நாடு தழுவிய கடலோர கண்காணிப்பு பயிற்சி:
- இந்திய கடற்படையின் தலைமையில், “கடலோர கண்காணிப்பு-24′ (சீ விஜில் 24) பயிற்சி நவம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் நடத்தப்படுவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
- 2008 – இல் மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்த இந்தப் பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- நாட்டின் சுமார் 11,098 கி.மீ கடற்கரையும், 24 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பிரத்யேக பொருளாதார மண்டலமும் கடலோரப் பகுதியில் உள்ளன.
- இந்த விரிவான பயிற்சி, மீனவ சமுதாயத்தினர் கடலோர மக்கள், பல்வேறு கடலோரப் பாதுகாப்பு உள்கட்டமைப்புகள் உள்ளிட்ட அனைத்து கடல்சார் பங்குதாரர்களையும் ஒரே நேரத்தில் ஈடுபடுத்தி அவர்களுக்கு கடல் வழியாக வரும் ஆபத்துகளை எதிர்கொள்வதற்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
- இந்த நடவடிக்கைகளை மேம்படுத்தக் கூடிய வகையில் இந்த “சீ விஜில்’ பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் 107 – ஆவது கூட்டம்:
- காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் 107 – ஆவது கூட்டம் தில்லியில் அதன் தலைவா் வினீத் குப்தா தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.
- தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிடையே காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பான பிரச்சனைகளை களைவதற்காக மத்திய அரசானது காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை (Cauvery Water Management Authority -CMA) அமைத்துள்ளது.
- மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்னைகள் சட்டம், 1956, பிரிவு 6A-ன் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, காவிரி நீர் மேலாண்மைத் திட்டத்தை மத்திய அரசு ஜூன் 1, 2018 அன்று, ‘காவிரி நீர் மேலாண்மை ஆணையம்’ அமைத்தது.
- ‘காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு’ காவிரி நதிநீர்ப் பிரச்னை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்.
- இதன் தலைவர் – மத்திய அரசால் நியமிக்கப்பட வேண்டும், அவர் ஐந்து ஆண்டுகள் அல்லது அறுபத்தைந்து வயது வரை பதவியில் இருப்பார்.
- இந்த காவிரி நதிநீர் ஆணையமானது ஓர் தலைவர், எட்டு உறுப்பினர்கள் மற்றும் ஓர் செயலாளரைக் கொண்டதாகும்.
ஜி20 உச்சி மாநாடு:
- பிரேஸிலில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமா் மோடி நவம்பர் 18 – ஆம் தேதி செல்கிறார்.
- ஜி20 என்பது இருபது உலக நாடுகள் மற்றும் நிதி வளங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டமைப்பாகும்.
- இவ்வமைப்பில் உலகின் 19 வளர்ச்சியடைந்த நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்புரிமை பெற்றுள்ளன.
- இந்த அமைப்பில் இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, பிரேசில், சீனா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், ரஷ்யா, தென்ஆப்பிரிக்கா, துருக்கி, தென்கொரியா, இத்தாலி, மெக்சிகோ, சவுதி அரேபியா, பிரான்ஸ், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
- ஜி 20 நாடுகளின் அமைப்பின் தலைமை பொறுப்பை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு சுழற்சி முறையில் வகித்து வருகிறது.
விண்வெளிசார் நூலுக்கு முதல்முறையாக புக்கர் பரிசு: சமந்தா ஹார்வே
- சமந்தா ஹார்வேக்கு 2024 – ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
- தனது படைப்பான ‘ஆர்பிட்டல்’என்ற நாவலுக்காக சமந்தா ஹார்வே கௌரவிக்கப்பட்டுள்ளார்.
- விண்வெளித்துறை சார்ந்ததொரு நூலுக்கு இத்தகைய கௌரவம் கிடைப்பது இதுவே முதல்முறையாகும்.
- லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமந்தா ஹார்வேக்கு புக்கர் பரிசளித்து கௌரவிக்கப்பட்டுள்ளது.
- சமந்தா ஹார்வே விருதுடன் ரொக்கமாக 50,000 யூரோ தொகையையும் பெற்றுள்ளார்.
நவம்பர் 14: குழந்தைகள் தினம்
- ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 – ஆம் தேதி இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
- இந்நாளில் குழந்தைகளின் உரிமைகள், பாதுகாப்பு, கல்வி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
- ஜவஹர்லால் நேரு நவம்பர் 14, 1889 அன்று உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் பிறந்தார்.
- ஜவஹர்லால் நேரு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரானார்.
- இந்தியாவில், ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
நவம்பர் 14: உலக சர்க்கரை நோய் தினம்
- நவம்பர் 14 – ஆம் தேதி உலக சர்க்கரை நோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
- இந்த நாளின் முதன்மை நோக்கம் நீரிழிவு நோயின் தாக்கம், அதன் தடுப்பு மற்றும் நீரிழிவு கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
தகவல் துளிகள்:
- நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே துளசியாப்பட்டினம் கிராமத்தில் ரூ 18.95 கோடியில் ஔவையார் மணிமண்டபத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.
- மெத்தனால் மற்றும் கரைப்பான்களை சட்ட விரோதமாகப் பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
- ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை அரியலூர் மாவட்டம், வாரணவாசி குழந்தைகள் மையத்தில் நவம்பர் 15 – ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்.
- குமமோட்டோ மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டி ஜப்பானில் நடைபெறுகிறது.