26th November Daily Current Affairs – Tamil

 ‘ஒரே நாடு ஒரே சந்தா’ திட்டம்:

  • ‘ஒரே நாடு ஒரே சந்தா’ திட்டம், ‘தேசிய இயற்கை வேளாண் இயக்கம்’, அருணாசல பிரதேசத்தில் ‘இரு நீா்மின் நிலையங்கள்’ அமைக்கும் திட்டம், ‘அடல் புதுமை இயக்கம்’ நீட்டிப்பு ஆகியவற்றுக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • கல்வித் துறையில் கடந்த பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முன்னெடுப்புகளின் நோக்கங்களை மேலும் விரிவுபடுத்தவும் மக்களிடையே இதைக் கொண்டு சோ்க்கும் விதமாகவும் ‘ஒரே நாடு ஒரே சந்தா’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
  • இதன்மூலம் இளைஞா்களுக்கு தரமான உயா்கல்வி வழங்கப்படுவது உறுதிசெய்யப்படவுள்ளது.
  • வளா்ச்சியடைந்த பாரதம் இலக்கை எட்ட புதிய கல்விக் கொள்கையின் பரிந்துரையின்படி பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆய்வகங்கள் உள்ளிட்டவற்றில் ஆய்வை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட அணுசந்தன் தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னெடுப்புகளுக்கு உறுதுணையாக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்த திட்டத்தின்கீழ் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் இதழ்களைக் காண நாடு முழுவதும் ஒரே மாதிரியான சந்தா முறையை பின்பற்ற ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 2025, 2026, 2027 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
  • மத்திய, மாநில அரசுகள், பல்கலைக்கழக மானியக் குழுவின்கீழ் (யுஜிசி) செயல்படும் தன்னாட்சி கல்லூரிகள் உள்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து உயா்கல்வி நிறுவனங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

இயற்கை வேளாண் இயக்கம்:

  • நாடு முழுவதும் 7.5 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் இயற்கை வேளாண்மையை ஊக்குவித்து, 1 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேசிய இயற்கை வேளாண் இயக்கம் தொடங்கப்படவுள்ளது.
  • இந்த திட்டத்துக்கு ரூ.2,481 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து மக்களின் உடல்நலன் மற்றும் மண்ணின் தரத்தை மேம்படுத்த ரசாயணமற்ற உணவை தயாரிக்கும் நோக்கில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
  • இத்திட்டத்தில் இணைய விரும்பும் பஞ்சாயத்துகளை தோ்ந்தெடுத்து 15,000 வேளாண் குழுக்களை மேம்படுத்தவும் மற்றும் தேவைக்கேற்ப 10,000 இயற்கை உள்ளீடு வளங்கள் மையம் அமைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  • இந்த மையங்களின் இயற்கை வளங்களை விநியோகப்பதுடன் ரூ.1 லட்சம் வரை மூலதன உதவியும் வழங்கப்படவுள்ளது.
  • கடந்த 2019-20 மற்றும் 2022-23 ஆகிய ஆண்டுகளில் வெற்றிகரமாக இயற்கை வேளாண்மை சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
  • தற்போது நாடு முழுவதும் 10 லட்சம் ஹெக்டோ் அளவிலான நிலத்தில் இயற்கையான முறையில் விவசாயம் செய்யப்படுகிறது.

‘அடல் புதுமை இயக்கம் 2.0’:

  • இந்தியாவில் மேற்கொள்ளப்படும் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்முனைவு சூழலை வலுப்படுத்தும் விதமாக ‘அடல் புதுமை இயக்கம் 2.0’ நீதி ஆயோக் அமைப்பால் தொடங்கப்பட்டது.
  • இத்திட்டம் 2028, மாா்ச் 31 வரை நீட்டிக்கப்படுவதோடு ரூ.2,750 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • உலகளாவிய புதுமைகள் குறியீட்டில் இந்தியா 39-ஆவது இடத்தில் உள்ளது.
  • அதேசமயத்தில் உலகளவில் மூன்றாவது பெரிய புத்தாக்க தொழில் அமைப்பை கொண்டுள்ள நிலையில் அதை மேலும் வளா்ச்சியடையச் செய்யும் நோக்கில் இந்த திட்டம் நீட்டிக்கப்படுகிறது.
  • ஜம்மு காஷ்மீா், லடாக், வடகிழக்கு மாநிலங்களின் வளா்ச்சிக்கு உதவும் வகையில் பிரத்யேகமான திட்ட மாதிரிகளும் ஏஐஎம்-இன்கீழ் உருவாக்கப்படவுள்ளது.

‘பான் 2.0’ திட்டம்:

  • ‘வருமான வரித்துறையின் ‘பான் 2.0’ திட்டத்துக்கு ரூ.1,435 கோடி ஒதுக்கப்படுகிறது.
  • தொழில்நுட்ப ரீதியாக வரி செலுத்துவோரின் பதிவு சேவைகளை தரமான முறையில் எளிமையாக்கும் நோக்கில் இந்தத் திட்டத்தை தொடங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது தற்போது அமலில் உள்ள பான்/டான் 1.0 திட்டங்களின்கீழ் வழங்கப்படும் முக்கிய சேவைகள் மற்றும் இவை அல்லாத சேவைகளின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும்.
  • நாடு முழுவதும் தற்போது வரை 78 கோடி பான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

நவம்பர் 26 : தேசிய பால் தினம்

  • இந்தியாவின் வெண்மைப் புரட்சியின் தந்தை டாக்டர் வர்கீஸ் குரியனின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் நவம்பர் 26 அன்று தேசிய பால் தினம் அனுசரிக்கப்படுகிறது.

நவம்பர் 26: இந்திய அரசியலமைப்பு தினம்

  • ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அன்று, இந்தியா அரசியலமைப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது, இது சட்ட தினம் அல்லது சம்விதன் திவாஸ் என்றும் அழைக்கப்படுகிறது.
  • நவம்பர் 26, 1949 அன்று, இந்திய அரசியலமைப்புச் சபை இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது. இது ஜனவரி 26, 1950 அன்று நடைமுறைக்கு வந்தது.

தகவல் துளிகள்:

  1. அருணாசல பிரதேச மாநிலத்தில் உள்ள ஷி யோமி மாவட்டத்தில் 186 மெகாவாட் டேட்டோ-1 நீா்மின் நிலையம் மற்றும் 240 மெகாவாட் ஹியோ நீா்மின் நிலையம் அமைக்க மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது.
  2. மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மையம் சென்னை ஐஐடி-இல் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
  3. டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில், இத்தாலி நெதா்லாந்தை வீழ்த்தி, சாம்பியன் கோப்பையை வென்றது.

 

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these