18th July Daily Current Affairs – Tamil

மு.கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் நினைவு நாணயம்:

  • திமுகவின் முன்னாள் தலைவரும் மறைந்த முன்னாள் தமிழக முதல்வருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் ரூ.100 நினைவு நாணயத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
  • தமிழகத்தில் 5 முறை முதல்வராகவும் 13 முறை சட்டப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினராகவும் இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
  • இந்த நாணயத்தின் ஒரு பக்கம் சிங்கத்தின் தலையுடன் கூடிய அசோக தூண், “சத்யமேவ ஜெயதே’, “பாரத்’ ஆகிய வார்த்தைகள் தேவநாகரி எழுத்திலும் “இந்தியா’ என ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும்.
  • மறுபக்கம் நாணயத்தின் மையத்தில் “கலைஞர் எம். கருணாநிதி’ உருவப்படமும், கீழே அவர் பயன்படுத்திய “தமிழ் வெல்லும்’ என்ற வாசகமும் இடம் பெறுகிறது.
  • கலைஞர் எம்.கருணாநிதி பிறந்த நூற்றாண்டு’ (1924-2024) என தேவநாகரி எழுத்திலும், ஆங்கிலத்திலும் இடம்பெறும்.
  • சுமார் 35 கிராம் எடை கொண்ட இந்த ரூ.100 நாணயத்தில் 50 சதவீதம் வெள்ளியும், 40 சதவீதம் தாமிரமும், நிக்கல் மற்றும் துத்தநாகம் முறையே தலா 5 சதவீதமும் கலந்திருக்கும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • இதன் விலை ரூ.2,500 என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

குஜராத்: சண்டிபுராவைரஸ்

  • குஜராத்தின் சபா்கந்தா, ஆரவல்லி, மஹிசாகா், ராஜ்கோட் உள்ளிட்ட மாவட்டங்களில் ‘சண்டிபுரா’ வைரஸ் பரவி வருகிறது.
  • கொசு உள்ளிட்ட சில பூச்சிகளின் மூலம் பரவும் இந்த வைரஸ், ஃபுளூ போன்ற அறிகுறிகளுடன் கடுமையான மூளையழற்சியை ஏற்படுத்துவதாகும்.
  • சண்டிபுரா வைரஸ் காய்ச்சல், உடல்வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் கடுமையான மூளையழற்சி போன்ற அறிகுறிகளுடன் காய்ச்சலை ஏற்படுத்துகிறது.
  • நோய்க்கிருமி ராப்டோவிரிடே குடும்பத்தின் வெசிகுலோவைரஸ் இனத்தைச் சேர்ந்தது. இது கொசுக்கள், உண்ணிகள் மற்றும் மணல் ஈக்கள் உள்ளிட்ட நோய்க்கிருமிகளால் பரவுகிறது.
  • மகாராஷ்டிர மாநிலம், புணேயில் தேசிய வைராலஜி நிறுவனம் உள்ளது.

வெம்பக்கோட்டை அகழாய்வில் முழு வடிவ சங்கு:

  • வெம்பக்கோட்டை மூன்றாம் கட்ட அகழாய்வில் சங்கு வளையல் தயாரிக்க பயன்படுத்திய முழு வடிவ சங்கு கண்டறியப்பட்டது.
  • விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டு நுண் கற்காலத்தை அறியும் வகையில், வைப்பாற்றின் வடகரையில் மேட்டுகாடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது.
  • கண்ணாடி மணிகள், கல்மணிகள், பழங்கால சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப் பகுதி, கி.பி.16 -ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நாயக்கா் கால காசு, அணிகலன்கள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பொருள்கள் ஏற்கெனவே கண்டறியப்பட்டன.
  • இங்கு சங்கு வளையல் தயாரிப்பு தொழில்கூடம் இருந்ததை 2-ஆம் கட்ட அகழாய்வில் உறுதி செய்யப்பட்டது.

பி.எம்.ஸ்ரீதிட்டம்:

  • மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ் உள்ள ’பி.எம். ஸ்ரீ’ திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளிகளும் கொண்டு வரப்பட்டு அதன் உள்கட்டமைப்பு உள்ளிட்ட கல்விச் செயல்பாடுகள் அனைத்தும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
  • இந்தத் திட்டத்தின் பலனை பெறுவதற்கு மத்திய கல்வி அமைச்சகத்துடன், அந்தந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
  • பி.எம்.ஸ்ரீ’ திட்டத்தில் இணையாததால் தமிழகத்துக்கு ரூ.2,000 கோடி மத்திய நிதி நிறுத்திவைத்துள்ளது.
  • ‘பி.எம்.ஸ்ரீ’(பிரதான் மந்திரி ஸ்கூல்ஸ் ஃபார் ரைசிங் இந்தியா) திட்டம், நாடு முழுவதும் உள்ள சுமார் 14,500 பள்ளிகளின் தரம் உயர்த்துதல் மற்றும் மேம்பாட்டிற்கான மத்திய அரசின் நிதியுதவி திட்டமாகும்.
  • மத்திய அரசு, மாநில அரசு,உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் பள்ளிகளில் இருந்து பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படும்.
  • செப்டம்பர் 5, 2022 ஆசிரியர் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி PM – SHRI என்ற புதிய முயற்சியை அறிவித்தார்.
  • இந்த திட்டத்தின் நோக்கம் தரமான கற்பித்தல், கற்றல் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியை வழங்குவதாகும்.

ஜூலை 17: சர்வதேச நீதிக்கான உலக தினம்

  • ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17 அன்று சர்வதேச நீதிக்கான உலக தினம் அனுசரிக்கப்படுகிறது. இது சர்வதேச குற்றவியல் நீதி தினம் அல்லது சர்வதேச நீதி தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • சர்வதேச நீதிக்கான உலக தினம் 2024 – ன் கருப்பொருள்: “தடைகளை சமாளித்தல் மற்றும் சமூக நீதிக்கான வாய்ப்புகளை கட்டவிழ்த்தல்” ஆகும்.

ஜூலை 18: சர்வதேச நெல்சன் மண்டேலா தினம்

  • ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 18 அன்று சர்வதேச நெல்சன் மண்டேலா தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • நெல்சன் மண்டேலா தினம் முதன்முறையாக 2010 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.

தகவல் துளிகள்:

  1. புதுச்சேரியில் தேசிய நெல் திருவிழா மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது.
  2. அக்னிபத் திட்டத்தில் பணியாற்றி விட்டு திரும்பும் வீரா்களுக்கு மாநில காவல் துறையில் 10% இடஒதுக்கீடு சலுகைகள் ஹரியாணா மாநில அரசு அறிவித்துள்ளது.
  3. கர்நாடகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் 100 சதவிகிதம் கன்னட மக்களுக்கு கட்டாய இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அம்மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  4. சர்வதேச தரவுகளின்படி, உலகின் மிகப் பெரிய ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் சீனா ஆகும்.
  5. சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் 20-ஆவது ஆண்டு நிறைவு விழா ஜூலை 20 இல் நடைபெறுகிறது, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த 2004- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  6. தமிழ் நாட்டில் கரூரில், ரூ1 கோடியில் கைத்தறி நெசவுப் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
  7. தென்மண்டல காவல் துறை தலைவராக பிரேம் ஆனந்த் சின்கா பொறுப்பேற்றார்.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these