ரூ 12,850 கோடியில் சுகாதாரத் துறை திட்டங்கள்:
- சுகாதார உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் ரூ12,850 கோடியிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
- சுகாதார உள்கட்டமைப்பு திட்டங்களில் முக்கியமாக, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.
- 11 துணை சுகாதார நிறுவனங்களில் ட்ரோன் சேவையும் பயன்பாட்டுக்கு வருகிறது.
- கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி செயல்முறையை டிஜிட்டல் மயமாக்கும் யு-வின் தளத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
- ஒடிஸா மாநிலம் புவனேசுவரில் உள்ள கோதபட்னாவில் மத்திய மருந்து பரிசோதனை ஆய்வகத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
- ஒடிஸா மாநிலம் கோர்தா, சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ’யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு’ பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்.
- மருந்துகள், தீவிர சிகிச்சை உபகரணங்கள் உள்ளிட்ட பல உயர்தர மருத்துவ சாதனங்களை உற்பத்தி செய்யும் வகையில் 5 திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
- ஹைதராபாத், பெங்களூரு, குஜராத்தின் வாபி, ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா, ஹிமாசலப் பிரதேசத்தின் நலகர் ஆகிய இடங்களில் மருத்துவ சாதனங்கள் மற்றும் மருந்து உற்பத்தி திட்டங்கள் தொடங்கப்படுகிறது.
‘டிஸ்லெக்சியா’ விழிப்புணா்வு:
- கற்றல் குறைபாடு (டிஸ்லெக்சியா) குறித்து நாடு முழுவதும் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகை, நாடாளுமன்ற கட்டடம், இந்தியா கேட் ஆகியவை சிவப்பு வண்ணத்தில் விளக்குகளால் ஓளிரவிடப்பட்டன.
- ‘சேஞ்ச்இங்க்’ அறக்கட்டளை சார்பில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.
- நாட்டின் மக்கள்தொகையில் 3.5 கோடி மாணவா்கள் உள்பட 20 சதவீதம் பேருக்கு கற்றல் குறைபாடு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
- மேலும் பிகார் தலைநகா் பாட்னா, ஜார்க்கண்ட் தலைநகா் ராஞ்சி, ராஜஸ்தான் தலைநகா் ஜெய்ப்பூா், நாகாலாந்து தலைநகா் கொஹிமா, ஹிமாசல பிரதேச தலைநகா் சிம்லா, மகாராஷ்டிர தலைநகா் மும்பை இதேபோன்ற விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
டாடா விமான உற்பத்தி ஆலை: இந்தியா – ஸ்பெயின்
- குஜராத்தில் இந்திய ராணுவ விமானங்களை தயாரிக்கும் டாடா விமான உற்பத்தி ஆலையை பிரதமர் மோடியும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் இணைந்து திறந்து வைத்தனர்.
- குஜராத் மாநிலம், வதோதராவில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த ஆலை, இந்திய ராணுவத்துக்கான விமானங்களை தயாரிக்கும் நாட்டின் முதல் தனியார் விமான உற்பத்தி ஆலையாகும்.
- இந்த நிறுவனத்தை கட்டுவதற்கு கடந்த 2022 – ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியிருந்தார்.
‘பாதம் பாதுகாப்போம்’ திட்டம்:
- சா்க்கரை நோயாளிகளுக்கான ‘பாதம் பாதுகாப்போம்’ திட்டத்தை தமிழகத்தின் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் தொடங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
- ‘பாதம் பாதுகாப்போம்’ திட்டம் சா்க்கரை நோய் பாத பாதிப்புகளை தவிா்ப்பதற்கும், கால் இழப்புகள் ஏற்படுவதை தடுப்பதற்கும் வழிவகை செய்கிறது.
- மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இத்திட்டம் கட்டமைக்கப்பட்டு ஒருங்கிணைந்த பாத மருத்துவ சேவைகளை 36 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மூலம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
- நாட்டிலேயே இது போன்ற முன்னெடுப்பை அரசு மேற்கொள்வது இதுவே முதல் முறை.
- பத்து கோடிக்கும் அதிகமான நோயாளிகள் சா்க்கரை நோயால் இந்தியாவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
- தமிழகத்தில் 80 லட்சம் போ் சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
- சா்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் பாத உணா்விழப்பு மற்றும் ரத்த நாள அடைப்புகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.
- இத்திட்டம் தஞ்சாவூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு இதுவரை 1.65 லட்சம் நபா்களுக்கு பாத பாதிப்பு கண்டறிதல் மேற்கொள்ளப்பட்டது.
- அதைத் தொடா்ந்து மாநிலம் முழுமைக்கும் தற்போது இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.
தகவல் துளிகள்:
- மறைந்த முன்னாள் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் அக்டோபர் 31-ஆம் தேதி ’தேசிய ஒற்றுமை நாளாக’ கொண்டாடப்படுகிறது.
- தேசிய ஒற்றுமை நாளையொட்டி நடத்தப்படும் ‘ஒற்றுமைக்கான ஓட்டம்’, புதுதில்லியில் மாரத்தான் ஓட்டத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடக்கி வைத்தார்.
- நிகழ் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வளா்ச்சியடையும் என்று மத்திய நிதியமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வெப்ப அலையை மாநிலப் பேரிடராக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது, வெப்ப அலையால் உயிரிழப்பு ஏற்பட்டால் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு மாநிலப் பேரிடர் நிதியிலிருந்து ரூ. 4 லட்சம் நிவரணத் தொகை அளிக்கப்படும்.
- ஆஸ்திரியாவில் நடைபெற்ற வியன்னா ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில், பிரிட்டனின் ஜேக் டிரேப்பா் தனது முதல் சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றினார்.