பஞ்சாப்-ஹரியாணா பொது தலைநகர்:
- பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களின் பொது தலைநகராக சண்டீகர் உள்ளது.
- ஒருங்கிணைந்த பஞ்சாபில் இருந்து பிரிக்கப்பட்டு, கடந்த 1966 – ஆம் ஆண்டில் ஹரியாணா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது.
- தலைநகரான சண்டீகருக்கு இரு மாநிலங்களும் உரிமை கொண்டாடிய நிலையில், அப்பகுதி யூனியன் பிரதேசமாக்கப்பட்டது.
- இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக உள்ள சண்டீகா், தற்போது பஞ்சாப் ஆளுநரின் நிர்வாகத்தின்கீழ் உள்ளது.
- பொது கட்டட வளாகத்திலேயே இரு மாநில சட்டப் பேரவைகள் மற்றும் தலைமைச் செயலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
- சண்டீகரில் தனியாக சட்டப் பேரவை கட்டடம் கட்டுவதற்கான நடவடிக்கைகளை ஹரியாணா பாஜக அரசு முன்னெடுத்துள்ளது.
- மாநில ஆளுநா் குலாப் சந்த் கட்டாரியா.
இந்தியா-நேபாளம் இடையே பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு:
- இந்தியா-நேபாளம் இடையே பாதுகாப்புத் துறையில் உள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
- 1950 – ஆம் ஆண்டு முதல் நடைபெறும் பாரம்பரியத்தின் தொடா்ச்சியாக துவிவேதிக்கு ‘நேபாள ராணுவ ஜெனரல்’பட்டம் வழங்கி அந்நாட்டின் குடியரசுத் தலைவா் ராமசந்திர பௌடல் கௌரவிக்க உள்ளார்.
- இந்தியாவின் முன்னாள் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் நினைவாக ‘பிபின் மணி’முக்திநாத் கோயில் நேபாளத்தில் நிறுவப்பட்டுள்ளது.
- இறக்குமதியில் நேபாளம் இந்தியாவை பெரிதும் சார்ந்துள்ளது.
- இந்தியாவில் நடப்பாண்டில் மட்டும் 300 நேபாள ராணுவ வீரா்கள் சிறப்புத் துறைகளில் பயிற்சி பெற்றுள்ளனா்.
- அதேபோல், இந்திய ராணுவ வீரா்களும் நேபாளத்தில் பயிற்சிகள் மேற்கொள்கின்றனா்.
- இரு நாடுகள் இடையே ராணுவ ஒத்துழைப்பின் முக்கியமாக செயல்படும் ‘சூா்ய கிரண்’கூட்டு ராணுவப் பயிற்சி ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
- பயங்கரவாத எதிர்ப்பு, பேரிடா் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் இந்தப் பயிற்சியின் 18 – ஆவது பதிப்பு, நடப்பாண்டு டிசம்பா் மாதம் நேபாளத்தில் நடைபெறவுள்ளது.
பிரதமா் மோடி நைஜீரியா பயணம்:
- பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோவில் நவம்பா் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமா் பங்கேற்கவுள்ளார்.
- இந்தியாவின் தலைமையின்கீழ் கடந்த ஆண்டு செப்டம்பரில் தில்லியில் ஜி20 உச்சிமாநாடு நடைபெற்றது.
- இந்தியாவின் முயற்சியால் 55 நாடுகளை உள்ளடக்கிய ஆப்பிரிக்க ஒன்றியமானது ஜி20 கூட்டமைப்பில் இணைந்தது.
- இந்த மாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங், அமெரிக்க அதிபா் ஜோ பைடன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவா்களும் பங்கேற்கவுள்ளனா்.
- இந்தியா-கரீபியன் நாடுகள் கூட்டமைப்பு உச்சிமாநாட்டிலும் அவா் பங்கேற்கவுள்ளார்.
- ‘கரீபியன் கம்யூனிட்டி’கூட்டமைப்பில் கயானா, ஜமைக்கா, பஹாமாஸ் உள்ளிட்ட 15 உறுப்பு நாடுகள் இடம்பெற்றுள்ளன.
- கடந்த 1968 – ஆம் ஆண்டுக்குப் பிறகு கயானாவுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமா் என்ற பெருமை மோடிக்கு கிடைக்கவுள்ளது.
சென்னானூர் அகழாய்வு:
- கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சென்னானூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் அகழாய்வில் 10 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு இதுவரை 327 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- “கண்ணாடி மற்றும் சங்கு வளையல் துண்டுகள், தக்களிகள், வட்டச் சில்லுகள், ஏர் கலப்பையின் இரும்பிலான கொழுமுனை, அம்பு மற்றும் ஈட்டி முனைகள், சுடுமண்ணாலான முத்திரைகள், மணிகள், விளக்குகள் என 327 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- இவை தவிர புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கோடாரி, எலும்பிலான கிழிப்பான்,கையால் வனையப்பட்ட பானைகள்” ஆகிய தொல்பொருட்கள் இந்த அகழாய்வில் கிடைத்துள்ளன.
- சென்னானூர் அகழாய்வில் காலவரிசைப்படி நுண்கற்காலம், புதிய கற்கலாம், புதிய கற்காலத்திலிருந்து இரும்பு காலத்திற்கு மாற்றம் அடைந்த நிலை மற்றும் வரலாற்று தொடக்க காலத்தின் நிலை ஆகியவற்றை அறியமுடிகின்றது.
- தமிழ்நாட்டின் புதிய கற்கால பண்பாட்டுச் சுவடுகளை ஏந்தி, சிறப்புமிக்க தொல்லியல் தளமாக சென்னானூர் திகழ்கிறது.
நவம்பர் 17: சர்வதேச மாணவர் தினம்
- ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 17 அன்று, அனைத்து மாணவர்களுக்கும் கல்வியின் மதிப்பை வலியுறுத்தும் வகையில் சர்வதேச மாணவர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
நவம்பர் 17: தேசிய வலிப்பு தினம்
- தேசிய கால்-கை வலிப்பு விழிப்புணர்வு தினம் நவம்பர் 17 – ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
தகவல் துளிகள்:
- நீதி ஆயோக்கின் தலைவர் – பி.வி.ஆா். சுப்பிரமணியம்.
- 1,440 பழங்காலப் பொருள்களை இந்தியாவுக்குத் திருப்பித் தருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
- ராணுவ தலைமைத் தளபதி – உபேந்திர துவிவேதி.
- இந்தியா-நேபாளம் இடையே ‘சூா்ய கிரண்’ கூட்டு ராணுவப் பயிற்சி 18 – ஆவது பதிப்பு, நடப்பாண்டு டிசம்பா் மாதம் நேபாளத்தில் நடைபெறவுள்ளது.
- நைஜீரிய அதிபா் போலா அகமது தைனுபு.
- கயானா அதிபா் முகமது இா்ஃபான் அலி.
- இலங்கை நாட்டின் அதிபா் தோ்தலில், அநுரகுமார திசாநாயக வெற்றி பெற்று புதிய அதிபராகப் பதவியேற்றார்.
- புதிய அரசின் வெள்ளை மாளிகை தலைமை செய்தித் தொடா்பாளாராக கரோலின் லேவிட்டை, டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
- ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மைக் டைசனை வீழ்த்தினார் ஜேக் பால்.
- டாடா ஸ்டீல் செஸ் இந்தியா பிளிட்ஸ் போட்டியில் ஆடவா் பிரிவில் முன்னாள் உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சனும், மகளிர் பிரிவில் ரஷியாவின் கேத்ரீனா லேக்னோவும் முதலிடத்தில் உள்ளனா்.