24th October Daily Current Affairs – Tamil

தொழிலக எரிசாராயத்தை முறைப்படுத்தும் அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு: உச்சநீதிமன்றம்

  • தொழிலக எரிசாராய உற்பத்தி மற்றும் விநியோகத்தை முறைப்படுத்தும் அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.
  • அரசமைப்பு சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் மாநில பட்டியலின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ‘போதை மது’ என்ற சொற்றொடரின் வரம்புக்குள் ‘தொழிலக எரிசாராயம்’ என்பதும் அடங்கும்’ என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.
  • தொழிலக வடிவ ‘எத்தில் ஆல்கஹால்’ என்பது 95 சதவீதம் எத்தனாலை உள்ளடக்கிதாகும்.
  • மதுவில் இந்த ‘எத்தில் ஆல்கஹால்’ மூலப்பொருள்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
  • அரசமைப்பு சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் மாநில பட்டியலின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள 8-ஆவது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள ‘போதை மது’ என்ற சொல்லில், பொதுமக்களின் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் அனைத்து வகையான மது பானங்களும், மது உற்பத்திக்கான மூலப் பொருள்களும் உள்ளடங்கும்.
  • தொழிலக எரிசாராயம் (தொழிலக ஆல்கஹால்) என்பதும் இதில் அடங்கும்.
  • எத்தில் ஆல்கஹால் அல்லது எத்தனாலுக்கான சூத்திரம் CH 3 CH 2 OH ஆகும்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்: (ICDS)

  • இந்தியாவில் 6 முதல் 23 மாத வரையிலான குழந்தைகளில் 77 சதவீதம் பேருக்கு உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்தபடி சரிவிகித உணவு கிடைப்பதில்லை என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
  • ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில் 6 வயது வரையிலான குழந்தைகள், வளர்இளம் பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்கான திட்டமாகும்.
  • 1975 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியின் 106 வது பிறந்தநாளில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் பேரின் 33 வட்டாரங்கள் முதன்முறையாக தொடங்கப்பட்டது.
  • 2016-2017 நிதியாண்டில் இந்திய அரசு மறுசீரமைக்கப்பட்ட ICDS -யை ஒரு குடையின் கீழ் திட்டமாக மாற்றியது. இந்திய அரசு 2017 ஆம் ஆண்டில், தேசிய ஊட்டச்சத்து குழுமம் (NNM), பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY), மற்றும் ஒரு குடையின் கீழ் ICDS -யில் உள்ளடக்கியது.
  • பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) – பொது சுகாதாரத்துறை இயக்குநர் மற்றும் தடுப்பு மருந்து மூலம் 2018-2019 முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • இந்திய அரசால் 1975-ல், குழந்தைகளின் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்த்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் தொடங்கப்பட்டது.
  • ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் (ICPS) என்பது மத்திய அரசு நிதியுதவி திட்டமாகும்.
  • இத்திட்டதில் கடுமையான மற்றும் பிரச்சனையான சூழ்நிலைகளில் உள்ள குழந்தைகளுக்கான பாதுகாப்பு சூழலை உருவாக்குவதே ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டதின் நோக்கமாகும்.

படேலின் 150-ஆவது பிறந்தநாள்:

  • படேல், குஜராத்தின் நாடியாட் பகுதியில் கடந்த அக்டோபா் 31, 1875 – ஆம் ஆண்டு பிறந்தார்.
  • இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் இருந்த அவா், 550 – க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இந்திய ஒன்றியத்துடன் இணைத்த பெருமைக்குரியவா்.
  • நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் படேலின் அா்ப்பணிப்பை வெளிக்காட்டும் வகையில் மத்திய அரசு கடந்த 2014 – ஆம் ஆண்டு முதல் அவரது பிறந்த நாளை ‘ராஷ்ட்ரீய ஏக்தா திவாஸ்’ அல்லது தேசிய ஒருமைப்பாட்டு தினமாகக் கடைப்பிடித்து வருகிறது.
  • சா்தார் வல்லபபாய் படேலின் 150 – ஆவது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு நாடு தழுவிய பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

5 சீன பொருள்களுக்கு இறக்குமதி குவிப்பு தடுப்பு வரி:

  • இந்தியாவில் குறைந்த விலையில் அளவுக்கு அதிகமாக குவிக்கப்பட்டு வந்த கண்ணாடி, செல்லோபேன் டிரான்ஸ்பரன்ட் ஃபிலிமின், ஐசோபிரைல் ஆல்கஹால் (கிருமி நாசினி), சல்பா் பிளாக், தொ்மோபிளாஸ்டிக் பாலியூரிதீன் ஆகிய 5 சீனபொருள்களுக்கு ‘இறக்குமதி குவிப்பு தடுப்பு வரி’ விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
  • சீனா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து குறைந்த விலையில் பொருள்கள் இந்தியாவுக்குள் குவிக்கப்படுகின்றன.
  • இதனால் உள்நாட்டு உற்பத்தியாளா்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா்.
  • இதைத் தடுக்கும் நோக்கத்தில் குறிப்பிட்ட பொருள்கள் மீது மத்திய அரசு இறக்குமதி குவிப்பு தடுப்பு வரி விதிக்கிறது.
  • பொருள் குவிப்பு தடுப்பு வரி என்பது தங்கள் பொருட்களை நியாயமான சந்தை விலைக்கு குறைவாக விற்று , உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வெளிநாட்டு நிறுவனங்கள் மீது அரசாங்கம் கூடுதல் விதிக்கும் கூடுதல் பாதுகாப்பு சுங்க வரி ஆகும் .
  • உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கவும் , சந்தையில் ஏகபோகத்தைத் தடுக்கவும் , வர்த்தக நிலைத்தன்மையை ஏற்படுத்தவும் இத்தகைய வரி விதிக்கப்படுகிறது.

தில்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த செயற்கை மழையை ஏற்படுத்த கோரிக்கை:

  • செயற்கை மழை என்பது வளிமண்டலத்தில் இருக்கின்ற மேகங்கள், மழை பெய்ய வேண்டும் என்று நினைக்கின்ற இடத்திற்கு நேர் மேலே வரும்போது வேதிப்பொருட்களை தூவி மழை மேகங்களாக்கி மழை பெய்ய செய்வதாகும்.
  • இந்த செயற்கை மழையை உருவாக்குவதற்கு மேகவிதைப்பு (Cloud seeding) எனும் முறை கையாளப்படுகிறது.
  • இந்த முறையில் சில்வர் அயோடைடு, சோடியம் குளோரைடு, பொட்டாசியம் அயோடைடு, போன்ற வேதிப்பொருள்கள், துகள் வடிவில் எடுத்துச் செல்லப்பட்டு மேகங்களின் மீது தூவப்படுகின்றன.
  • இந்தத் துகள்கள் ஒரு பிடிமானமாகச் செயல்பட்டு, மழைத்துளிகளை ஒன்றிணைக்கின்றன.
  • வேதிப்பொருள்கள், ஒரு விமானத்தின் கீழ்ப்பகுதியில் கட்டப்பட்டு, மேகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கே பரப்பப்படுகின்றன.
  • சிறு சிறு ராக்கெட்டுகளின் உதவியுடன், இந்த வேதிப்பொருள்கள் மேகங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே பரப்பப்படுகின்றன.
  • பெரிய பெரிய மலைப்பகுதிகளில் சிறிய கோபுரங்கள் (towers) அமைக்கப்படுகின்றன.
  • அவற்றில் இந்த வேதிப்பொருள்கள், சேமித்து வைக்கப்படுகின்றன.
  • மழை மேகங்கள் அருகில் வரும்போது இந்த கோபுரங்களிலிருந்து, வேதிப்பொருள்கள் வெளியேற்றப்படுகின்றன.

அக்டோபர் 24: ஐக்கிய நாடுகள் தினம்

  • ஐநா சாசனம் அமலுக்கு வந்ததன் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24 அன்று ஐக்கிய நாடுகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

அக்டோபர் 24: உலக வளர்ச்சி தகவல் தினம்

  • வளர்ச்சிப் பிரச்சனைகள் மற்றும் அவற்றைத் தீர்க்க சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உலகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24 அன்று உலக வளர்ச்சித் தகவல் தினம் கொண்டாடப்படுகிறது.

தகவல் துளிகள்:

  1. இரு நாடுகளின் மீனவா் பிரச்னை தொடா்பாக, இந்தியா-இலங்கை அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டுப் பணிக் குழுக் கூட்டம் அக்டோபர் 29 – ஆம் தேதி நடைபெறவுள்ளது.
  2. பேறு கால இறப்புகளைத் தவிர்க்க ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவ மையங்களில் சிகிச்சை வழங்க மக்கள் நல்வாழ்வுத் துறை நடைமுறைப்படுத்தியுள்ளது.
  3. என்எல்சி சுரங்கங்களுக்கு நட்சத்திர மதிப்பீட்டு விருது, நிலக்கரி அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது.

 

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these