதனால் மாநிலங்களவையில் ஜம்மு-காஷ்மீரின் 4 இடங்கள் காலியாக உள்ளன.
- ராஜ்ய சபா (Rajya Sabha) என்பது இந்திய நாடாளுமன்றத்தில் அதிகபட்சம் 250 உறுப்பினர்களைக் கொண்ட மேலவை ஆகும்.
- தற்போது மாநிலங்களவையில் 245 உறுப்பினர்கள் உள்ளனர், இவர்களில் 12 உறுப்பினர்கள் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்.
- கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, தொழில் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பார்.
- இந்த 12 பேரைத் தவிர்த்து மற்றவர்கள் இந்திய மாநிலங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களால் விகிதாச்சார பிரதிநித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
- மாநிலங்களவை உறுப்பினரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும்.
- மேலவையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முடிவடையும்.
- மாநிலங்களவைத் தலைவராக குடியரசுத் துணைத்தலைவர் பதவி வகிப்பார்.
- மாநிலங்களவை கூட்டங்கள் மக்களவை கூட்டங்களைப் போல் அல்லாமல் தொடர்ச்சியாக நடைபெறும்.
- மாநிலங்களவையின் முதல் கூட்டம் மே 13, 1952 அன்று துவக்கப்பட்டது.
இந்தூரில் ஒரே நாளில் 11 லட்சம் மரக்கன்றுகள் நட்டு ‘கின்னஸ்’ சாதனை:
- உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 140 கோடி மரக்கன்றுகள் நடும் ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ முன்னெடுப்பை பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஜூன் 5-ஆம் தேதி தொடங்கினார்.
- பிரதமா் நரேந்திர மோடியின் ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ முன்னெடுப்பின்கீழ் இந்தூா் நகரம் ஒரே நாளில் சுமார் 12 லட்சம் மரக்கன்றுகளை நட்டு ‘கின்னஸ்’ உலக சாதனை படைத்துள்ளது.
- மத்திய பிரதேசத்தின் மாநில முதல்வா் மோகன் யாதவ்.
மகளிர் உரிமைத் தொகை திட்டம்:
- தமிழகத்தில் கலைஞா் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15-இல் தொடங்கப்பட்டது.
- இந்தத் திட்டத்தின் கீழ், 1.16 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ 1,000 வழங்கப்பட்டு வருகிறது.
- பெண்களின் உழைப்புக்கான பொருளாதார மதிப்பை அங்கீகரிக்கவும், விவசாயம், வீட்டு வேலை போன்ற குறைந்த ஊதியம் பெறும் வேலைகளில் ஈடுபட்டுள்ள ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கிடவும் இந்த மாபெரும் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியது.
ஜூலை 16: முக்கிய தினம்
- இந்து விதவை மறுமணச் சட்டம் 1856 ஜூலை 16, 1856 இல் இந்து விதவைகளின் மறுமணத்தை சட்டப்பூர்வமாக்கியது.
- ஜூலை 16: உலக பாம்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
தகவல் துளிகள்:
- இந்தியாவின் புதிய வெளியுறவுத் துறைச் செயலராக விக்ரம் மிஸ்ரி பொறுப்பேற்றார்.
- சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் பாண்டியன் கோட்டையில் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு கண்டறியப்பட்டது.
- ஐரோப்பிய கண்டத்தில் நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் ஆனது.
- தென்அமெரிக்க கண்டத்தில் நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில், ஆா்ஜென்டீனா 16-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.
- யூரோ கோப்பை கால்பந்து தொடரை ஸ்பெயின் 4 வது முறையாக வென்றுள்ளது.