20th October Daily Current Affairs – Tamil

அமலாக்க இயக்குனரகம் (Enforcement Directorate):

  • அமலாக்கப் பிரிவு அல்லது அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate) என்பது இந்தியாவில் பணமோசடி தடுப்பு சட்டம் 2002 மற்றும் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் 1999 போன்ற பொருளாதாரச் சட்டங்களை கண்காணிக்கவும், நடவடிக்கைகளை மேற்கொள்வதும் இதன் பணியாகும்.
  • அமலாக்கப் பிரிவு, இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் வருவாய்த் துறையின் கீழ் இயங்கும் புலனாய்வு மற்றும் சட்ட அமலாக்க அமைப்பு ஆகும்.
  • அமலாக்க இயக்குனரகத்தில் இந்திய ரிசர்வ் வங்கி, செபி, வருமானவரி, சுங்கம் மற்றும் கலால் வரித்துறை அதிகாரிகள் ஆகியோர்களைக் கொண்டு இயங்குகிறது.
  • இது இந்திய அரசால் 11 மே 1956 அன்று நிறுவப்பட்டது.
  • வெளிநாட்டு பணப் பரிவர்த்தனைகளை கண்காணிக்கும் பொருட்டு இயற்றப்பட்ட அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் 1999, பணமோசடி தடுப்பு சட்டம், 2002 மற்றும் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம் ஆகியவைகளை நடைமுறைப்படுத்த அமலாக்க இயக்குநரகம் செயல்படுகிறது.
  • அமலாக்கப் பிரிவு இயக்குநரகத்தின் முதன்மையான மூன்று பணிகள், வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை மேலாண்மைச் சட்டம் (FEMA), மற்றும் கணக்கில் வராத பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதை தடுக்கும் சட்டம், 2002 (PMLA) மற்றும் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை அமல்படுத்துவதும், நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிப்பதேயாகும்.
  • தலைமை இயக்குநர் ஒருவர் தலைமையில், அமலாக்கப்பிரிவின் தலைமையிடம் புதுதில்லியில் அமைந்துள்ளது.

ஆயுள் காப்பீடு, மூத்த குடிமக்கள் மருத்துவக் காப்பீடு: (ஜிஎஸ்டி)

  • ஆயுள் காப்பீடு மற்றும் மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டு தவணைத் தொகைக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்களிக்க அமைச்சா்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.
  • இந்தப் பரிந்துரை தொடா்பான இறுதி முடிவு மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்படும்.
  • பிகார் துணை முதல்வர் சாம்ராட் சௌதரி தலைமையிலான 13 போ் கொண்ட அமைச்சா்கள் குழுவை கடந்த செப்டம்பா் மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் அமைத்தது.
  • தற்போது 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என 4 விகிதங்களில் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது.

தேசிய மகளிர் ஆணையத் தலைவராக விஜயா கிஷோர் ரஹத்கர் நியமனம்:

  • தேசிய மகளிர் ஆணையச் சட்டம் 1990 – ன் கீழ், தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக விஜயா கிஷோர் ரஹத்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மகாராஷ்டிர மாநிலம் ஒளரங்காபாதைச் சோ்ந்தவர் விஜயா கிஷோர் ரஹத்கர்.
  • ஜனவரி 1992 இல், இந்தியாவில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும், 1990 ஆம் ஆண்டு பெண்களுக்கான தேசிய ஆணையச் சட்டத்தின் கீழ், இந்திய அரசாங்கம் “தேசிய பெண்களுக்கான ஆணையம் (NCW)” என்ற ஒரு ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்கியது.
  • ஆகஸ்ட் 30, 1990 அன்று, ஜனாதிபதி மசோதாவை நிறைவேற்றினார், மேலும் இந்தியாவின் முதல் தேசிய பெண் ஆணையம் நடைமுறைக்கு வந்தது.
  • 1990 – இன் பெண்கள் சட்டம் NCW இல் குறைந்தபட்சம் நான்கு உறுப்பினர்களும் அதிகபட்சம் பதினொரு உறுப்பினர்களும் இருக்க வேண்டும், அவர்களில் குறைந்தபட்சம் ஒரு பெண் இருக்க வேண்டும்.
  • ஜெயந்தி பட்நாயக் முதல் தேசிய மகளிர் ஆணையத் தலைவரானார்.
  • சட்டம், தொழிற்சங்கவாதம், பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் வணிக மேலாண்மை, பெண்கள் செயல்பாடு, நிர்வாகம், கல்வி, பொருளாதார மேம்பாடு அல்லது சமூக நலன் ஆகிய துறைகளைச் சேர்ந்த ஐந்து உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.
  • அரசியலமைப்பின் தற்போதைய பிரிவுகள் மற்றும் பெண்களைப் பாதிக்கும் பிற சட்டங்கள் மற்றும் அத்தகைய சட்டத்தில் ஏதேனும் இடைவெளிகள், குறைபாடுகள் அல்லது குறைபாடுகள் ஆகியவற்றை மதிப்பாய்வு செய்து பரிந்துரைத்தல்.
  • பெண்களிடையே சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், அவர்களின் சட்டப்பூர்வ உரிமைகளைப் பயன்படுத்துவதற்கான அறிவு மற்றும் திறனை அவர்களுக்கு வழங்குதல்.

அக்டோபர் 20: உலக புள்ளியியல் தினம்

  • உலக புள்ளியியல் தினம் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் அக்டோபர் 20 அன்று கொண்டாடப்படுகிறது.
  • முதல் உலக புள்ளியியல் தினம் அக்டோபர் 20, 2010 அன்று அனுசரிக்கப்பட்டது.
  • இந்த ஆண்டு மூன்றாவது உலக புள்ளியியல் தினத்தை உலகம் கொண்டாடுகிறது.
  • உலகம் முழுவதும் தரவு நம்பகத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையின் முக்கியத்துவத்தை ஒப்புக்கொள்வதற்காக ஐக்கிய நாடுகளின் புள்ளியியல் ஆணையத்தால் இந்த நாள் உருவாக்கப்பட்டது.

தகவல் துளிகள்:

  1. ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்கக் கோரி, முதல்வா் ஒமா் அப்துல்லா தலைமையிலான அமைச்சரவை நிறைவேற்றிய தீா்மானத்துக்கு துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா ஒப்புதல் அளித்துள்ளார்.
  2. வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானில் 31 லட்சம் மக்களுக்கு காலரா நோய்த்தொற்று அபாயம் இருப்பதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.
  3. இலங்கையின் மலையகப் பகுதிகளில் வாழும் தமிழா்களின் கல்வித் திட்டத்துக்கு உதவும் வகையில், இந்தியாவின் நிதியுதவி இரட்டிப்பாக்கப்பட்டு ரூ17.22 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது.
  4. லண்டனில் நடைபெற்ற டபிள்யூஆர் செஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் அர்ஜுன் எரிகைசி வெற்றி பெற்று கோப்பையை வென்றார்.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these