இந்தியாவின் யூரியா இறக்குமதியில் 25% சீனாவின் பங்களிப்பு:
- இந்தியாவின் மொத்த யூரியா இறக்குமதியில் 25 சதவீதத்துக்கு மேல் சீனாவின் பங்களிப்பாக உள்ளது.
- இந்தியாவில் உரத்தின் உற்பத்தியைவிட தேவை அதிகம் இருப்பதால் இறக்குமதியை சார்ந்திருக்க வேண்டியுள்ளது.
- உரத் துறை மூலம் வேளாண்மை பயன்பாட்டுக்காக 2023-24 நிதியாண்டில் மொத்தம் 42 லட்சம் டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
- இதில் 65 லட்சம் டன் (25 சதவீதத்துக்கு மேல்) சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
- பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரம் 53 லட்சம் டன் இறக்குமதியாகியுள்ளது.
- இந்தியாவில் யூரியா உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
- இந்தியாவில் சராசரி உரப் பயன்பாடு ஒரு ஹெக்டோ் விவசாய நிலத்துக்கு 140 கிலோவாக உள்ளது.
- அதே நேரத்தில் பஞ்சாபில் மட்டும் உரப் பயன்பாடு ஹெக்டேருக்கு 61 கிலோவாக உள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டம் 2002:
- பணமோசடி தடுப்புச் சட்டம் 2002 என்பது பணமோசடி செய்வதைத் தடுக்கவும், பணமோசடி மூலம் பெறப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்யவும் NDA அரசாங்கத்தால் இயற்றப்பட்ட இந்திய நாடாளுமன்றத்தின் சட்டமாகும்.
- பணமோசடி தடுப்புச் சட்ட விதிகள் 1 ஜூலை 2005 முதல் நடைமுறைக்கு வந்தன.
- சட்டம் மற்றும் விதிகள் வங்கி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் இடைத்தரகர்கள் வாடிக்கையாளர்களின் அடையாளத்தை சரிபார்க்கவும், பதிவுகளை பராமரிக்கவும் மற்றும் தகவல்களை வழங்கவும் கடமைப்பட்டுள்ளன.
- இந்தச் சட்டம் ஜனவரி 2003 இல் ஒப்புதல் அளிக்கப்பட்டது மற்றும் ஜூலை 2005 இல் நடைமுறைக்கு வந்தது.
- இது 2005, 2009 மற்றும் 2012 இல் மூன்று முறை திருத்தப்பட்டது.
கூட்டு போர்ப் பயிற்சி “தரங் சக்தி’:
- இந்தியா, ஸ்பெயின், பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளின் விமானப்படை கூட்டு போர்ப் பயிற்சி “தரங் சக்தி’ என்ற பெயரில் கோவை மாவட்டம், சூலூரில் தொடங்கியது.
- இந்தப் பயிற்சி ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
- இதில் பிரான்ஸின் ரஃபேல், ஐரோப்பிய டைஃபூன், இந்தியாவின் தேஜஸ், எஸ்.யு 30 சுகோய் உள்ளிட்ட விமானங்கள் இடம்பெற்றுள்ளன.
- 61 – ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இத்தகைய பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.
- பல்வேறு நாட்டு வீரர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தவும் விமானப்படையில் தற்போதுள்ள அதிநவீன தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொள்ளவும் இந்தப் பயிற்சி உதவும்.
ஆகஸ்ட் 7: தேசிய கைத்தறி தினம்
- நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்களை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
- தேசிய கைத்தறி தின 2024 கருப்பொருள்: கைத்தறி நெசவில் தொழில்நுட்பம் மற்றும் புதுமையின் ஒருங்கிணைப்பு, திறன் மேம்பாடு மற்றும் நெசவாளர்களுக்கான சந்தை அணுகலை விரிவுபடுத்துதல் ஆகியவற்றை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தகவல் துளிகள்:
- ஆயுதப் படை வீரா்களின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை அதிகரிக்கும் கண்டுப்பிடிப்பாக மின்சாரம் தயாரிக்கும் மற்றும் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய பிரத்யேக காலணிகளை இந்தூா் ஐஐடி வடிவமைத்துள்ளது.
- சர்வதேசப் போட்டியில் உலகின் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் மல்யுத்த வீராங்கனை யூ சுசாகியை வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற பெருமையை இந்தியாவின் மல்யுத்த வீராங்கனைவினேஷ் போகத் பெற்றார்.
- நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று கொல்லிமலை,இங்கு 50 அடி உயர புதிய தொலைநோக்கி கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது.
- திருச்சி அருகே 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ‘தலைப்பலி’ சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
- கோவை மாநகராட்சி மேயராக ரங்கநாயகி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 5 -வது மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது, திட்டக்குழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் ஆவார்.
- ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யேஹ்யா சின்வா் தோ்ந்தெடுக்கப்பட்டார்.
- குடியரசுத் தலைவா் முா்முக்கு ஃபிஜி நாட்டின் உயரிய விருதான ‘கம்பானியன் ஆஃப் தி ஆா்டா் ஆஃப் ஃபிஜி’ என்ற விருது வழங்கப்பட்டது.
- ஃபிஜி நாட்டின் அதிபா் கேடோனிவிர்.
- வங்கதேசத்தில் புதிதாக அமையவிருக்கும் இடைக்கால அரசுக்கு நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் கான் தலைமையில் புதிய அரசு அமைய உள்ளது.
- பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் நடைபெற்ற ஆடவருக்கான 100 மீட்டா் ஓட்டத்தில் அமெரிக்காவின் நோவா லைல்ஸ் தங்க பதக்கம் வென்றார்.