மராத்தி, பாலி உள்பட 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து:
- காங்கிரஸ் ஆட்சியின் போது கடந்த 2004 – ம் ஆண்டு தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது.
- அதன்பின், 2014 – ம் ஆண்டு ஒடிசா மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது.
- இதன்மூலம் தமிழ், மலையாளம், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, ஒடிசா என 6 மொழிகள் செம்மொழி அந்தஸ்து பெற்றன.
- பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது, இதில் மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமிஸ், பெங்காலி ஆகிய 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- சிறப்பு மொழிகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதற்காக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
- இதன்மூலம் செம்மொழி அந்தஸ்து பெறும் மொழிகளின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் மத சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறை அதிகரிப்பு: அமெரிக்க ஆணையம்
- இந்தியாவில் மத சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறை அதிகரித்து வருகிறது; மதச் சுதந்திரம் மோசமான நிலையில் உள்ளது’ என்று சா்வதேச மதச் சுதந்திரத்துக்கான அமெரிக்க அரசின் ஆணையத்தின் (யுஎஸ்சிஐஆா்எஃப்) வருடாந்திர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- மேலும், மதச் சுதந்திர மீறல்கள் அடிப்படையில் கவலைக்குரிய நாடாக இந்தியாவை அறிவிக்க வேண்டும் என்றும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- சா்வதேச மதச் சுதந்திரத்துக்கான அமெரிக்க அரசின் ஆணையத்தின் அறிக்கையை கடுமையாக விமா்சித்து, நிராகரித்தது இந்திய வெளியுறவு அமைச்சகம்.
மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு மையத்திற்கு சா்வதேச அங்கீகாரம்:
- மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, சா்வதேச மருத்துவ சாதன ஒழுங்குமுறை ஃபோரமில் இணைப்பு உறுப்பினராகியுள்ளதாக மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- ஐ.எம்.டி.ஆா்.எஃப். என்கிற சா்வதேச மருத்துவ சாதன ஒழுங்குமுறை குழு என்பது சா்வதேச அளவில் உள்ள மருத்துவ சாதனக் கட்டுப்பாட்டாளா்களுக்கான தன்னார்வக் குழுவாகும்.
- மருத்துவ சாதனங்களுக்கான உலகளாவிய ஒத்திசைவு, ஒழுங்குமுறை, விரைவான ஒழுங்கிணைப்பு போன்ற வலுவான அடித்தளப் பணிகளை உருவாக்க இந்த பணிக்குழு ஒன்றிணைந்துள்ளது.
- உலக சுகாதார அமைப்பு ஆதரவுடன் அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 11 நாடுகளில் உள்ள மருத்துவ சாதன ஒழுங்குமுறை அல்லது கட்டுப்பாட்டு அமைப்புகளால் கடந்த 2011 ஆம் ஆண்டு கனடாவில் கூடி ஏற்படுத்தப்பட்டது.
- இந்தியாவின் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பை இணைப்பு உறுப்பினராக சோ்க்க ஒப்புதல் வழங்கியது.
- ஐ.எம்.டி.ஆா்.எஃப் என்கிற சா்வதேச மருத்துவ சாதன ஒழுங்குமுறை ஃபோரமில் இந்தியா இணைப்பு உறுப்பினராக இணைந்துள்ளது.
எண்ணெய் வித்துகள் இயக்கம்:
- தேசிய சமையல் எண்ணெய்-எண்ணெய் வித்துகள் இயக்கத்தை அடுத்த 7 ஆண்டுகளில் ரூ 10,103 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புக்கொண்டது.
- உள்நாட்டு எண்ணெய் வித்து உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் சமையல் எண்ணெயில் தன்னிறைவு இலக்கை அடைதல் ஆகியவற்றின் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் அதேவேளையில் அந்நியச் செலாவணியைச் சேமிப்பது இந்த இயக்கத்தின் நோக்கமாகும்.
ரூ1 லட்சம் கோடி வேளாண் திட்டத்துக்கு ஒப்புதல்:
- மத்திய வேளாண் அமைச்சகத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டுவரும் அனைத்து மத்திய நிதியுதவித் திட்டங்களையும் ஒன்றிணைத்து 2 புதிய திட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
- நிலையான விவசாயத்தை ஊக்குவிக்கும் பிரதமரின் தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டம், உணவுப் பாதுகாப்பில் தன்னிறைவை அடைய கிருஷோன்னதி திட்டம் ஆகிய இரு புதிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
- மாநில அரசுகள் மூலம் இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. மேலும், தங்களின் தேவைகளுக்கேற்ப நிதியைப் பயன்படுத்தி கொள்ள மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
3 அக்டோபர்: நவராத்திரி
- நவராத்திரி என்பது துர்கா தேவியை போற்றும் வகையில் கொண்டாடப்படும் ஆண்டு விழாவாகும்.
- இது சைத்ரா நவராத்திரி மற்றும் ஷரத் நவராத்திரி என அழைக்கப்படும், வருடத்திற்கு இரண்டு முறை நடைபெறும்.
- 2024 -,ஆம் ஆண்டில், ஷரத் நவராத்திரி அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்குகிறது.
தகவல் துளிகள்:
- கடந்த 2004 – ஆம் ஆண்டில் முதலாவதாக தமிழ் மொழிக்கு ‘செம்மொழி’ அந்தஸ்து வழங்கப்பட்டது.
- சம்ஸ்கிருதம் (2005), தெலுங்கு (2008), கன்னடம் (2008), மலையாளம் (2013), ஒடியா (2014) ஆகிய மொழிகளுக்கு ‘செம்மொழி’அந்தஸ்து வழங்கப்பட்டது.
- தற்போது செம்மொழிப் பட்டியலில் இணையவிருக்கும் 5 மொழிகள், மகாராஷ்டிரம் (மராத்தி), பிகார்-உத்தர பிரதேசம்-மத்திய பிரதேசம் (பாலி மற்றும் பிராகிருதம்), மேற்கு வங்கம் (வங்கமொழி), அஸ்ஸாம் (அஸ்ஸாமி) ஆகிய மாநிலங்களில் பிரதானமாக பேசப்படுபவை.
- சென்னை மெட்ரோ 2 – ஆம் கட்ட திட்டத்துக்கு ரூ 63,236 கோடி நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- வெப்பமண்டல பவளப் பாறைகளைக் கொண்ட டியாகோ காா்சியா தீவை உள்ளிடக்கிய சாகோஸ் தீவுக்கூட்டத்தை 50 ஆண்டுகளுக்குப் பிறகு மோரீஷஸிடம் ஒப்படைக்க பிரிட்டன் ஒப்பந்தம் அளித்தது.