ஐ.நா ஒரு பழைய நிறுவனம்:
- தில்லியில் நடைபெற்ற கெளடில்யா பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கர், சமகால பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் செயல்பட முடியாத ஐ.நா ஒரு பழைய நிறுவனம் போன்றது என தெரிவித்தார்.
- ஐக்கிய நாடுகள் சபை என்பது சர்வதேச அமைதி மற்றும்பாதுகாப்பை பேணுதல், நாடுகளுக்கிடையே நட்புறவு உறவுகளை வளர்த்தல், சர்வதேச ஒத்துழைப்பை அடைதல் மற்றும் உறுப்பு நாடுகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் மையமாக செயல்படும் அரசியல் சர்வதேச அமைப்பாகும்.
- சான் பிரான்சிஸ்கோ மாநாடு முடிந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு, ஐக்கிய நாடுகள் சபை அதிகாரப்பூர்வமாக 1945 ஆம் ஆண்டு அக்டோபர் 24 – ஆம் தேதி தொடங்கியது, அந்த நாள் ஐநா தினம் என கொண்டாடப்படுகிறது.
- இது உலகின் மிகப்பெரிய சர்வதேச அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- ஐ.நா வின் தலைமையகம் நியூ யார்க் நகரத்தில் உள்ளது.
- இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, எதிர்கால உலகப் போர்களைத் தடுக்கும் நோக்கத்துடன் ஐ.நா நிறுவப்பட்டது.
- ஐ.நா சபையில் இந்தியாவின் தற்போதைய பிரதிநிதி டிஎஸ் திரிமூர்த்தி ஆவார்.
சர்வதேச சோலார் அலையன்ஸ் (ஐஎஸ்ஏ):
- சர்வதேச சோலார் அலையன்ஸ் (ஐஎஸ்ஏ) என்பது 120 – க்கும் மேற்பட்ட கையொப்பமிட்ட நாடுகளின் கூட்டணியாகும்.
- பெரும்பாலானவை சூரிய ஒளி நாடுகளாகும், இவை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ ட்ராபிக் ஆஃப் கேன்சர் மற்றும் மகர டிராபிக் இடையே உள்ளது.
- புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க சூரிய சக்தியின் திறமையான நுகர்வுக்கு வேலை செய்வதே கூட்டணியின் முதன்மை நோக்கமாகும்.
- ISA தலைமையகம் இந்தியாவின் ஹரியானாவில் உள்ளது.
இந்திய – மத்திய கிழக்கு – ஐரோப்பிய பொருளாதார கூட்டமைப்பு:
- இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (India-Middle East-Europe Economic Corridor (IMEC), ஆசியாவையும், ஐரோப்பாவையும் மத்திய கிழக்கு மற்றும் மத்தியத் தரைக்கடல் வழியாக இணைக்கும் பொருளாதார வழித்தடம் ஆகும்.
- இத்திட்டத்தை 2023- ல் முதன்முதலில் இந்தியா முன்மொழிந்தது.
- புது தில்லியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளை கடல், இரயில், சாலை வழியாக இணைக்கும் 6,000 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இப்பொருளாதார வழித்தடத்திற்கான திட்டம் அறிவிக்கப்பட்டது.
- இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பிய ஒன்றியம், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி நாடுகள் கையெழுத்திட்டது.
அக்டோபர் 7: உலக பருத்தி தினம்
- உலகளவில் பருத்தியின் முக்கியத்துவத்தை அறியும் வாய்ப்பை வழங்குவதற்காக உலகளவில் அக்டோபர் 7 – ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
உலக வாழ்விட தினம்: (அக்டோபர் முதல் திங்கள்)
- உலக வாழ்விட தினம் உலகம் முழுவதும் அக்டோபர் மாதத்தின் முதல் திங்கட்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
- இது டிசம்பர் 1985 – இல் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் அறிவிக்கப்பட்டது.
தகவல் துளிகள்:
- இந்தியாவிலேயே முதல் முறையாக உலக கவிஞா்கள் மாநாடு மதுரையில் நவம்பா் மாதம் 21 – ஆம் தேதி நடைபெறவுள்ளது.
- மாலத்தீவு நாட்டு அதிபா் முகமது மூயிஸ் ஆவார்.
- கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் 1971 – லும், சென்னை அணுமின் நிலையம் 1970 – லும் அமைக்கப்பட்டது.
- கலைஞா் நூற்றாண்டு பூங்கா சென்னை கதீட்ரல் சாலையில் செங்காந்தள் பூங்காவுக்கு அருகே திறக்கப்பட உள்ளது.
- சென்னை மெரீனாவில் நடைபெற்ற விமானப் படையின் சாகச நிகழ்ச்சியை, 6 லட்சத்துக்கும் அதிகமானோர் கண்டுகளித்த நிலையில், லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
- கரீபியன் கடற்பகுதியில் உருவான ஹெலீன் என்று பெயரிடப்பட்ட புயல், அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை தாக்கியது.
- சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையா் பிரிவில், அமெரிக்காவின் கோகோ கௌஃப் சாம்பியன் ஆனார்.