15, 16 & 17th October Daily Current Affairs – Tamil
Gurukulam IAS
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பெயரை தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பரிந்துரைத்தார்.
இந்தியாவுக்கான மாலத்தீவு தூதராக இருந்த இப்ராஹிம் சாஹிப்புக்கு பதிலாக புதிதாக ஐஷத் அசீமா நியமிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள 110 கிராமங்களுக்கு காவிரி குடிநீா் வழங்கும் திட்டத்தை கர்நாடகா முதல்வா் சித்தராமையா தொடங்கி வைத்தார்.
90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணா மாநில முதல்வராக நாயப் சிங் சைனி இரண்டாவது முறையாக தோ்வு செய்யப்பட்டார்.
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் முதலாவது முதல்வராக ஒமா் அப்துல்லா பதவியேற்றார், துணை முதல்வராக சுரீந்தா் செளதரி நியமிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகத்துக்கு தொழிலதிபர் ரத்தன் டாடாவின் பெயரை வைக்க மகாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அல்ஜீரியா அதிபா் அப்தெல்மத்ஜித் டெபோன்.
சுகாதாரம், வேளாண்மை, நீடித்த நகரங்கள் போன்றவற்றில் செயற்கை நுண்ணறிவு தொடா்பான 3 திறன் மேம்பாட்டு மையங்களை மத்திய கல்வித்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தில்லியில் தொடங்கி வைத்தார்.
சா்வதேச தொலைத்தொடா்பு சங்கத்தின் ‘உலக தொலைத்தொடா்பு தரநிலைப்படுத்துதல் மாநாடு’மற்றும் ‘இந்திய மொபைல் காங்கிரஸ்’ அமைப்பின் 8 – ஆவது சா்வதேச மாநாடு தில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் பிரதமா் மோடி தொடங்கி வைத்தார்.
ஐசிசியின் வாழ்நாள் சாதனையாளர் பட்டியலில் ஏபி டிவில்லியர்ஸ், அலைஸ்டர் குக் ஆகியோர் இணைந்துள்ளனர்.
வங்கதேசத்தில் எட்டு தேசிய தினங்கள் ரத்து செய்யப்படுவதாக புதிய இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
உலகிலேயே பணக்கார நகரமாக அபு தாபி 1.7 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீட்டு நிதிகளைப் பெற்று உலக அளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
வியாழன் கிரகத்தைச் சுற்றிவரும் ‘யுரோப்பா’ நிலவில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக விண்கலம் ஒன்றை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பியுள்ளது, ‘யுரோப்பா க்ளிப்பா்’என்று பெயரிடப்பட்டுள்ள அந்த விண்கலம், வியாழன் கிரகத்தை அடைவதற்கு ஐந்தரை வருடங்கள் ஆகும்.