இந்தியாவின் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்:
- ஐரோப்பிய யூனியன் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவின் தடையற்ற வா்த்தக ஒப்பந்தகளுக்கான (எஃப்டிஏ) பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது.
- ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூா், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுடன் ஏற்கெனவே இந்தியா தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது.
- ஐரோப்பிய யூனியன், பிரிட்டன் மட்டுமின்றி ஆஸ்திரேலியா, பெரு, இலங்கை, ஓமன் ஆகிய நாடுகளுடனும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.
- தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபடும் இரு நாடுகள், இறக்குமதி-ஏற்றுமதி வரியைக் குறைப்பதுடன் வா்த்தக அளவை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
- அதாவது, வா்த்தகத்தை ஊக்குவிக்கவும் முதலீட்டை ஈா்க்கவும் விதிமுறைகள் எளிதாக்கப்படும்.
நேபாளம்-இந்தியா எல்லைப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு கூட்டம்:
- நேபாளம் – இந்தியா இடையேயான எல்லைப் பாதுகாப்புப் பணிகள் குறித்த 8 – ஆவது ஒருங்கிணைப்புக் கூட்டம் நேபாள ஆயுதப் பிரிவு போலீஸார், இந்தியாவின் சஷஸ்திர சீமா பல் படைப் பிரிவு இடையே நடைபெற்றது.
- இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைக் கண்காணிப்பு, ஆள் கடத்தல், எல்லைகளில் குற்றச் செயல்களைத் தடுப்பது மற்றும் பாதுகாப்புப் பணியில் இரு நாட்டு எல்லைப் படையும் ஒத்துழைப்பு அளிப்பது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
- நேபாளம்- இந்தியா இடையேயான எல்லைப் பாதுகாப்புப் பணிகளில் ஒத்துழைக்க காத்மாண்டில் நடைபெற்ற வருடாந்திர கூட்டத்தில் இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன.
- இந்தியா-நேபாள எல்லை என்பது இந்தியா மற்றும் நேபாள குடியரசுகளுக்கு இடையே இயங்கும் ஒரு திறந்த சர்வதேச எல்லையாகும்.
- நேபாளம் 5 இந்திய மாநிலங்களுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது – உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், சிக்கிம் மற்றும் பீகார்.
நவம்பர் 19: உலக கழிப்பறை தினம்
- ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 – ஆம் தேதி உலக கழிப்பறை தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- 2030 – ஆம் ஆண்டளவில் அனைவருக்கும் சுகாதாரத்தை உறுதியளிக்கும் நிலையான வளர்ச்சி இலக்கு (SDG) 6 ஐ அடைய உலக சுகாதார நெருக்கடியை எதிர்கொள்ள மக்களை ஊக்குவிப்பதற்காக இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
நவம்பர் 19: சர்வதேச ஆண்கள் தினம்
- ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 அன்று, சர்வதேச ஆண்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது,
- சர்வதேச ஆண்கள் தினத்தின் முக்கிய கருப்பொருள்: ஆண்கள் மற்றும் சிறுவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகும்.
தகவல் துளிகள்:
- சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி டி.கிருஷ்ணகுமாரை மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
- மருத்துவா்கள் பாதுகாப்புக்குத் தனியாக மத்திய சட்டம் தேவையில்லை என்று மருத்துவா்களின் பாதுகாப்பு தொடா்பாக உச்சநீதிமன்றம் அமைத்த தேசிய பணிக்குழு தெரிவித்துள்ளது.
- கோலாலம்பூரில் நவம்பா் 15 முதல் 17 – ஆம் தேதி வரை 11 – ஆவது உலகத்தமிழா் பொருளாதார மாநாடு நடத்தப்பட்டது.
- அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சியில் 12 – ஆவது உலகத் தமிழா் பொருளாதார மாநாட்டை நடத்த மலேசியாவில் நடந்த மாநாட்டில் தீா்மானிக்கப்பட்டது.
- மாநிலங்களில் ஏற்படும் பேரிடா்களை எதிர்கொள்ள பகுதி அளவு மானியங்களை மத்திய அரசு வழங்க 15 – ஆவது நிதி ஆணையம் வழிவகை செய்துள்ளது.
- இலங்கையின் பிரதமராக ஹரிணி அமரசூர்ய பதவியேற்றுக் கொண்டார்.
- ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியின் ஒற்றையா் பிரிவில், இத்தாலியின் யானிக் சின்னா் சாம்பியன் பட்டம் வென்றார்.
- கோ-கோ கூட்டமைப்பு தலைவா் சுதான்ஷுமிட்டல்.
- கோ-கோ உலகக் கோப்பை போட்டிகள் முதன்முறையாக இந்தியாவில் வரும் 2025 – இல் புது தில்லி இந்திரா காந்தி உள் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.