நீதி ஆயோக்கின் நிதி வளக் குறியீடு:
- நீதி ஆயோக் வெளியிட்ட ‘நிதி வளக் குறியீடு’தரவரிசைப் பட்டியலில் கனிம வளம் நிறைந்த ஒடிஸா, சத்தீஸ்கா், கோவா, ஜார்க்கண்ட் மாநிலங்கள் முன்னிலை வகிப்பது தெரியவந்துள்ளது.
- நீதி ஆயோக், இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி, மக்கள்தொகை, மொத்த பொது செலவினம், வருவாய், ஒட்டுமொத்த நிதி நிலைத்தன்மை ஆகியவற்றுக்கு மாநிலங்களின் பங்களிப்பு அடிப்படையில் முதல் முறையாக நிதி வளக் குறியீட்டை (எஃப்ஹெச்ஐ 2025) வெளியிட்டது.
- இந்தப் பட்டியலில் 67.8 புள்ளிகளுடன் நிதி வளம் நிறைந்த மாநிலங்களில் ஒடிஸா முதலிடம் வகிக்கிறது.
- சத்தீஸ்கா், கோவா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், தெலங்கானா, மத்திய பிரதேசம், கா்நாடகம் ஆகியவை முன்னிலை மாநிலங்கள் பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.
- தமிழகம், பிகார், ராஜஸ்தான், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்கள் பங்களிப்பாளா்கள் என்ற பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.
- நிதி பற்றாக்குறை, கடன் நிலையற்ற தன்மை உள்ளிட்ட பாதிப்புகளை எதிர் கொண்டுவரும் பஞ்சாப், ஆந்திரம், மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்கள் விருப்ப நிலை என்ற மோசமான பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.
யமுனை நீர் விவகாரம்:
- நமாமி கங்கை திட்டத்தின் கீழ் யமுனையின் தூய்மைக்காக, தேசிய நதியான கங்கையின் மாசுபாட்டை திறம்பட குறைத்தல், பாதுகாப்பு மற்றும் புத்துயிர் பெறுதல் ஆகிய இரட்டை நோக்கங்களை கொண்டது.
- ‘நமாமி கங்கே திட்டம்’ என்பது ஒரு ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டமாகும்.
- இது ஜூன் 2014 இல் மத்திய அரசால் ‘முதன்மைத் திட்டமாக’ அங்கீகரிக்கப்பட்டது.
- இது மாசுபாட்டை திறம்பட தணித்தல், தேசிய பாதுகாப்பு மற்றும் புத்துயிர் பெறுதல் ஆகிய இரட்டை நோக்கங்களை நிறைவேற்ற ரூ.20,000 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது.
- யமுனை ஆறு (Yamuna River) வட இந்தியாவின் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும்.
- உத்தராஞ்சல் மாநிலத்தில் இமய மலையில் அமைந்துள்ள யமுனோத்ரி தொடங்கும் இந்த ஆறு, தில்லி, ஹரியானா ஆகிய மாநிலங்கள் வழியாக ஓடி, உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் நகரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது.
- யமுனோத்ரியிலிருந்து அலகாபாத் வரை 1370 கிமீ இவ்வாறு ஓடுகிறது.
- தில்லி, மதுரா, ஆக்ரா ஆகிய நகரங்கள் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளன.
- உலகப் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றான தாஜ் மஹால் யமுனையின் கரையில் அமைந்துள்ளது.
- யமுனை சிலநேரங்களில் ஜமுனா அல்லது ஜம்னா என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு நீளமான நதி ஆகும்.
- இது கங்கை நதியின் இரண்டாவது கிளை நதியாகும்.
- இக் கிளை நதியானது யமுனோத்ரி என்ற பனிக்கட்டி மலையிலிருந்து உருவாகிறது.
- இந்நதி இந்தியாவில் உத்ரகாண்ட் மாநிலத்தில் கீழ் இமாச்சல மலைப் பகுதியில் உள்ள தென்மேற்கு உள்ள பாந்தர்பூஞ்ச் சிகரத்தில் இருந்து 6387 மீட்டர் உயரத்திலிருந்து உருவாகிறது.
- யமுனை நதியின் துணை நதிகள்:
- டன் நதி, கிரி நதி, சம்பல் ஆறு, சிந்து ஆறு, ஹிண்டன் நதி, பனாஸ் நதி, காளி சிந்து நதி, பெட்வா நதி.
“சஞ்சய் – போர்க்கள கண்காணிப்பு அமைப்பு”:
- பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் 2025 ஜனவரி 24 இல் புதுதில்லியின் சௌத் பிளாக்கில் ‘சஞ்சய் – போர்க்கள கண்காணிப்பு அமைப்பு (BSS)’-ஐ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- சஞ்சய் என்பது ஒரு தானியங்கி அமைப்பாகும்.
- இது அனைத்து தரை, வான்வழி போர்க்கள சென்சார்களிலிருந்து உள்ளீடுகளை பெற்று ஒருங்கிணைக்கிறது. அவற்றின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த அவற்றை செயலாக்குகிறது.
- பாதுகாப்பான ராணுவ தரவு கட்டமைப்பு, செயற்கைக்கோள் தகவல் தொடர்பு கட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் போர்க்களத்தின் பொதுவான கண்காணிப்பு படத்தை உருவாக்க அவற்றை இணைக்கிறது.
- இது போர்க்கள வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதோடு, மையப்படுத்தப்பட்ட வலை பயன்பாட்டின் மூலம் எதிர்கால போர்க்கள செயல்பாடுகளுக்கு உதவும்.
- பிஎஸ்எஸ் அமைப்பானது அதிநவீன சென்சார்கள், அதிநவீன பகுப்பாய்வுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இது பரந்து விரிந்த நில எல்லைகளைக் கண்காணித்து, ஊடுருவல்களைத் தடுத்து, அதிக துல்லியத்துடன் சூழ்நிலைகளை மதிப்பீடு செய்யும்.
ஜனவரி 25: தேசிய வாக்காளர் தினம்.
- இந்திய தேர்தல் ஆணையத்தின் ஸ்தாபக நாளான ஜனவரி 25 அன்று இந்தியாவில் ஆண்டுதோறும் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது.
- அதிக இளம் வாக்காளர்களை அரசியல் செயல்பாட்டில் பங்கேற்க ஊக்குவிப்பதற்காக இது இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்டது.
தகவல் துளிகள்:
- மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
- ஜனவரி 25 – ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினத்தை தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாள் என பெயரிட்டு அழைக்கவும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
- புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் சர்வதேச அளவிலான உளவியல் மாநாட்டை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தொடங்கிவைத்தார்.
- தில்லியில் பள்ளி குழந்தைகள் மூலம் பெற்றோரை வாக்களிக்க ஊக்குவிக்கும் ‘சங்கல்ப் பத்ரா’முன்னெடுப்பை தோ்தல் அதிகாரிகள் தொடங்கியுள்ளனா்.
- இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமார்.
- ஹமாஸ் – இஸ்ரேல் இடையே காஸாவில் போர்நிறுத்த உடன்பாடு அமலுக்கு வந்துள்ள சூழலில், இஸ்ரேலுக்கு புதிய தூதரை இந்தியா நியமித்துள்ளது.
- இஸ்ரேல் நாட்டுக்கான புதிய இந்திய தூதராக ஜிதேந்தா் பால் நியமிக்கப்பட்டார்.
- கொடி நாள் வசூலில் நிர்ணயித்த இலக்கை விட அதிக வசூல் செய்து முதலிடம் பெற்றதற்காக, கோவை மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட உள்ளது.
- கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகம், தென்னிந்தியாவிலுள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொடைக்கானலில் பழனி மலையின் தெற்கு உச்சியில் அமைந்துள்ளது.