ஜிஎஸ்எல்வி–எஃப் 15 ராக்கெட்:
- வானிலை மாறுபாடுகளைக் கண்காணித்து தகவல் வழங்குவதற்காக இஸ்ரோ சார்பில் இன்சாட் வகையிலான செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன.
- அந்த வகையில், இஸ்ரோவின் 100 – வது ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி-எஃப் 15, ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.
- என்விஎஸ்-02 பிற செயற்கைக்கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணித்து, பேரிடர் காலங்களில் துல்லியமான தகவல்களை அளிக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
- இந்த செயற்கைக்கோளை வடிவமைப்பதற்கு, இந்திய தொழிற்துறை நிறுவனங்கள் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளன.
தேசிய கல்விக் கொள்கை:
- உயர்கல்வியில் பரவலான சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்காக 2020 – ஆம் ஆண்டில், தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது.
- இது கூடிய விரைவில் கல்விக்கான மாநில செலவினத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% முதல் 6% வரை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- தேசிய கல்விக் கொள்கை (NEP) என்பது, இந்தியாவில் கல்வியை மேம்படுத்தவும், ஒழுங்குபடுத்துவதற்கும் இந்திய அரசாங்கம் உருவாக்கும் கொள்கையாகும்.
- இது, கல்வியில் மாற்றங்களை முன்வைத்து, நாட்டின் வளர்ச்சி இலக்குகளை அடைய உதவுகிறது.
- முதல் தேசிய கல்விக் கொள்கை 1968 – ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது
- இரண்டாவது தேசிய கல்விக் கொள்கை 1986- ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது
- மூன்றாவது தேசிய கல்விக் கொள்கை 2020 – ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
- முதல் தேசிய கல்விக் கொள்கையை 1968-ஆம் ஆண்டில் பிரதம மந்திரி இந்திரா காந்தி தலைமையிலான அரசாங்கமும், இரண்டாவது தேசிய கல்விக் கொள்கையை 1986-ஆம் ஆண்டில் பிரதம மந்திரி ராஜீவ் காந்தி தலைமையிலான அரசாங்கமும், மூன்றாவது தேசிய கல்விக் கொள்கையை 2020-ஆம் ஆண்டில் பிரதம மந்திரி நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கமும் வெளியிட்டன.
ஜனவரி 27: தேசிய புவியியல் தினம்
- ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 27 அன்று, தேசிய புவியியல் தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
ஜனவரி 28: லாலா லஜபதி ராயின் பிறந்த நாள்
- லாலா லஜபதி ராய் 1865 – ஆம் ஆண்டு ஜனவரி 28 – ஆம் தேதி பஞ்சாபில் பிறந்தார்.
- அவர் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த ஒரு முக்கிய தேசியவாத தலைவராக இருந்தார், ‘பஞ்சாப் கேசரி’ அல்லது ‘பஞ்சாப் சிங்கம்’ என்ற பட்டத்தையும் பெற்றார்.
- அவர் பஞ்சாப் நேஷனல் வங்கியின் அடித்தளத்தைத் தொடங்கினார்.
- 1928 நவம்பர் 17 அன்று இறந்தார்.
தகவல் துளிகள்:
- உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் (யுசிசி) அமலுக்கு வந்தது, இதன் மூலம் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய நாட்டின் முதல் மாநிலமானது உத்தரகண்ட்.
- நாட்டின் பொருளாதாரத்துக்கு முக்கியப் பங்காற்றும் ஓட்டுநா்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24-ஆம் தேதியை ஓட்டுநா்கள் தினமாக கொண்டாடப்படவுள்ளது.
- அடுத்த தலைமை தோ்தல் ஆணையரைத் தெரிவு செய்வதற்கு மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் தலைமையில் மூன்று போ் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
- இந்திய தோ்தல் ஆணையத்தில் ஒரு தலைமைத் தோ்தல் ஆணையா், 2 தோ்தல் ஆணையா்கள் இடம்பெற்றிருப்பா், தோ்தல் ஆணையா்களை மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில், குடியரசுத் தலைவா் நியமனம் செய்வார்.
- தற்போதைய தலைமை தோ்தல் ஆணையர் ராஜீவ் குமார்.
- இந்திய பங்குச் சந்தை பரிவா்த்தனை வாரியம் (செபி) தலைவா் மாதபி புரி புச்.
- தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் வெ.ராமசுப்பிரமணியன்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையா் பிரிவில், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் சாம்பியன் ஆனார்.
- 2024 – ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக இந்திய வேகப்பந்து வீச்சாளா் ஜஸ்பிரீத் பும்ரா தோ்வாகியிருக்கிறார்.
- இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கோடண்டேரா மடப்பா கரியப்பா.