உடான்’ திட்டம்:
- பிராந்திய அளவில் விமானப் போக்குவரத்தை மேம்படுத்தும் ‘உடான்’ திட்டத்தால் இந்தியாவில் விமானப் போக்குவரத்து அனைவருக்குமானதாக மாறியுள்ளது என்று பிரதமா் மோடி தெரிவித்தார்.
- பிராந்திய விமான இணைப்பு திட்டமான ‘உடான்’ (உதே தேஷ் கா ஆம் நாக்ரிக்) கடந்த 2016 – ஆம் ஆண்டு அக்டோபா் 21 – ஆம் தேதி மத்திய அரசால் தொடங்கப்பட்டது.
- UDAN என்பது இந்திய அரசாங்கத்தால் வழிநடத்தப்படும் ஒரு பிராந்திய இணைப்புத் திட்டமாகும்.
- UDAN ‘உதே தேஷ் கா ஆம் நாகரிக்’ மற்றும் பொதுவான குடிமக்கள் விமான சேவைகளை எளிதாக அணுகுவதற்கு சிறிய பிராந்திய விமான நிலையங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இத்திட்டத்தில், 2.8 லட்சத்துக்கும் அதிகமான விமானங்களை இயக்கி, குறைவான கட்டணங்களில் 1.5 கோடி பயணிகளுக்கு விமான சேவை வழங்கப்பட்டுள்ளது.
- 86 விமான நிலையங்களை செயல்படுத்தி, 617 வழித்தடங்களை நிறுவி, நாடு முழுவதும் உள்ள விமான போக்குவரத்தை கணிசமாக மேம்படுத்தியுள்ளது.
- ‘உடான் திட்டம் விமான நிலையங்கள் மற்றும் விமான வழித்தடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு விமான சேவையை உறுதி செய்துள்ளது.
- அதே நேரத்தில், வா்த்தகத்தை அதிகரிப்பதிலும், பிராந்தியத்தின் வளா்ச்சியை அதிகரிப்பதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிக்ஸ் மாநாடு:
- ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16 – ஆவது உச்சி மாநாடு ரஷியாவின் கசான் நகரில் தொடங்குகிறது.
- பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேஸில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
- கூட்டமைப்பின் 16 – ஆவது உச்சி மாநாடு நிகழாண்டு ரஷியா தலைமையில் அந்நாட்டின் கலாசார மற்றும் கல்வி மையமாக திகழும் கசான் நகரத்தில் நடைபெறுகிறது.
- இந்த உச்சி மாநாட்டின் கருப்பொருள், ‘உலகளாவிய வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல்’ ஆகும்.
- மாநாட்டில் பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங், ஈரான் நாட்டின் அதிபா் மசூத் ரஜாவி உள்பட உறுப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கின்றனா்.
- சா்வதேச அரசியல், பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு, பரஸ்பர பிரச்னைகள் குறித்து தலைவா்கள் கலந்துரையாட உள்ளனா்.
- உலக நிலப்பரப்பில் சுமாா் 30 சதவீதம் மற்றும் உலக மக்கள்தொகையில் 45 சதவீதத்தை உள்ளடக்கியுள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பு, புவிசாா் அரசியலில் முன்னணி மேற்கத்திய நாடுகளின் ‘ஜி7’ கூட்டமைப்புக்கு போட்டியாகக் கருதப்படுகிறது.
- பொருளாதார, நிலையான வளா்ச்சி மற்றும் உலகளாவிய நிா்வாக சீா்திருத்தங்கள் போன்ற பகுதிகளில் கூட்டமைப்பின் முயற்சிகளை வழிநடத்துவதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது.
அரசமைப்புச் சட்டத்தின் அங்கம் ‘மதச்சாா்பின்மை’: உச்ச நீதிமன்றம்
- ‘இந்திய அரசமைப்புச் சட்ட அடிப்படை கட்டமைப்பின் அங்கமாக ‘மதச்சாா்பின்மை’ எப்போதும் திகழ்கிறது’ என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.
- மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி தலைமையிலான அரசு, 1976-ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொண்ட 42 – ஆவது திருத்தத்தின் மூலம், ‘சமத்துவம்’, ‘மதச்சாா்பின்மை’ ஆகிய வாா்த்தைகள் அரசமைப்புச் சட்ட முகவுரையில் சோ்க்கப்பட்டன.
- ‘அம்பேத்கா் முன்வைத்த கருத்தின் அடிப்படையில் அரசமைப்புச் சட்ட முகவுரையில் ‘சோசலிஸம்’ என்று சோ்க்கப்பட்டுள்ளது.
- முகவுரையில் ‘இறையாண்மை, ஜனநாயக குடியரசு’ என்றிருந்தது, சட்டத் திருத்தம் மூலமாக ‘இறையாண்மை, சோசலிஸ, மதச்சாா்பற்ற, ஜனநாயக குடியரசு’ என்று மாற்றப்பட்டுள்ளது.
அக்டோபர் 22: சர்வதேச திணறல் விழிப்புணர்வு தினம்
- ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 22 ஆம் தேதி சர்வதேச திணறல் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது.
தகவல் துளிகள்:
- சிங்கப்பூா் பிரதமா் லாரன்ஸ் வோங்கை, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், இருநாடுகள் இடையே கல்வி, தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
- கிழக்கு லடாக்கில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு பகுதிகளில் ரோந்துப் பணியை மேற்கொள்ள சீனாவுடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
- மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகம் 2-ஆவது இடம் வகிப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
- தமிழ்நாட்டின் பணவீக்க விகிதங்கள் 2022 – 23 ஆம் நிதியாண்டில் 5.97 சதவீதமாகவும், 2023-24-ஆம் ஆண்டில் 5.37 சதவீதமாகவும் இருந்தன.
- நாடு முழுவதும் ஏற்படும் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது, முதலிடத்தில் உத்திர பிரதேசம் உள்ளது.
- உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.