23rd January Daily Current Affairs – Tamil

தேசிய சுகாதார இயக்கம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு:

  • நாட்டில் பொது சுகாதார சேவைகள் மேம்பாட்டுக்கான தேசிய சுகாதார இயக்கத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
  • கடந்த 2013 – இல் தேசிய ஊரக சுகாதார இயக்கம், தேசிய நகா்ப்புற சுகாதார இயக்கம் ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்து தேசிய சுகாதார இயக்கம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • இந்த இயக்கத்தின் வாயிலாக தீவிரப்படுத்தப்பட்ட இந்திரதனுஷ் தடுப்பூசி இயக்கத்தின்கீழ், 34.77 கோடிக்கும் அதிகமான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
  • பிரதமரின் தேசிய டயாலிசிஸ் திட்டத்தின்கீழ், 2023-24-இல் 4.53 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலனடைந்தனா்.
  • அரிவாள் செல் ரத்தசோகை ஒழிப்பு இயக்கத்தின்கீழ் பழங்குடியின பகுதிகளில் 2.61 கோடிக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • சுகாதாரத் துறையில் மனித வள விரிவாக்கம், முக்கியத்துவம் வாய்ந்த சுகாதாரப் பிரச்னைகளுக்கு தீா்வு, சுகாதார அவசர நிலைகளுக்கு ஒருங்கிணைந்த தீா்வை கண்டறிதல் போன்ற தொடா் முயற்சிகள் வாயிலாக நாட்டின் பொது சுகாதார சேவைகள் மேம்பாட்டில் தேசிய சுகாதார இயக்கம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.

‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம் திட்டம்:

  • மத்திய அரசின் லட்சியத் திட்டங்களில் ஒன்றான ‘பெண் குழந்தைகளைக் காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம்’திட்டத்தின் 10 ஆண்டுகள் நிறைவடைந்தது.
  • நாட்டில் பெண் குழந்தைகள் பாலின விகிதம் குறைந்து வருவது மற்றும் பெண்களுக்கு தங்கு தடையின்றி அதிகாரமளித்தல் தொடா்பான சவால்களுக்கு தீா்வுகாணும் நோக்கில், இத்திட்டம் பிரதமா் மோடியால் கடந்த 2015, ஜனவரி 22 – ஆம் தேதி தொடங்கப்பட்டது.
  • இத்திட்டத்தால் பள்ளிகளில் இப்போது பெண் குழந்தைகளின் பதிவு அதிகரித்துள்ளது.
  • பாலின விகிதமும் முன்னேப்போதும் இல்லாத முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை சட்டத்திருத்த மசோதா:

  • பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட இந்த புதிய சட்டத்திருத்த மசோதா பேரவையில் நிறைவேறியது.
  • பாலியல் வன்கொடுமை வழக்கில் கடும் தண்டனை வழங்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்திருந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
  • ஆளுநரின் ஒப்புதலை அடுத்து சட்டத்திருத்த மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட உள்ளது.
  • பாலியல் வன்கொடுமை புதிய சட்டத்திருத்த மசோதா – தண்டனை விவரங்கள்:
  • பாலியல் வன்கொடுமைக்கு முன்னர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறை.
  • நெருங்கிய உறவினர் (அ) காவல்துறை ஊழியர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் முன்னர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வைக்கப்பட்ட நிலையில், தற்போது குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறை.
  • 12 வயதுக்குட்பட்ட சிறுமி மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் முன்னர் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறை (அ) ஆயுள் தண்டனை (அ) மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆயுள் (அ) மரண தண்டனை.
  • பாலியல் வன்கொடுமை மற்றும் மரணத்தை விளைவிக்கும் குற்றத்துக்கு முன்னர் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆயுள் தண்டனை.
  • கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு முன்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது மரண தண்டனை.
  • மீண்டும் மீண்டும் குற்றம் இழைத்தவர்களுக்கு குற்றத்துக்கு முன்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது மரண தண்டனை.

ஜனவரி 23: தேசிய பை தினம்

  • தேசிய பை தினம் ஆண்டுதோறும் ஜனவரி 23 இல் கொண்டாடப்படுகிறது.
  • பை என்பது நாடுகளின் விருப்பமான இனிப்புகளில் ஒன்று.

ஜனவரி 23: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள்.

  • ஜனவரி 23 இந்தியாவின் தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாள்.
  • நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் நாட்டுப் பற்றுக்கான தேசிய தினம், தேஷ் பிரேம் திவாஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

தகவல் துளிகள்:

  • மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தொழிலதிபர் ரத்தன் டாடா ஆகியோரின் பெயர்கள் இந்தாண்டுக்கான பாரத ரத்னா விருதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
  • லடாக் யூனியன் பிரதேசத்தில் ஷியோக் மற்றும் நுப்ரா பள்ளத்தாக்குகளுக்கு இடையே இணைப்பை மேம்படுத்தும் வகையில், ஷியோக் ஆற்றின் மீது இந்திய ராணுவத்தால் புதிதாக கட்டப்பட்ட 2 பெய்லி (இரும்பு) பாலங்கள் திறந்து வைக்கப்பட்டன.
  • இராக் நாடாளுமன்றத்தில் பெண் குழந்தைகளின் திருமண வயதை 9 ஆக குறைத்து குழந்தை திருமணச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
  • இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பிரதான வீராங்கனை லக்ஷயா சென் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

 

 

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these