19th July Daily Current Affairs – Tamil

முதல்முறையாக வெளிநாட்டில் ‘மக்கள் மருந்தகம்’:

  • இந்தியாவின் முதல் வெளிநாட்டு மக்கள் மருந்தகத்தை (ஜன் ஔஷதி கேந்திரா) மோரீஷஸில் மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் திறந்து வைத்தார்.
  • இந்தியா-மோரீஷஸ் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்புக்கு குறிப்பாக முக்கியமான சுகாதாரத் துறை ஒத்துழைப்புக்கு எடுத்துகாட்டாக மக்கள் மருந்தகம் அந்நாட்டில் திறக்கப்பட்டிருக்கிறது.
  • மக்கள் அனைவருக்கும் மலிவு விலையில் மருந்துகள் கிடைப்பதை உறுதிப்படுத்த ‘மத்திய அரசின் மக்கள் மருந்தகம்’ கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு கடந்த 2015-ஆம் ஆண்டு இத்திட்டம் மேம்படுத்தப்பட்டு, தற்போது நாடு முழுவதும் சுமார் 10 ஆயிரம் மக்கள் மருந்தகங்கள் செயல்படுகின்றன.
  • இந்திய நிதியுதவி மருத்துவமனை திறப்பு:
  • மோரீஷஸின் கிராண்ட் போயிஸில் இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனையைப் பிரதமா் ஜகநாத்துடன் இணைந்து அமைச்சா் ஜெய்சங்கா் திறந்து வைத்தார்.
  • மோரீஷஸ் நாட்டு பிரதமா் பிரவிந்த் குமார் ஜகநாத்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஆா்.மகாதேவன், கோடீஸ்வா் சிங் பதவியேற்பு:

  • உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஆா்.மகாதேவன், என்.கோடீஸ்வா் சிங் ஆகியோர் பதவியேற்றனா். இதையடுத்து, உச்சநீதிமன்றம் தனது முழு பலத்தை 34 நீதிபதிகள் எட்டியது.
  • சென்னை உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த ஆா்.மகாதேவன், ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.கோடீஸ்வா் சிங் ஆகியோரை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது.
  • அதன்பேரில், இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக குடியரசுத் தலைவா் நியமித்தார்.
  • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆகும்.
  • இந்தியா இந்திய உச்ச நீதிமன்றம் ஜனவரி 28, 1950 அன்று அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட பிறகு உருவாக்கப்பட்டது.
  • இந்திய உச்ச நீதிமன்றம் இந்திய அரசியல் சட்டப்பிரிவு, பிரிவு 5-இன் கீழ் இந்தியாவின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட நீதிமன்றமாகவும் கீழ்நீதிமன்றங்களின், உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்யும் நீதிமன்றமாகவும் செயல்படுகின்றது.
  • இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதி விசாரணைக்கு உட்பட்ட அதிகாரங்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் 124 முதல் 147-இன் கீழ் எழுதப்பட்டுள்ளன.
  • மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால்.
  • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 32 –ஆவது கூட்டம்:

  • காவிரி மேலாண்மை ஆணையத்தின் 32 -ஆவது கூட்டம் ஜூலை 24 ஆம் தேதி கூட்டப்பட உள்ளது என ஆணையம் தெரிவித்துள்ளது.
  • காவிரி ஒழுங்காற்றுக் குழு (சி.டபிள்யு.ஆா்.சி) ஜூலை 12 – ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதிவரை தமிழகத்திற்கு நாள்தோறும் 1 டிஎம்சி தண்ணீரை காவிரியில் பிலுகுண்டுலுவில் விடுவிக்க பரிந்துரைத்தது.
  • தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிடையே காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பான பிரச்சனைகளை களைவதற்காக மத்திய அரசானது காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை (Cauvery Water Management Authority -CMA) அமைத்துள்ளது.
  • மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்னைகள் சட்டம், 1956, பிரிவு 6A-ன் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி காவிரி நீர் மேலாண்மைத் திட்டத்தை மத்திய அரசு ஜூன் 1, 2018 அன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைத்தது.
  • இந்த காவிரி நதிநீர் ஆணையமானது ஓர் தலைவர், எட்டு உறுப்பினர்கள் மற்றும் ஓர் செயலாளரைக் கொண்டதாகும்.

ஐரோப்பிய யூனியன் அமைப்பு:

  • ஐரோப்பிய யூனியனின் நிர்வாகப் பிரிவான ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக உா்சுலா வோண்டொ் லெயென் மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டார்.
  • ஐரோப்பிய யூனியன் அமைப்பு 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட அமைப்பாகும்.
  • 1992 – ல் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது, இது மாசுடிரிச் ஒப்பந்தம் என்றும் பரவலாக அறியப்படுகிறது.
  • பதினைந்து உறுப்பு நாடுகள் யூரோ எனப்படும் பொதுவான நாணய முறையையும் ஏற்றுக்கொண்டுள்ளன.

தகவல் துளிகள்:

  1. வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் ‘ஃபாஸ்டேக்’ ஒட்டாவிட்டால் இருமடங்கு கட்டணம் வசூலிக்கலாம் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
  2. கொமரோஸ் நாட்டைச் சோ்ந்த எண்ணெய் கப்பல் ஓமன் நாட்டின் துகம் துறைமுகத்தில் இருந்து தென்கிழக்கில் மூழ்கியது, இது ‘இந்தியாவின் ஐஎன்எஸ் டெக் போர்க் கப்பலால் மீட்கப்பட்டது.
  3. என்ஐஏ சிறப்பு வழக்குரைஞராக பி.என்.பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
  4. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக உா்சுலா வோண்டொ் லெயென் தோ்ந்தெடுக்கப்பட்டார்.
  5. ஆடவா் கால்பந்து அணிகளுக்கான ஃபிஃபாவின் சா்வதேச தரவரிசையில், ஆா்ஜென்டீனா முதலிடத்தை உறுதி செய்துகொண்டது. ஸ்பெயின் 3-ஆவது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.
  6. தென் அமெரிக்க கண்டத்தில் 16-ஆவது முறையாக கோபா அமெரிக்கா கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்தது ஆா்ஜென்டீனா.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these