நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா்:
- நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் டிசம்பர் 20 – ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாட்டின் அரசமைப்புச் சட்டம், அரசியல் நிா்ணய சபையால் ஏற்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டு தினத்தையொட்டி, இரு அவைகளின் சிறப்பு அமா்வு நடைபெறவுள்ளது.
- இந்தியாவில் நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் அரசாங்கத்தால் கூட்டப்படுகிறது.
- பாராளுமன்றம் ஒரு வருடத்தில் மூன்று அமர்வுகளுக்கு கூடுகிறது. குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையையும் அவ்வப்போது கூட்டுகிறார்.
- பாராளுமன்றத்தின் இரண்டு அமர்வுகளுக்கு இடையிலான இடைவெளி 6 மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும், அதாவது ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் இரண்டு முறை பாராளுமன்றம் கூடுகிறது.
- குளிர்கால அமர்வு: நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் ஆண்டுதோறும் நவம்பர் நடுப்பகுதி முதல் டிசம்பர் நடுப்பகுதி வரை நடைபெறும்.
- குளிர்கால அமர்வு எல்லாவற்றிலும் மிகக் குறுகிய அமர்வு.
- இது முன்னர் பரிசீலிக்க முடியாத விஷயங்களை எடுத்துக்கொள்கிறது மற்றும் பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வின் போது சட்டமன்ற நடவடிக்கைகள் இல்லாததை ஈடுசெய்கிறது.
மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீடு:
- மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு நடைமுறை நாடு முழுவதும் ஒரே மாதிரியாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்யும் வகையில் இந்த நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
- மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016-இன்கீழ் வெளியிடப்பட்ட இந்த நெறிமுறைகளில் 40 சதவீதம் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்ற அவா்களுக்கான அரசுப் பணிகளைக் கண்டறிவது அவசியமானது.
- பார்வையற்றோா், செவித்திறன் அற்றோா், அறிவுசார் குறைபாடுகள் போன்ற பிரிவுகளில் உள்ளோருக்கு நேரடி நியமனங்கள் மற்றும் பதவி உயா்வில் 4 சதவீத இடஒதுக்கீட்டை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இந்திய, இத்தாலிய பாய்மரக் கப்பல் கூட்டுப் பயிற்சி:
- இந்திய கடற்படையின் பாய்மரப் பயிற்சிக் கப்பலான ஐஎன்எஸ் தரங்கிணி, இத்தாலிய பாய்மரக் கப்பலான அமெரிகோ வெஸ்பூசியுடன் கொச்சி கடற்கரையில் கூட்டுப் பாய்மரப் பயிற்சியில் பங்கேற்றது.
- கேரள மாநிலம் கொச்சி கடற்கரையில் நடைபெற்ற இந்த பயிற்சியானது உலகளாவிய கடல்வழி மரபுகள் மற்றும் சா்வதேச நட்புரவை வளா்ப்பதில் இந்திய கடற்படையின் அா்ப்பணிப்பை காட்டுகிறது.
- இந்த பயிற்சியின்போது இரு கப்பல்களும் பல்வேறு பாய்மர பயிற்சிகளை ஒன்றாக மேற்கொண்டனா், தங்கள் ஒத்துழைப்பை வலுப்படுத்தின.
- இந்திய கடற்படையின் பாய்மர கப்பல் பயிற்சியில் ஐஎன்எஸ் தரங்கிணி முக்கிய பங்கு வகிக்கிறது.
ஐ.நா.வின் 29 – ஆவது பருவநிலை மாநாடு:
- ஐ.நா.வின் 29 – ஆவது பருவநிலை மாநாடு, அஜா்பைஜான் தலைநகா் பாகுவில் நடைபெற்று வருகிறது.
- பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதில் வளா்ந்த நாடுகள் மேற்கொள்ளும் தன்னிச்சையான முடிவுகளால் தெற்குலக நாடுகள் பாதிப்பை சந்திப்பதாக, ஐ.நா. பருவநிலை மாநாட்டில் இந்தியா கவலை தெரிவித்தது.
- மேலும், காா்பன் உமிழ்வை குறைப்பதில் பொருளாதார பலமிக்க நாடுகள் முன்மாதிரியாக செயல்பட வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியது.
- தெற்குலகில் பருவநிலை சாா்ந்த லட்சிய செயல்பாடுகளை அதிகரிக்க, இந்நாடுகளுக்கு தொழில்நுட்பங்களை இலவசமாக வழங்குவதோடு, போதிய நிதியுதவியும் அளிக்கப்பட வேண்டும்.
- உற்பத்தியின்போது கார்பன் வெளியீடு அதிகமுள்ள பொருள்களுக்கு இறக்குமதி வரி (காா்பன் வரி) விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு, பருவநிலை சாா் நடவடிக்கைகளுக்கான செலவை ஏழை நாடுகளின் மீது திணிப்பதாக உள்ளது.
- வளா்ந்த நாடுகளின் தன்னிச்சையான முடிவுகள், தெற்குலகின் பருவநிலை நடவடிக்கைகளுக்கு இடா்பாட்டை ஏற்படுத்துகின்றன.
- புவியின் வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸ் குறைப்பதற்கான உலகளாவிய காா்பன் நிதி, 2030-ஆம் ஆண்டுக்குள் தீா்ந்துவிடும் நிலையில் உள்ளது.
- உலக அளவில் கார்பன் உமிழ்வில் குறைவாக பங்களித்தபோதிலும், பருவநிலை நடவடிக்கைகளுக்கான நிதிச்சுமை மற்றும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சேதம்-இழப்பால் தெற்குலகம் பாதிப்பை எதிா்கொண்டுள்ளது.
புவனேசுவரத்தில் டிஜிபிக்கள் மாநாடு:
- அகில இந்திய காவல்துறை தலைமை இயக்குநா்கள் மற்றும் தலைவா்கள் மாநாடு புவனேசுவரத்தில் நவம்பர் 29 முதல் டிசம்பர் 1-ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.
- மத்திய உளவுத்துறை ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில், உள்நாட்டுப் பாதுகாப்பு, கணினிக்குற்ற அச்சுறுத்தல்கள், பயங்கரவாதம், காவல்துறை நவீனமயமாக்கல் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும்.
- புவனேசுவரத்தில் முதல் முறையாக இத்தகைய மாநாடு நடத்தப்படுகிறது.
- வருடத்தில் இரண்டு முதல் மூன்று முறை நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் காவல்துறையின் அகில இந்திய மாநாடுகள் நடத்தப்படுகின்றன.
- இதில் உளவுத்துறை சார்பில் வருடாந்திர மாநாடு இந்த ஆண்டு ஒடிஸாவில் நடத்தப்படுகிறது.
- மியான்மா், லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் உள்ளவா்களை இலக்கு வைத்து நடக்கும் ஆன்லைன் மோசடிகள் தொடா்பான விரிவான காணொளி செயல் விளக்கம் இந்திய சைபா் குற்ற ஒருங்கிணைப்பு மையம் சார்பில் மாநாட்டில் காண்பிக்கப்படும்.
இஸ்ரோ செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய ஸ்பேஸ் எக்ஸ்:
- ‘ஜிசாட்-என்2’ என்ற இஸ்ரோவின் 4,700 கிலோ தொலைத்தொடா்பு செயற்கைக்கோளை தொழிலதிபா் எலான் மஸ்குக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் இருந்து விண்ணில் செலுத்தியது.
- இந்த செயற்கைக்கோளை அமெரிக்காவில் உள்ள கேப் கெனவெரலில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் செலுத்தியதாக இஸ்ரோவின் வா்ததக கிளைப் பிரிவு அமைப்பான நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் (என்எஸ்ஐஎல்) தெரிவித்தது.
- 4,700 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
- அதிக தரவுகளைப் பகிரும் ஜிசாட்-என்2 ‘கேஏ’ அதிா்வெண் அலைவரிசை செயற்கைக்கோளானது தொலைத்தொடா்பு சேவைகள் மற்றும் இந்திய பிராந்தியத்துக்கு வெளியில் விமான சேவைகளை மேம்படுத்தவும் உதவுகிறது.
தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (NALSA):
- சமூகத்தின் நலிவடைந்த பிரிவினருக்கு இலவச சட்ட சேவைகளை வழங்குவதற்கும், சச்சரவுகளை சுமுகமாகத் தீர்ப்பதற்கு லோக் அதாலத்களை நடத்துவதற்கும், 1987 ஆம் ஆண்டு சட்ட சேவைகள் அதிகாரசபை சட்டம், 1987ன் கீழ் தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (NALSA) உருவாக்கப்பட்டது.
- இந்திய அரசியலமைப்பின் பிரிவு 39A சமூகத்தின் ஏழை மற்றும் நலிந்த பிரிவினருக்கு இலவச சட்ட உதவியை வழங்குகிறது மற்றும் அனைவருக்கும் நீதியை உறுதி செய்கிறது.
- அரசியலமைப்பின் 14 மற்றும் 22(1) பிரிவுகள் சட்டத்தின் முன் சமத்துவத்தையும், அனைவருக்கும் சம வாய்ப்பு என்ற அடிப்படையில் நீதியை ஊக்குவிக்கும் சட்ட அமைப்பையும் உறுதி செய்வதை அரசு கட்டாயமாக்குகிறது.
- 1987, நவம்பர் 9, 1995 அன்று பாராளுமன்றத்தால் சட்ட சேவைகள் அதிகாரசபை சட்டம் இயற்றப்பட்டது.
- இது சமூகத்தின் நலிவடைந்த பிரிவினருக்கு சம வாய்ப்பு அடிப்படையில் இலவச மற்றும் திறமையான சட்ட சேவைகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது.
- ஒவ்வொரு மாநிலத்திலும், மாநில சட்ட சேவைகள் ஆணையம் மற்றும் ஒவ்வொரு உயர் நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்ற சட்டப் பணிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
- இந்திய உச்ச நீதிமன்றத்தைப் பொறுத்தவரையில் சட்ட சேவைகள் திட்டத்தை நிர்வகிக்கவும் செயல்படுத்தவும் உச்ச நீதிமன்ற சட்டப் பணிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 20: உலகளாவிய குழந்தைகள் தினம்
- ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 20 ஆம் தேதி, உலகளாவிய குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் முதன்மையாக சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துதல், உலகெங்கிலும் உள்ள குழந்தைகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் குழந்தைகளின் நலனை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- நவம்பர் 20, 1954 அன்று, உலகளாவிய குழந்தைகள் தினம் நிறுவப்பட்டது.
நவம்பர் 21: உலகத் தொலைக்காட்சி தினம்
- ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21ஆம் தேதி உலகத் தொலைக்காட்சி தினம் அனுசரிக்கப்படுகிறது.
நவம்பர் 21: தேசிய தத்துவ தினம்
- நவம்பர் 21 அன்று கொண்டாடப்படும் தேசிய தத்துவ தினம், சமூகம், கலாச்சாரம் மற்றும் மனித சிந்தனையில் தத்துவத்தின் ஆழமான தாக்கத்தின் உலகளாவிய அங்கீகாரமாகும்.
- யுனெஸ்கோவால் நிறுவப்பட்ட இந்த நாள், சமகால சவால்களை எதிர்கொள்வதில் விமர்சன சிந்தனை, உரையாடல் மற்றும் பிரதிபலிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
நவம்பர் 23: ஃபைபோனச்சி தினம்
- மத்திய காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க கணிதவியலாளர்களில் ஒருவரான லியோனார்டோ பொனாச்சியை கௌரவிப்பதற்காக ஆண்டுதோறும் நவம்பர் 23 அன்று ஃபைபோனச்சி தினம் அனுசரிக்கப்படுகிறது.
நவம்பர் 23: தேசிய முந்திரி தினம்
- தேசிய முந்திரி தினம் நவம்பர் 23 இல் அனுசரிக்கப்படுகிறது.
நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம்
- ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25 அன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது.
- இந்த நாள் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் 1993 இல் நிறுவப்பட்டது.
- பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது பாலின அடிப்படையிலான வன்முறை என வரையறுக்கப்படுகிறது,
தகவல் துளிகள்:
- தில்லியில் அடுத்த ஆண்டு ஜனவரி 11, 12 – ஆம் தேதிகளில் ‘வளா்ந்த பாரதத்தின் இளம் தலைவா்கள் மாநாடு’ நடத்தப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தார்.
- கடந்த 2000 – ஆம் ஆண்டு நவம்பர் 15 – இல் பிகாரை பிரித்து ஜாா்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது, அந்த மாநிலத்தின் முதல்வராக 4 – ஆவது முறையாக ஹேமந்த் சோரன் பதவியேற்க இருக்கிறார்.
- பிரிட்டன் மன்னா் மூன்றாம் சாா்லஸ், அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு அடுத்த ஆண்டு வரவுள்ளார்.
- மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் பதவியேற்றார்.
- தென்னிந்தியாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை அறியும் வகையில் ‘தங்கத் தோ்’ எனும் சொகுசு ரயில் இயக்கப்படவுள்ளது.
- திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே கற்திட்டை அமைப்புடன் கூடிய சதிக்கல் கண்டெடுக்கப்பட்டது.
- சீனா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்திய வீராங்கனை அனுபமா உபாத்யாய வெற்றி பெற்றார்.
- ஆடவா் அணிகளுக்கான டேவிஸ் கோப்பையை இத்தாலி அணி 3 – ஆவது முறையாக வென்றது.
- மகளிா் அணிகளுக்கான பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ் போட்டியில், ஸ்லோவாகியாவை வீழ்த்தி, இத்தாலி 5 – ஆவது முறையாக சாம்பியன் ஆனது.
- சீக்கிய குரு குருநானக்கின் 555-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நினைவு நாணயத்தை பாகிஸ்தான் அரசு வெளியிட்டது.