31st July Daily Current Affairs – Tamil

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்:

  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MNREGA)) என்பது இந்திய அரசு கொண்டுவந்த வேலை உறுதியளிப்புத் திட்டம் ஆகும்.
  • இச் சட்டம் 05.2005 முதல் அமலாக்கப்பட்டது, முதலில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்டது.
  • இது 2009 காந்தியடிகள் பிறந்த நாளன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்று பெயர் மாற்றப்பட்டது.
  • இந்திய அரசின், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம், மாநில அரசாங்கத்துடன் இணைந்து, இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.
  • கிராமப்புற இந்தியாவில், வறுமைக்கோட்டிற்கு கீழே வசிக்கும் மக்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் வாங்கும் திறனை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • இத்திட்டத்தின் கீழ், பொதுவேலை செய்ய விருப்பம் உள்ள கிராமப்புற வயது வந்தவர்களுக்கு, அரசின் குறைந்த ஊதியத்துடன், ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்கு கட்டாய சிறப்புத்திறன் இல்லா உடலுழைப்பு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.
  • ஊரக ஏழை மக்களின் வேலைக்கான உரிமை நிலை நாட்டப்படும்.
  • கிராமப்புற சமூகப் பொருளாதார உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். ஊரக பகுதி மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும்.
  • தனிநபர் இல்ல கழிப்பறைகள் உருவாக்கப்பட்டு கிராமப்புறங்கள் சுகாதார மேம்பாடு அடையும்.
  • ஊரக பகுதிகளில் உள்ள மக்கள் இடம் பெயர்வு குறைவதோடு அவர்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும்.
  • நிழல் தரும் மரங்கள், பயன் தரும் மரங்கள் ஆகியவை நட்டு இயற்கை வளம் மேம்படுத்தப்படும்.

எழுத்தாளா் சிவசங்கரிக்கு தேசிய இலக்கிய விருது:

  • தெலுங்கு கவிஞரும் ஞானபீட விருது பெற்றவருமான பத்மபூஷண் சி. நாராயண ரெட்டியின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் அவரது பெயரில் தேசிய இலக்கிய விருதை சுசீலா நாராயண ரெட்டி அறக்கட்டளை ஆண்டுதோறும் அளித்து வருகிறது.
  • நிகழாண்டுக்கான சி. நாராயண ரெட்டி நினைவு தேசிய இலக்கிய விருது எழுத்தாளரும் சமூக ஆா்வலருமான சிவசங்கரிக்கு வழங்கப்பட்டது.
  • தெலங்கானா மாநில முதல்வா் ரேவந்த் ரெட்டி.

கூட்டுறவு சங்கங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளித்த முதல் மாநிலம்: உத்தரகண்ட்

  • உத்தரகண்டில் கூட்டுறவு சங்கங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்டை உத்தரகண்ட் அரசு அறிவித்துள்ளது.
  • பிரதமர் நரேந்திர மோடியின் ‘கூட்டுறவு மூலம் செழிப்பு’ என்ற மந்திரத்தின் மூலம், கூட்டுறவு சங்கங்களில் பெண்களின் 33 சதவிகித இடஒதுக்கீட்டை உத்தரகண்ட் அரசு அறிவித்துள்ளது.
  • நாட்டில் கூட்டுறவு சங்கங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அறிமுகம் செய்த முதல் மாநிலம் உத்தரகண்ட் ஆகும்.
  • உத்தரகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி.

டிரி திருவிழா: அருணாச்சலப் பிரதேசம்

  • விவசாயத் திருவிழாவான டிரி திருவிழா அருணாச்சலப் பிரதேசத்தின் அப்பதானி பழங்குடியின மக்களால் கொண்டாடப்படுகிறது.
  • டிரி திருவிழாவானது அப்பதானி பழங்குடியின மக்களின் மிகப்பெரிய திருவிழாவாகும்.
  • ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5 ஆம் தேதி டிரி திருவிழா கொண்டாடப்படுகிறது.

ஜூலை 31: உலக வனப் பாதுகாவலர் தினம்

  • பணியின்போது மரணமடைந்த அல்லது காயமுற்ற வனப் பாதுகாவலர்களை நினைவு கூறும் விதமாக உலகம் முழுவதும் ஜூலை 31 ஆம் தேதியன்று உலக வனப் பாதுகாவலர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

தகவல் துளிகள்:

  1. குடியரசுத் தலைவா் மாளிகையில் ஆகஸ்ட் 2,3-ஆம் தேதிகளில் ஆளுநா்கள் மாநாடு நடைபெற உள்ளது. இது குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தலைமையில் நடைபெற உள்ள முதல் ஆளுநா்கள் மாநாடு இதுவாகும்.
  2. கடந்த 2006-ஆம் ஆண்டு எம்.எஸ்.சுவாமிநாதன் குழு விவசாயிகள் நிலை குறித்து ஆய்வு நடத்தி ‘விவசாயிகளின் நலனைக் காக்க 50 சதவீத லாபம் கிடைக்கும் அளவுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும்’ என்று பரிந்துரைத்தது.
  3. பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் மானு பாக்கர், சரப்ஜோத் சிங் இணை வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
  4. திருப்பூா் அருகே 1100 ஆண்டுகள் பழைமையான 9 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
  5. மும்பையை சோ்ந்த 16 வயது பாரா நீச்சல் வீராங்கனையான ஜியா ராய், ஆங்கிலக் கால்வாயை கடந்த உலகின் மிக இளம் மற்றும் வேகமான வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these