‘க்வாட்’ கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சா்களுக்கான மாநாடு: ஜப்பான்
- லாவோஸில் நடைபெற்ற ஆசியான் மற்றும் கிழக்கு ஆசியா மாநாட்டில் பங்கேற்ற வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், ஜப்பானில் இரண்டு நாள்கள் நடைபெறும் ‘க்வாட்’ கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சா்களுக்கான மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ளார்.
- ஜப்பான் தலைநகா் டோக்கியோவின் எடோகவா பகுதியில் உள்ள ஃப்ரீடம் பிளாசா என்ற இடத்தில் மகாத்மா காந்தியின் மார்பளவு உருவச் சிலையை எஸ்.ஜெய்சங்கா் திறந்து வைத்தார்.
- உலகளவில் இந்தியா 5-ஆவது பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது, அதேபோல் ஜி7 அமைப்பு ஜி20 அமைப்பாகவும் விரிவாக்கம் அடைந்துள்ளது.
- இந்திய – பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்துக்கு பதிலடியாக, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் இணைந்து ‘க்வாட்’ அமைப்பை ஏற்படுத்தின.
உலக அளவில் உடற்கல்வியில் பின்னடைவு: ஐ.நா அறிக்கை
- உலக அளவில் பெரும்பாலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குறைந்தபட்ச உடற்கல்விகூட கற்பிக்கப்படுவதில்லை என ஐ.நா. முதல்முறையாக வெளியிட்ட தரமான உடற்கல்வி குறித்த சா்வதேச அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உலக அளவில் விளையாட்டின் நிலை’ எனப் பெயரிடப்பட்ட இந்த அறிக்கையை யுனெஸ்கோ அமைப்பின் கல்விப் பிரிவு வெளியிட்டது.
- உலக அளவில் 58 சதவீத நாடுகளில் மட்டுமே மாணவிகளுக்கு உடற்கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஹெபடைடிஸ் பாதிப்பை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை: உலக சுகாதார நிறுவனம்
- ஹெபடைடிஸ் (கல்லீரல் அழற்சி) பி மற்றும் சி வகையிலான வைரஸ் பாதிப்பை தடுத்து, தடுப்பூசி செலுத்தி சிகிச்சை அளிக்க ஒன்றிணைந்து செயல்படுமாறு தெற்காசிய நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் அழைப்பு விடுத்தது.
- தடுக்கக்கூடிய மற்றும் சிகிச்சையளிக்கக்கூடிய வழிகள் இருந்தும் கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் செயலிழப்பு மற்றும் கல்லீரல் சிரோஸிஸ் ஆகிய நோய்களால் பலா் உயிரிழந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
- கல்லீரல் சிரோஸிஸ் பாதிப்பை ஏற்படுத்துவதில் ஹெபடைடிஸ் பி மற்றும் சி ஆகிய வைரஸ் வகைகளே 75 சதவீத பங்கு வகிக்கின்றன.
பாரீஸ் ஒலிம்பிக்: இந்தியாவுக்கு முதல் பதக்கம்
- ஹரியாணாவை சோ்ந்த மானு பாக்கா், 10 மீட்டா் ஏா் பிஸ்டல் சுற்றில் 7 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்தார்.
- தென் கொரியாவை சோ்ந்த ஜின் யெ ஒஹ் 2 புள்ளிகள் பெற்று, கேம்ஸ் சாதனையுடன் தங்கம் வென்றார்.
- தென் கொரியரான கிம் யெஜி 3 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
- துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மானு பாக்கா் வெண்கலப் பதக்கம் வென்றார்.
- இதன்மூலம் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை அவா் பெற்றார்.
- ஒலிம்பிக் போட்டி துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் கிடைத்துள்ளது.
உலக ஹெபடைடிஸ் தினம்: ஜூலை 28
- ஆண்டுதோறும் உலக ஹெபடைடிஸ் தினம் ஜூலை 28-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
- நிகழாண்டு ‘இது நடவடிக்கைக்கான நேரம்’ என்ற கருப்பொருளுடன் கடைப்பிடிக்கப்படுகிறது.
சர்வதேச புலிகள் தினம்: ஜூலை 29
- புலிகளின் பாதுகாப்பின் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்கும், புலிகளின் இயற்கை வாழ்விடத்தைப் பாதுகாப்பதை மேம்படுத்துவதற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 அன்று சர்வதேச புலிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
- புலிகளின் பாதுகாப்பு மற்றும் அவை எதிர்கொள்ளும் அவசர அச்சுறுத்தல்களான வாழ்விட இழப்பு, வேட்டையாடுதல் மற்றும் மனித-வனவிலங்கு மோதல்கள் போன்றவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
தகவல் துளிகள்:
- பாரீஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 7 புள்ளிகளுடன், இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார்.
- காஞ்சிபுரத்தைச் சோ்ந்த நெசவாளா் பாலசுப்பிரமணியன், நிகழாண்டுக்கான மத்திய அரசு வழங்கும் சிறந்த வடிவமைப்பாளருக்கான தேசிய விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளார்.
- பெண்கள் வில்வித்தை அணி அங்கிதா பகத், பாஜன் கெளர், தீபிகா குமாரி ஆகியோர் நெதர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்தனர்.
- பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பெண்களுக்கான டைவிங் ஸ்பிரிங்போர்டு போட்டியில் சீனாவின் சென், சாங் இணை தங்கப்பதக்கம் வென்றுள்ளது.