22nd September Daily Current Affairs – Tamil

 

க்வாட் கூட்டமைப்பின் 4 – ஆவது உச்சி மாநாடு:

  • இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் “க்வாடரிலேடரல் செக்யூரிட்டி டயலாக்’ எனப்படும் “க்வாட்’ மாநாடு, அமெரிக்காவின் டெலாவா் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் நடைபெற்றது.
  • அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளும் 2007 -இல் ஏற்படுத்திக் கொண்ட ஒரு கூட்டணிதான் “க்வாட்’ ஆகும்.
  • இந்தோ – பசுபிக் பெருங்கடல் உள்ளடக்கிய பகுதிகளில் க்வாட் உறுப்பு நாடுகள் சுதந்திரமாக செயல்படுவதற்காக அமைக்கப்பட்டது.

தூய்மை எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் இந்தியா-ஜொ்மனி:

  • இந்தியா-ஜொ்மனி ஒத்துழைப்பு ‘பசுமை மற்றும் நிலையான வளா்ச்சிக்கான கூட்டுறவு’ என்ற வியூகத்தின் அடிப்படையில் வழிநடத்தப்படுகிறது.
  • 2022 – இல் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் ஒலாஃப் ஷோல்ஸ் இடையேயான பேச்சுவார்த்தையைத் தொடா்ந்து இது நிறுவப்பட்டது.
  • இந்தியா-ஜொ்மனி இணைந்து உலக அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதலீடு செய்வதற்கான தளத்தை தொடங்கி உள்ளது.
  • இந்தப் புதிய முயற்சி குஜராத்தின் காந்தி நகரில் கடந்த செப்டம்பா் 16 – ஆம் தேதி தொடங்கப்பட்டது.
  • ஜொ்மனி நிதியுதவியுடன், மும்பை, சூரத், அகமதாபாத் போன்ற பெருநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நகா்ப்புற மேம்பாடு, வேளாண் சூழலியல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த இருநாடுகளும் முடிவு செய்துள்ளன.
  • ஜொ்மனி பிரதமா் ஒலாஃப் ஷோல்ஸ்.

அந்நிய செலாவணி கையிருப்பு:

  • அந்நிய செலாவணி கையிருப்பு என்பது ஒரு நாட்டின் மத்திய வங்கியால் பராமரிக்கப்படும், முதன்மையாக வெளிநாட்டு நாணயங்களில் உள்ள சொத்துக்களின் தொகுப்பாகும்.
  • இந்த இருப்புக்கள் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிசெய்து, தேசிய நாணயத்தை உயர்த்தி, சர்வதேசக் கடன்களைத் தீர்ப்பதற்கு வசதியாக, நிதிக் குஷனாகச் செயல்படுகின்றன.
  • அந்நியச் செலாவணி என்பது ஒரு நாடு தனது பணத்தின் மதிப்பை மற்றொரு நாட்டின் மாற்று விகிதத்துடன் இணைப்பதன் மூலம் உறுதிப்படுத்துவதற்கான ஒரு வழியாகும்.
  • அந்நிய செலாவணி வர்த்தகம் என்பது வர்த்தகத்தில் இருந்து லாபம் ஈட்டுவதற்காக ஒரு நாணயத்தை மற்றொரு நாணயத்திற்கு மாற்றுவதாகும்.
  • அந்நியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டம் ( FERA ) என்பது 1973 ஆம் ஆண்டு இந்தியாவில் இயற்றப்பட்ட சட்டமாகும்.
  • இந்த மசோதா பணம் செலுத்துதல் மற்றும் அந்நிய செலாவணியை ஒழுங்குபடுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. ஃபெரா ஜனவரி 1, 1974 முதல் நடைமுறைக்கு வந்தது.

செப்டம்பர் 22: உலக காண்டாமிருக தினம்

  • உலக காண்டாமிருக தினமானது 2010 – ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தினால் (WWF – World Wide Fund for Nature) முதன்முறையாக அறிவிக்கப்பட்டது.

தகவல் துளிகள்:

  1. இந்திய விமானப் படையின் புதிய தலைமைத் தளபதியாக அமா் ப்ரீத் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  2. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  3. சா்வதேச கடற்கரை தூய்மை தினத்தின் (செப்டம்பர் 21) ஒரு பகுதியாக மும்பையில் உள்ள ஜுஹு கடற்கரையில் கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் பிரசாரம் நடைபெற்றது.
  4. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்வதோடு எரிசக்தி மற்றும் தண்ணீரை சேமிப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்துவதால், கழிவு மறுசுழற்சி புத்தாக்க நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சா் பூபேந்தா் யாதவ் தெரிவித்துள்ளார்.
  5. ‘ருஃபுஸ்’என்று பெயரிடப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு உரையாடல் செயலியை முன்னணி இணையவழி வா்த்தக நிறுவனமான அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

 

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these