காவிரியில் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் விடுவிப்பு:
- காவிரியில், தமிழகத்திற்கு விடுவிக்கப்பட வேண்டிய அளவை விட கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதாக காவிரி நீர் மேலாண்மை ஆணைய (சி.டபிள்யு.எம்.ஏ) கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
- தில்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 32 -ஆவது கூட்டம் நடைபெற்றது.
- மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்னைகள் சட்டம், 1956, பிரிவு 6 A – ன் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, காவிரி நீர் மேலாண்மைத் திட்டத்தை மத்திய அரசு ஜூன் 1, 2018 அன்று, ‘காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது.
- தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிடையே காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பான பிரச்சனைகளை களைவதற்காக, காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை (Cauvery Water Management Authority -CMA) அமைத்துள்ளது.
- இந்த காவிரி நதிநீர் ஆணையமானது ஓர் தலைவர், எட்டு உறுப்பினர்கள் மற்றும் ஓர் செயலாளரைக் கொண்டதாகும்.
- இந்தக் எட்டு உறுப்பினர்களுள் இருவர் முழு நேர உறுப்பினராவர்.
குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP):
- குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) என்பது சில விவசாயப் பொருட்களுக்கு அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச விலையாகும், இதன் விலையில் வெளிச் சந்தை விலைகள் செலவை விட குறைவாக இருந்தால் நேரடியாக விவசாயிகளிடமிருந்து பொருட்கள் வாங்கப்படும்.
- MSP என்பது விவசாயிகளின் பொருட்களின் விலைகள் கடுமையாக வீழ்ச்சியடைவதற்கு எதிராக காப்பீடு செய்வதற்கும் இழப்புகளைத் தடுப்பதற்கும் அரசாங்கத்தின் தலையீட்டின் ஒரு வடிவமாகும்.
- இந்திய அரசாங்கம் 24 பொருட்களுக்கு வருடத்திற்கு இரண்டு முறை MSP யை நிர்ணயம் செய்கிறது.
- அபரிமிதமான உற்பத்தியின் ஓராண்டில் விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகளைக் காக்க அரசு இதைச் செய்கிறது.
- சந்தை விலை அறிவிக்கப்பட்ட MSP க்குக் கீழே குறையும் போது, அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து MSP விலையில் முழு அளவையும் வாங்கும்.
- விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான கமிஷன் (CACP) குறைந்தபட்ச ஆதரவு விலையை தீர்மானிக்கிறது.
- மொத்தம் 22 பயிர்களுக்கு அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்குகிறது.
பாலிஸ்டிக் ஏவுகணைகளை தாக்கும் சோதனை:
- இது 5,000 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை அழிக்கும் திறன் கொண்ட பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை, இடைமறித்து தாக்கும் இரண்டாம் நிலை ஏவுகணை சோதனை நடைபெற்றது.
- பூமியின் வளிமண்டலத்துக்குள் உள்ள இலக்கை இடைமறித்து அழிக்கும் இரண்டாம் நிலை ஏவுகணை, விண்ணில் ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
- ஒடிஸா மாநிலம் சாண்டீபூரில் உள்ள ஒருங்கிணைந்த பரிசோதனை மையத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, அனைத்து அம்சங்களிலும் வெற்றிகரமாக செயல்பட்டது.
- இந்தப் பரிசோதனை 5,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை அழிக்கும் திறன் கொண்ட பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை, இடைமறித்து தாக்கும் உள்நாட்டு திறனை எடுத்துரைத்தது.
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.
‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம்: தமிழக அரசு
- மாணவிகளைப் போன்று மாணவா்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தவுள்ளது.
- உயா் கல்விக்கு செல்லும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம், ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது.
‘விடியல்’ திட்டம்:
- முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், முதல் திட்டமாக மகளிருக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம்- விடியல் பயணம் திட்டத்தைச் செயல்படுத்திட நடைமுறைப்படுத்தினார்.
- தொழில் மனைகளில் மகளிருக்கு 10 சதவீத மனைகளை ஒதுக்கீடு செய்து பெண்களைத் தொழில்முனைவோர் ஆக்கி தமிழ்நாடு முழுவதிலும் சுய உதவி குழுக்களாகப் பரிணமித்து இன்று கிராமப்புற மகளிர் இடையே பொருளாதாரப் புரட்சியை ஏற்படுத்தி வெற்றியைக் கண்டுள்ளது.
- கனடா நாட்டு பிரதமா் காலை உணவுத் திட்டத்தை தம்முடைய நாட்டுப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தியுள்ளார்.
- காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், புதுமைப் பெண் ஆகிய மூன்று திட்டங்கள் அண்மையில் பிரிட்டன் நாடாளுமன்றத் தோ்தலின்போது, தொழிலாளா் கட்சியின் தோ்தல் அறிக்கையில் எதிரொலித்து, அக்கட்சி வெற்றி பெற்றது.
பொற்பனைக்கோட்டை அகழாய்வில் சூது பவள மணிகள் கண்டெடுப்பு:
- புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் கடந்தாண்டு நடைபெற்ற முதல் கட்ட அகழாய்வில், கழிவுநீர் வாய்க்கால் போன்ற செங்கல் தளம், வட்ட வடிவ செங்கல் கட்டுமானம் போன்றவை கண்டறியப்பட்டன.
- தங்க மூக்குத்தி, எலும்பு முனைக் கருவிகள் உள்பட 500-க்கும் மேற்பட்ட தொல்பொருள்களும் கிடைத்தன.
- இதன் தொடர்ச்சியாக கடந்த ஜூன் 18 ஆம் தேதி இரண்டாம் கட்ட அகழாய்வை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- இரண்டாம் கட்ட அகழாய்வில், 2 சூதுபவள மணிகளும், அக்கேட் வகை மணி ஒன்றும் இன்று கண்டெடுக்கப்பட்டது.
மருங்கூர் அகழாய்வில் செம்பினாலான அஞ்சனக்கோல் கண்டெடுப்பு:
- கடலூர் மாவட்டம் மருங்கூர் அகழாய்வில் இராசராசன் காலச் செம்புக் காசு, சுடுமண்ணால் ஆன வட்டச்சில்லுகள், பச்சை நிறக் கண்ணாடி மணி, ரெளலட்டட் வகைப் பானை ஓடுகள் போன்ற தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டன.
- கண்களுக்கு மைத்தீட்டுவதற்கு உபயோகப்படுத்தப்படும் செம்பினால் ஆன அஞ்சனக்கோல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் முதல் கூட்டு பயிற்சி:
- ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் (எஸ்சிஒ) அங்கம் வகிக்கும் இந்தியா உள்பட அனைத்து உறுப்பு நாடுகளின் பாதுகாப்புப் படையினா், சீனாவில் முதன்முறையாக கூட்டு பயங்கரவாத எதிரப்புப் பயிற்சியை மேற்கொண்டனா்.
- இன்டராக்ஷ்ன் – 2024 எனும் இந்த பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சி வடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் உய்குா் தன்னாட்சிப் பகுதியில் நடத்தப்பட்டது.
- பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில், கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் உறுப்பு நாடுகளின் திறன்கள் மற்றும் இயங்குதன்மையை மேம்படுத்துவதற்காக நடத்தப்பட்ட இந்த நேரடி பயிற்சியில் இந்தியா உள்பட அனைத்து உறுப்பு நாடுகளும் முதல்முறையாக பங்கேற்றன.
- சீனா, இந்தியா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினா்களாக கொண்ட எஸ்சிஒ அமைப்பில் பெலாரஸ் 10-ஆவது அதிகாரபூா்வ உறுப்பு நாடாக சேர்ந்தது.
ஜூலை 25: உலக கருவியலாளர் தினம்
- லூயிஸ் ஜாய் பிரவுன் IVF அல்லது கருவிழி கருத்தரித்தல் மூலம் கருத்தரித்த முதல் குழந்தை ஆனார், எனவே 25 ஜூலை 1978, ஒவ்வொரு ஆண்டும் உலக கருவியலாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
தகவல் துளிகள்:
- ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் நீடா அம்பானி , பாரிஸில் நடைபெறும் உலகளாவிய ஒலிம்பிக் அமைப்பின் 142 ஆவது அமர்வில், இந்தியாவிலிருந்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- எஸ்சிஒ அமைப்பில் 10-ஆவது அதிகாரபூா்வ உறுப்பு நாடாக பெலாரஸ் சேர்ந்துள்ளது.
- காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார்.