மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக் குழு:
- மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதியதாரா்களுக்கான படிகளை மாற்றியமைப்பதற்காக எட்டாவது ஊதியக் குழு அமைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
- ஏழாவது ஊதியக் குழு கடந்த 2016 – ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
- அதன் பதவிக் காலம் வரும் 2026 – இல் முடிவடைய உள்ள நிலையில், இந்த முடிவை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
- ஊதியக் குழுவின் தலைவர் மற்றும் இரு உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவர.
- மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை மாற்றியமைப்பதற்காக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக் குழுவை மத்திய அரசு அமைப்பது வழக்கம்.
- கடந்த 1947 – ஆம் ஆண்டு முதல் 7 ஊதியக் குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.
- விலைவாசி உயா்வு உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியம், பலன்கள், படிகள் ஆகியவற்றை ஊதியக் குழு தீர்மானித்து, அரசிடம் பரிந்துரையாக சமர்ப்பிக்கும்.
- பெரும்பாலான மாநில அரசுத் துறைகளும் மத்திய ஊதியக் குழு பரிந்துரைகளைப் பின்பற்றுவது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம்:
- ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்தில் மூன்றாவது ராக்கெட் ஏவுதளத்தை ரூ 3,985 கோடி செலவில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்தில் தற்போது 2 ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன.
- முதல் ஏவுதளம் 1990-களின் ஆரம்பத்தில் கட்டப்பட்டது.
- இந்த ஏவுதளத்திலிருந்து 1993-ஆம் ஆண்டு செப்டம்பா் 20-ஆம் தேதி முதல் ராக்கெட் ஏவப்பட்டது.
- இரண்டாவது ஏவுதளம் 2005-இல் செயல்பாட்டுக்கு வந்தது.
- ராக்கெட் ஏவுவதற்கான தேவை அதிகரித்ததன் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்த இரண்டாவது ஏவுதளத்திலிருந்து 2005 – ஆம் ண்டு மே 5 – ஆம் தேதி முதல் ராக்கெட் ஏவப்பட்டது.
- அடுத்தத் தலைமுறை ராக்கெட்டுகளை ஏவுவதற்கு வசதியாகவும், இரண்டாவது ஏவுதளத்துக்கான அவசரநிலை மாற்று ஏவுதளமாக பயன்படும் நோக்கிலும் மூன்றாவது ஏவுதளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- மூன்று நிலைகளைக் கொண்ட குதுப் மினாரின் உயரத்தைக் காட்டிலும் (72 மீ) கூடுதலாக 91 மீட்டா் நீளத்தில் இஸ்ரோ மேம்படுத்தி வரும் அடுத்த தலைமுறை ராக்கெட்டுகள் மட்டுமின்றி அதிக எடைகொண்ட செயற்கைக்கோள்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்ட ஜிஎஸ்எல்வி மாக்-3 என்றழைக்கப்பட்ட எல்விஎம்3 ராக்கெட்டுகள் என அனைத்து வகை ராக்கெட்டுகளை ஏவுவதற்கான திறனுடன் மூன்றாவது ஏவுதளம் வடிவமைக்கப்பட உள்ளது.
- இதன் மூலம், தற்போது தாழ் புவி சுற்றுப்பாதையில் 8,000 டன் எடையுடைய செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும் இஸ்ரோவின் திறன், 30,000 டன் எடையுடைய செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும் வகையில் உயர உள்ளது.
ஸ்பேடெக்ஸ் வெற்றிகரமாக ஒருங்கிணைப்பு: இஸ்ரோ
- ஆய்வு மையத்தை அமைப்பதற்கான முன்னோட்ட முயற்சியாக அனுப்பப்பட்ட ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை வெற்றிகரமாக விண்ணில் ஒருங்கிணைத்து புதிய சாதனையை இஸ்ரோ படைத்துள்ளது.
- இதன் மூலம் அமெரிக்கா, சீனா, ரஷியாவைத் தொடா்ந்து விண்கலன் ஒருங்கிணைப்பை முன்னெடுத்த 4 – ஆவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
- ‘பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன்’ எனும் ஆய்வு நிலையத்தை 2035 – ஆம் ஆண்டுக்குள் விண்ணில் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
- இதற்கான பிரத்யேக விண்கலங்கள் 2028 – ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட உள்ளன.
- அதற்கான முன்னேற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- அதன் ஒருபகுதியாக ஸ்பேடெக்ஸ் எனும் திட்டத்தின் கீழ் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பரிசோதனையை மேற்கொள்ள இஸ்ரோ முடிவு செய்தது.
- இதற்காக வடிவமைக்கப்பட்ட ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய இரு விண்கலன்களும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.
- ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் இரண்டும் தலா 220 கிலோ எடை கொண்டவை.
- இதன்மூலம் விண்வெளி டாக்கிங் தொழில்நுட்பத்தை முன்னெடுத்த 4 – ஆவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
காற்றின் தரத்தில் நெல்லை முதலிடம்:
- காற்றின் தரக்குறியீடு பட்டியலில் நெல்லை முதலிடத்தையும், தஞ்சை ஐந்தாவது இடத்தையும் பெற்றுள்ளது.
- மேற்கு தொடர்ச்சி மலைக்கு அருகில் இருப்பதுடன், சுற்றி வயல்வெளிகள் அதிகமிருப்பதால், நெல்லை மாவட்டத்தின் காற்றின் தரம் சிறப்பாக உள்ளது.
- இந்திய நகரங்களில் காற்று மாசு பாதித்த நகரங்களையும், தூய காற்று கிடைக்கும் நகரங்கள் குறித்த பட்டியலை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
- இந்திய நகரங்களில் காற்றின் தரக்குறியீடு (AQI) பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தரக்குறியீடு 50 – க்கு குறையில் இருந்தால் பாதுகாப்பானது.
- 51 முதல் 100 வரையில் இருந்தால், பெரிதாக பாதிப்பேதும் இல்லை.
- 201 முதல் 300 வரையில் இருந்தால், வெளியில் நீண்டநேரம் இருப்பவர்களுக்கு சுவாச பாதிப்புகள் ஏற்படலாம்.
- 301 முதல் 400 வரையில் இருந்தால், சுவாச நோய்கள் ஏற்படும் அளவிற்கு மோசமானதாக இருக்கும்.
- 401 முதல் 450 வரையில் இருந்தால், கடுமையானதாகவும், 450 – க்குமேல் இருந்தால், ஆரோக்கியமானவர்களைக்கூட பாதிக்கும் அளவிற்கு கடுமையான தீவிரமானது என்று பிரிக்கப்படுகிறது.
- அதற்கு அடுத்ததாக, இரண்டாவது இடத்தில் 43 தரக்குறியீட்டு அருணாசலபிரதேசத்தின் நாகர்லாகுன் நகரம் உள்ளது.
- இதன்மூலம், முதல் 5 இடங்களில் தமிழகத்தின் இரு மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
- தொடர்ந்து, மோசமான காற்றின் தரக்குறியீடு பெற்ற நகரங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
- கடந்த சில ஆண்டுகளாகவே காற்றின் தரம் மோசமடைந்து செல்லும் தில்லிதான் முதலிடத்தில் உள்ளது.
- தில்லியில் காற்றின் தரக்குறியீடு 357 என்ற நிலையில் உள்ளது.
தகவல் துளிகள்:
- நிகழாண்டு உலக பொருளாதார சூழல் பலவீனமடைய வாய்ப்புள்ளதாகவும், இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி வலுவாக தொடரும் என்று எதிா்பாா்க்கப்படுவதாகவும் உலக பொருளாதார மன்ற (டபிள்யூஇஎஃப்) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவின் பாபா அணு ஆராய்ச்சி மையம் உள்பட 3 இந்திய அணுசக்தி நிறுவனங்கள் மீதான பல்வேறு தடைகளை அமெரிக்கா நீக்கியுள்ளது.
- பாபா அணு ஆராய்ச்சி மையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், இண்டியன் ரோ் எா்த்ஸ் ஆகிய நிறுவனங்கள் அமெரிக்காவின் தடைப் பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
- இந்திய கடற்படைக்கு சுமார் ரூ 2,960 கோடி செலவில், தரையில் இருந்து வானில் நடுத்தர தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை விநியோகிக்க, பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டது.
- இந்தியாவின் 76 – வது குடியரசு தின விழாவில் இந்தோனேசியஅதிபா் பிரபோவோ சுபியாந்தோ சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
- கடந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
- இந்தியாவில் உள்ள நதிகளின் பெயர்கள் அனைத்தும் பெண்ணின் பெயர்களையே கொண்டிருக்கும் ஆனால் பிரம்மபுத்திரா என்ற ஒரே ஒரு நதி மட்டும்தான் ஆணின் பெயரில் உள்ளது.
- பிகார் மாநிலம், பாட்னா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.வினோத் சந்திரன், உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.
- முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணி ஆகியவற்றைக் கண்காணிக்க ஏழு பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
- ஜனவரியை தமிழ் மொழி, பாரம்பரிய மாதமாக அறிவிக்க தீா்மானம், அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிமுகம்.
- ஐசிசி டிசம்பர் மாத சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னாபெல் சதர்லேண்ட் வென்றுள்ளார்.