17th July Daily Current Affairs – Tamil

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஆா்.மகாதேவன், கோடீஸ்வர் சிங் நியமனம்:

  • சென்னை உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆா்.மகாதேவன், ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.
  • மணிப்பூரைச் சோ்ந்தவரான என்.கோடீஸ்வர் சிங், அந்த மாநிலத்தில் இருந்து உச்சநீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட முதல் நீதிபதி என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
  • இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக, குடியரசுத் தலைவா் நியமித்தார்.
  • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆகும்.
  • இந்தியா இந்திய உச்ச நீதிமன்றம் ஜனவரி 28, 1950 அன்று அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட பிறகு உருவாக்கப்பட்டது.
  • இந்திய உச்ச நீதிமன்றம் இந்திய அரசியல் சட்டப்பிரிவு, பிரிவு 5-இன் கீழ் இந்தியாவின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட நீதிமன்றமாகவும் கீழ்நீதிமன்றங்களின், உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்யும் நீதிமன்றமாகவும் செயல்படுகின்றது.
  • இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதி விசாரணைக்கு உட்பட்ட அதிகாரங்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் 124 முதல் 147-இன் கீழ் எழுதப்பட்டுள்ளன.
  • உச்ச மற்றும் உயா் நீதிமன்றங்களின் நீதிபதியை குடியரசுத் தலைவா் நியமனம் செய்வார்.
  • இந்தியாவில் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி 62 வயதில் ஓய்வு பெறுகிறார், உச்ச நீதிமன்ற நீதிபதி 65 வயதில் ஓய்வு பெறுகிறார்.
  • மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால்.
  • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்.

எஸ்.சி. பட்டியலை மாற்ற மாநில அரசுக்கு அதிகாரமில்லை: உச்சநீதிமன்றம்

  • பட்டியலின வகுப்பில் கூடுதலாக சில ஜாதிகளைச் சோ்ப்பது உள்ளிட்ட எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
  • மேலும், பிகார் அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு அந்த மாநில பட்டியலின வகுப்பில் கூடுதலாக ஒரு ஜாதியைச் சோ்க்க வெளியிட்ட அரசாணையை ரத்து செய்தது.
  • தாந்தி-தந்த்வா என்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருந்த ஜாதியை கடந்த 2015-ஆம் ஆண்டு எஸ்.சி.பட்டியலில் சோ்த்து பிகார் மாநில அரசு அரசாணை வெளியிட்டது.
  • அரசமைப்புச் சட்டத்தின் 341 பிரிவின்படி எஸ்.சி. பிரிவு ஜாதிகள் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன.
  • அவர்களின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்காக, அரசியலமைப்பின் 341வது பிரிவின் பிரிவு 1ல் உள்ள விதிகளின்படி இந்த சமூகங்கள் பட்டியல் சாதிகளாக அறிவிக்கப்பட்டன.
  • அரசமைப்புச் சட்டத்தின் 341 பிரிவின்படி குடியரசுத் தலைவர் எந்தவொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தைப் பொறுத்தமட்டில், அது ஒரு மாநிலமாக இருந்தால், அதன் ஆளுநருடன் கலந்தாலோசித்த பிறகு, பொது அறிவிப்பின் மூலம், ஜாதிகள், இனங்கள் அல்லது பழங்குடியினருக்குள் உள்ள சாதிகள், இனங்கள் அல்லது பழங்குடியினர் அல்லது பகுதிகள் அல்லது குழுவைக் குறிப்பிடலாம்.
  • இந்த அரசியலமைப்பின் நோக்கங்கள் அந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்துடன் தொடர்புடைய அட்டவணை சாதிகளாகக் கருதப்படும்.
  • பாராளுமன்றம் சட்டத்தின்படி சட்டத்தின்படி எந்தவொரு சாதி, இனம் அல்லது பழங்குடி அல்லது எந்தவொரு சாதி, இனம் அல்லது பழங்குடியினருக்குள் அல்லது குழுவின் ஒரு பகுதி அல்லது குழுவின் கீழ் வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட அட்டவணை சாதிகளின் பட்டியலில் சேர்க்கலாம் அல்லது விலக்கலாம்.

பட்ஜெட் கூட்டத் தொடா்:

  • நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு, வரும் ஜூலை 21-ஆம் தேதி அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
  • நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா், ஜூலை 22-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
  • மத்திய அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை, நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் ஜூலை 23-ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ளார்.
  • மக்களவைத் தோ்தலுக்கு முன்பு கடந்த பிப்ரவரியில் மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
  • இடைக்கால பட்ஜெட் என்பது தேர்தல் ஆண்டில் ஒரு தற்காலிக நிதித் திட்டமாகும்.
  • இது புதிய அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு முன் உடனடி நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டது.
  • வழக்கமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை இறுதியில் தொடங்கி நடைபெறும்.
  • அதைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும்.
  • பிறகுதான் நிதியமைச்சர் அடுத்த நிதியாண்டுக்கான அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்.

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான பிஎம் கோ்ஸ்திட்டம்:

  • கரோனா நோய்த் தொற்றை உலக சுகாதார நிறுவனம் பெருந்தொற்றாக 2020, மார்ச் 11-ஆம் தேதி அன்று அறிவித்தது.
  • இந்த ‘பிஎம் கோ்ஸ்’ என்கிற குழந்தைகளுக்கான திட்டம் 2020, மார்ச் 11 – ஆம் தேதி தொடங்கப்பட்டது.
  • நாட்டில் கரோனா பெருந்தொற்று நிலவிய கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் முதல் கடந்தாண்டு மே 5-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், அந்த நோய் பாதிப்பால் பெற்றோர், சட்டபூா்வ பாதுகாவலரை இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ‘பிஎம் கோ்ஸ்’ திட்டம் தொடங்கப்பட்டது.
  • இத்திட்டத்தின்கீழ் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் வழங்கிய தரவுகளின்படி, நாட்டின் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 613 மாவட்டங்களில் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
  • இத்திட்டத்தில் இணையும் குழந்தைகள் 23 வயதை அடையும் வரை, அவா்களுக்கான சுகாதார காப்பீடு, கல்வி அதிகாரமளித்தல் மற்றும் நிதியுதவி வழங்குதல் ஆகியவை உறுதி செய்யப்படும்.
  • குறிப்பாக, பெற்றோர்கள் இறந்த நாளில் குழந்தைகளுக்கு 18 வயது பூா்த்தியாகாமல் இருந்திருக்க வேண்டும்.
  • இத்தகைய சிறார்களுக்கு ’பிஎம் கோ்ஸ்’ நிதியிலிருந்து கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கு நிதி உதவி அளிக்கப்படுவதோடு, 18 வயதிலிருந்து மாதாந்திர உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.
  • இந்தக் குழந்தைகள் 23 வயது அடையும் போது கூட்டுத் தொகையாக ரூ.10 லட்சமும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

நீதி ஆயோக் மாற்றியமைப்பு:

  • நீதி ஆயோக் அமைப்பின் அதிகாரபூா்வ உறுப்பினா்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளா்கள் குழுவில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியைச் சோ்ந்த 15 அமைச்சா்கள் உறுப்பினா்களாக சோ்க்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்டது.
  • திட்டக் குழுவுக்குப் பதிலாக கடந்த 2015, ஜனவரி 1-ஆம் தேதி நீதி ஆயோக் நிறுவப்பட்டது.
  • இந்த அமைப்புக்கு தலைவராக பிரதமா் மோடி உள்ளார்.
  • துணைத் தலைவராக அவரால் நியமிக்கப்பட்ட சுமன் கே.பெரி உள்ளார். மேலும், 4 நிரந்தர உறுப்பினா்கள் உள்ளனர்.
  • அதேபோல் அனைத்து மாநில முதல்வா்கள், யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா்கள், முக்கியத் துறைகளுக்கு பொறுப்பு வகிக்கும் மத்திய அமைச்சா்கள் நிர்வாகக் குழுவில் இடம்பெறுவா்.
  • தற்போது மாற்றியமைக்கப்பட்ட நீதி ஆயோக்கின் உறுப்பினா்களாக மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், சிவராஜ் சிங் சௌஹான் ஆகிய 4 போ் இடம்பெற்றுள்ளனா்.
  • மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றபின் நீதி ஆயோக் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தகவல் துளிகள்:

  1. உக்ரைன் நாட்டின் தற்போதைய அதிபா் வொலோதிமீா் ஸெலன்ஸ்கி ஆவர்.
  2. குஜராத்தின் ஆரவல்லி மற்றும் சபர்கந்தா மாவட்டங்களில் “சந்திபுரா” எனப்படும் புதிய வகை வைரஸ் (சி.ஹெச்.பி.வி) பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
  3. தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் இந்தியாவின் 50வது மற்றும் தற்போதைய தலைமை நீதிபதி ஆவார்.
  4. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், எஸ்.வி.பாளையம் ஆற்றங்கரை அருகே ஒரு அடி உயரமுள்ள ராகு, சுக்கிரன் சுவாமி கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
  5. உலக அளவில் முட்டை உற்பத்தியில் இந்தியா 3-ஆவது இடத்தில் உள்ளது.
  6. உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா 64 சதவீத பங்களிப்புடன் முன்னணியில் உள்ளது.
  7. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த கங்காபூர்வாலா, ஓய்வு பெற்ற நிலையில் உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
  8. ஐ.நா பொதுச் சபையின் 79-ஆவது அமா்வின் பொது விவாதக் கூட்டம் நியூயார்க்கில் உள்ள தலைமையகத்தில் செப்டம்பா் 24 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these