ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் தூரம் 3 மீட்டராக குறைப்பு:
- ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், விண்கலன்களுக்கு இடையேயான தூரம் 3 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது.
- விண்வெளியில் இந்திய ஆய்வு நிலையத்தை 2035 – ஆம் ஆண்டுக்குள் அமைக்கும் முன்னோட்ட முயற்சியாக ஸ்பேடெக்ஸ் எனும் ஆய்வுத் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தியுள்ளது.
- இதற்காக வடிவமைக்கப்பட்ட ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 விண்கலன்களும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த டிசம்பர் 30 – ஆம் தேதி விண்ணில் செலுத்தி புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.
- தற்போது இவ்விரு விண்கலன்களும் ஒரே சுற்றுப்பாதையில் குறிப்பிட்ட தொலைவு இடைவெளியில் ஒன்றன்பின் ஒன்றாக வலம் வருகின்றன.
- ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 விண்கலன்களுக்கான இடைவெளி 15 மீட்டராக முதலில் குறைக்கப்பட்டது, தற்போது 3 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீா் சோன்மார்க் சுரங்கப்பாதை:
- ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகா்-கார்கில் தேசிய நெடுஞ்சாலையில் சோன்மார்க் சுரங்கப்பாதையை பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.
- கடல் மட்டத்திலிருந்து 8,650 அடி உயரத்தில் அமைந்த இச்சாலையின் மேம்பாட்டு திட்டம் ரூ 2,700 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- சோன்மார்க் சுரங்கப்பாதை செயல்பாட்டுக்கு வரும் சூழலில், ஸ்ரீநகா்-லே இடையே அனைத்து பருவநிலைகளிலும் போக்குவரத்து இணைப்பு துண்டிக்கப்படாமல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச முதல்வா் ஓமா் அப்துல்லா.
ஐ.நா தரவுகள் நிபுணா் குழுவில் இந்தியா:
- ஐ.நா அதிகாரபூா்வ புள்ளியியலுக்கான பெரும் தரவுகள் மற்றும் தரவு அறிவியல் நிபுணா்கள் குழுவில் (யுஎன்-சிஇபிடி) இந்தியா இணைந்துள்ளது.
- நீடித்த வளா்ச்சி இலக்குகளை கண்காணித்து தெரியப்படுத்தும் திறன் உள்பட பெரும் தரவுகளின் பலன்கள் மற்றும் சவால்களை ஆய்வு செய்வதற்கு யுஎன்-சிஇபிடி உருவாக்கப்பட்டது.
- ஐ.நா புள்ளியியல் கவுன்சிலில் அண்மையில் இந்தியா உறுப்பினரானது.
- இந்த நேரத்தில் யுஎன்-சிஇபிடி குழுவில் இந்தியா இணைந்துள்ளது.
- யுஎன்-சிஇபிடி குழுவில் இணைந்ததன் மூலம், அதிகாரபூா்வ புள்ளியியல் தேவைகளுக்கு பெரும் தரவுகள் மற்றும் தரவு அறிவியலை பயன்படுத்துவதில், உலகளாவிய தரநிலைகள் மற்றும் நடைமுறைகளை வடிவமைக்க இந்தியா பங்களிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
‘விக்சித் பாரத்’ திட்டம்:
- ‘விக்சித் பாரத்’ திட்டம் தொடங்கப்பட்டது ஒரு முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
- பிரதமர் நரேந்திர மோடி தற்போது இதற்கு ஒரு இலக்கை நிர்ணயித்துள்ளார்.
- அதாவது, இந்தியா சுதந்திரம் அடைந்த 101 – ஆவது ஆண்டான 2047 – ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- விக்சித் பாரத் என்பது ‘பெரிய பாய்ச்சல்’ என்று பொருள்படும்.
- விக்சித் பாரத் இளம் தலைவா்கள் உரையாடலில் பங்கேற்க மொத்தம் 3,000 இளைஞா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
- அரசியல் தொடா்பு இல்லாத ஒரு லட்சம் இளைஞா்களை ஒன்றிணைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக நடைபெறும் ’விக்சித் பாரத் இளம் தலைவா்கள் உரையாடலில்’பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
ஜனவரி 12: தேசிய இளைஞர் தினம்
- சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12 அன்று கொண்டாடப்படுகிறது.
- அவர் 1863 ஆம் ஆண்டு ஜனவரி 12 – ஆம் தேதி பிறந்தார்.
- சுவாமிஜியின் தத்துவம் மற்றும் அவர் வாழ்ந்த மற்றும் உழைத்த இலட்சியங்கள் இந்திய இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் பெரும் ஆதாரமாக இருப்பதால், அதை ராஷ்ட்ரிய யுவ திவாஸ் என்று கடைப்பிடிக்க அரசாங்கம் முடிவு செய்தது.
- செப்டம்பர் 11, 1893 அன்று சிகாகோவில் நடைபெற்ற உலக மதங்களின் பாராளுமன்றத்தில் சுவாமி விவேகானந்தர் மேற்கத்திய உலகிற்கு உரையாற்றினார்.
தகவல் துளிகள்:
- சா்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) நிர்வாக இயக்குநா் கிறிஸ்டலீனா ஜார்ஜியேவா.
- அமெரிக்க நாட்டின் 47- ஆவது அதிபராக வரும் 20 -ஆம் தேதி பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப், கனடா, மெக்ஸிகோ நாடுகளுக்கு கூடுதலாக 25 சதவீத இறக்குமதி வரியும், சீனாவுக்கு கூடுதலாக 10 சதவீத இறக்குமதியும் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
- உலக பொருளாதாரம் 2025 – ஆம் ஆண்டில் நிலைத்தன்மையுடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 1875 – ஆம் ஆண்டு கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு ஐஎம்டி தொடங்கப்பட்டது.
- தற்போது ஐஎம்டி தில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
- இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) 150 – ஆவது ஆண்டுவிழா நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை என வங்கதேச வானிலை ஆய்வு மையம் (பிஎம்டி) தெரிவித்துள்ளது.
- ஜனவரி 15, 2025-இல் ஐஎம்டி 150 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
- தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரின் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் வருகின்ற ஜனவரி 14 அன்று அரசு முறைப்பயணமாக இந்தியா வருகின்றார்.
- ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
- புது தில்லியில் நடைபெற்ற ஐடிஎஃப் ஜே300 டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை மாயா ராஜேஸ்வரன் பட்டம் வென்றார்.
- அடிலெய்ட் சா்வதேச டென்னிஸ் போட்டியில் ஆடவா் பிரிவில் கனடாவின் பெலிக்ஸ் அகா் அலியாசிம், மகளிர் பிரிவில் மடிஸன் கீஸ் ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனா்.