யுபிஐ பணப்பரிமாற்ற முறை: இந்தியா
- உலகின் மின்னணுப் பணப்பரிமாற்றத்தில் 40 சதவீதம் இந்தியாவில்தான் நடைபெறுகிறது.
- யுபிஐ வழியிலான பணப்பரிமாற்ற முறை கடந்த 2016 – ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
- பூடான், பிரான்ஸ், மோரீஷஸ், நேபாளம், சிங்கப்பூா், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 7 நாடுகளிலும் யுபிஐ பணப் பரிவா்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- வரி செலுத்துதல், பங்குச் சந்தை முதலீடு உள்ளிட்டவற்றுக்கான யுபிஐ பணப்பரிவர்த்தனை உச்சவரம்பு ரூ 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
- பங்குச் சந்தை முதலீடு, காப்பீட்டு பிரீமியம் உள்ளிட்ட சிலவற்றுக்கு இந்த வரம்பு ரூ 2 லட்சமாக உள்ளது.
எஸ்யு-30 போர் விமானங்கள்: அர்மீனியா
- எஸ்யு – 30 ரக போர் விமானங்களை மேம்படுத்துவதற்காக இந்தியாவின் உதவியை அர்மீனியா நாடியுள்ளது.
- எஸ்யு ரக போர் விமானங்களை ரஷ்யா தயாரித்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
- இந்த எஸ்யு ரக போர் விமானங்கள் இந்தியா, அர்மீனியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வாங்கி தங்களது விமானப் படையில் இணைத்துள்ளன.
- எஸ்யு – 30 ரக போர் விமானத்தில் இணைப்பதற்காக ராக்கெட் சிஸ்டம், ஆர்டிலரி கன், ஆயுதங்களை கண்டறியும் ரேடார்கள்போன்ற கருவிகளை இந்தியா தயாரித்து தனது எஸ்யு-ரக போர் விமானங்களில் பயன்படுத்துகிறது.
செப்டம்பர் 20: பல்கலைக் கழக விளையாட்டுகளுக்கான சர்வதேச தினம்
- பல்கலைக்கழக விளையாட்டுகளுக்காக சர்வதேச அளவில் ஒரு தினத்தை அனுசரிப்பதற்காக 2015 ஆம் ஆண்டில் சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டுகள் மன்றமானது (FISU – International University Sports Federation) யுனெஸ்கோவிற்கு ஒரு பரிந்துரை செய்தது.
தகவல் துளிகள்:
- கர்நாடகத்தில் மாதவிடாய் விடுமுறை குறித்து ஆய்வு செய்ய மருத்துவர் சப்னா முகர்ஜி தலைமையில் மாநில அரசு குழு அமைத்தது.
- கர்நாடகத்தில் உள்ள தனியார், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் 6 நாள்கள் மாதவிடாய் விடுமுறை அளிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
- நாட்டில் முதல்முறையாக குஜராத்தின் அகமதாபாத் – புஜ் நகரங்களுக்கு இடையே ‘நமோ பாரத் ரேபிட் ரயில்’ சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
- மூன்றாவது ‘உலக உணவு இந்தியா’ மாநாடு தில்லியில் நடைபெறுகிறது.
- மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரம் தொடர்ந்து ஏழாவது முறையாகத் தூய்மைக் கணக்கெடுப்பில் முதலிடத்தில் உள்ளதாகவும், போபால் நாட்டிலேயே தூய்மையான மாநிலத் தலைநகராக உள்ளது.
- தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Abhiyan) என்பது 2014 ஆம் ஆண்டு இந்திய அரசால் திறந்த வெளியில் மலம் கழிப்பதை ஒழிக்கவும் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தவும் நாடு தழுவிய பிரச்சாரமாகும்.
- சீனாவின் ஹுலுன்பியர் நகரில் செப்டம்பர் 8 – ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது, இதில் இந்திய அணி சீனாவை வீழ்த்தி 5 – வது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது.