9th August Daily Current Affairs – Tamil

போக்ஸோ சட்டம்: ‘உதவி நபா்’ நியமனம்

  • போக்ஸோ வழக்கில் கடந்த ஆண்டு தீா்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ‘குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் உண்மையான நீதி என்பது குற்றவாளியைக் கைது செய்வதாலோ அல்லது தண்டனையின் தீவிரத்தினாலோ கிடைக்காது.
  • பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும் ஆதரவு மற்றும் பாதுகாப்பு கிடைக்கச் செய்வதன் மூலமே கிடைக்கும்.
  • அந்த வகையில், போக்ஸோ சட்டம் 2020-இன் விதி 12 முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த உரிய வழிகாட்டு நடைமுறை வகுக்கப்பட வேண்டும்.
  • போக்ஸோ சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட குழந்துகளுக்கு வழக்கு விசாரணைகளில் உதவ குழந்தைகள் நலக் குழு சார்பில் ‘உதவி நபா்’ ஒருவரை நியமிக்க மத்திய அரசும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான ஆணையமும் வகுக்க வேண்டும்’ என உத்தரவு பிறப்பித்தது.
  • இந்த உத்தரவுப்படி, உரிய வழிகாட்டு நடைமுறையை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான ஆணையம் வகுத்தது.
  • பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான குழந்தைகளுக்கு சட்டரீதியாக உதவுவதற்கான நபரை நியமனம் செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளுக்குமாறு மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
  • 1992 – ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தை உரிமைகள் மாநாட்டை இந்தியா அங்கீகரித்ததன் விளைவாக 2012 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி POCSO சட்டம் நடைமுறைக்கு வந்தது.
  • இந்தச் சிறப்புச் சட்டத்தின் நோக்கம், குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் போன்ற குற்றங்களை நிவர்த்தி செய்வதாகும்.

பிரதமரின் வேலைவாய்ப்பு உத்தரவாத உறுதித்திட்டம்: ஜம்மு – காஷ்மீா் முதலிடம்

  • நாட்டிலேயே பிரதமரின் வேலைவாய்ப்பு உத்தரவாத உறுதித்திட்டப் பலன்களை பெற்ற மாநிலங்கள் வரிசையில் அதிகபட்சமாக ஜம்மு – காஷ்மீரூம், தமிழகமும் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • குறைந்தபட்சமாக புதுச்சேரியிலும், சண்டீகரிலும் வேலைவாய்ப்புப் பலன்களைப் பெற்றுள்ளனா்.
  • லட்சத்தீவில் ஒருவா் கூட இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
  • பிரதமந்திரியின் வேலைவாய்ப்பு திட்டம் என்பது பிரதம மந்திரி ரோஸ்கார் யோஜனா திட்டம் (PMRY) மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் (REGP) ஆகிய இரண்டையும் இணைத்து, 2008 ஆகஸ்டு ஆண்டு 15ம் தேதியன்று உருவாக்கப்பட்டது.
  • சிறு தொழில் மூலம் சுய வேலை வாய்ப்பை கிராமப்புறங்களிலும், நகர்புறங்களிலும் உருவாக்குதல்.
  • பாரம்பரிய தொழில்முனைவோர், கிராமப்புற/ நகர்ப்புறங்களில் வசிக்கும் வேலையில்லாதவர்களை ஒருங்கிணைத்து, முடிந்த வரை அவர்களது இடத்திலேயே சுய வேலைவாய்ப்பை உருவாக்கி தருதல்.
  • கிராமப்புற, நகர்ப்புற, பாரம்பரிய தொழில்முனைவோருக்கு தொடர்ந்து, நிரந்தரமாக வேலை வழங்குவதன் மூலம், வேலை இல்லா இளைஞர்கள் நகர்புறங்களுக்கு குடி பெயர்வதைத் தடுத்தல்.
  • பாரம்பரிய தொழில்முனைவோர்களின் வருமானம் ஈட்டும் திறமையை உயர்த்துவதன் மூலம், கிராமப்புற, நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பு அதிகரிக்கச் செய்தல் போன்ற நோக்கங்களை கொண்டது.

பாரீஸ் ஒலிம்பிக்: நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளி, ஹாக்கி அணிக்கு வெண்கலம்

  • பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனும், உலக சாம்பியனுமான இந்திய வீரா் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • கடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நிலையில், இந்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் வெள்ளிப் பதக்கம் இது ஆகும்.
  • இந்திய ஆடவா் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
  • பாகிஸ்தானின் அா்ஷத் நதீம் 97 மீட்டா் எறிந்து, ஒலிம்பிக் சாதனையுடன் தங்கம் வென்றார், கிரெனாடாவின் ஆண்டா்சன் பீட்டா்ஸ் வெண்கலம் வென்றார்.

ஆகஸ்ட் 9: வெள்ளையனே வெளியேறு இயக்க நாள்

  • ஆகஸ்ட் 8, 1942 அன்று பம்பாயில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ‘வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை’ தொடங்கினார்.
  • இது ஆகஸ்ட் இயக்கம் அல்லது ஆகஸ்ட் கிராந்தி என்றும் அழைக்கப்படுகிறது.

ஆகஸ்ட் 9 – நாகசாகி தினம்

  • ஆகஸ்ட் 9, 1945 அன்று நாகசாகியில் ஜப்பான் மீது அமெரிக்கா இரண்டாவது குண்டை வீசியது, மேலும் அந்த வெடிகுண்டு ‘ஃபேட் மேன்’ என்றும் அழைக்கப்படுகிறது.
  • ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு அது கைவிடப்பட்டது.

ஆகஸ்ட் 9: உலக பழங்குடி மக்களின் சர்வதேச தினம்

  • பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் குறித்த ஐ.நா.வின் செய்தியை உலகெங்கிலும் உள்ள மக்களை ஊக்குவிக்க ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி உலகப் பழங்குடி மக்களின் சர்வதேச தினம் கொண்டாடப்படுகிறது.

தகவல் துளிகள்:

  1. 2024 – 25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
  2. ஆகஸ்ட் 15-ஆம் தேதி புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-08 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது, அதில் உள்ள ஆய்வுக் கருவிகள் பேரிடா் மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்புக்கு உதவுவதுடன், இரவிலும் துல்லியமான படங்கள் எடுக்க வழிவகுக்கும்.
  3. பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தைத் வென்றார்.
  4. வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்), தொடா்ந்து 9-ஆவது முறையாக மாற்றமில்லாமல் 50 சதவீதமாக தொடா்கிறது என இந்திய ரிசா்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
  5. கடலூா் மாவட்டம், சிதம்பரம் அடுத்த புவனகிரி வெள்ளாற்றிலிருந்து 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த துா்கை அம்மன் கல் சிலை கண்டெடுக்கப்பட்டது.
  6. கல்லூரி மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ1,000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 9 தொடங்கி வைக்கிறார்.
  7. அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பழனியில் உள்ள பழனி ஆண்டவா் கல்லூரியில் ஆகஸ்ட 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
  8. வங்கதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் (84) பொறுப்பேற்றார்.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these