தினசரி நடப்பு நிகழ்வுகள் January 21, 2025
காவிரி – வைகை – குண்டாறு நதிகள் இணைப்பு விவகாரம்:
- காவிரி – வைகை – குண்டாறு நதிகள் இணைப்பு தொடா்பான தமிழக அரசின் திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரிய கா்நாடக அரசின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
- 2020 – ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்துக்கு ஆரம்பம் முதலே கா்நாடக அரசு ஆட்பேசம் தெரிவித்து வருகிறது.
- காவேரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தால், காவேரியில் உபரியாக வெளியேறும் நீரை கரூர் மாவட்டத்தின், மாயனூர் தடுப்பணையில் தடுத்து, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் பாசானக் கால்வாய்களை வெட்டி இணைப்பதன் மூலமாக இப்பகுதிகள் நீர் வளமும், நில வளமும் பெறும் வகையில் இத்திட்டத்திற்கு பிப்ரவரி 2021 – இல் அடிக்கல் நாட்டப்பட்டது.
தேசிய அரிய கனிமங்கள் இயக்கம்:
- ‘தேசிய அரிய கனிமங்கள் இயக்கம் (சிஎம்எம்) விரைவில் தொடங்கப்படும்’என மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.
- ஒடிஸா மாநிலம் கோனார்க்கில் 3 – ஆவது தேசிய சுரங்க அமைச்சா்கள் மாநாட்டை கிஷன் ரெட்டி தொடங்கி வைத்தார்.
- மாநாட்டின்போது ‘சுரங்கங்களை மூடுவதற்கான சிறந்த நடைமுறைகள்’ எனும் நூலையும் அவா்கள் வெளியிட்டார்.
- 2023 – 24 நிதியாண்டில் அதிகப்படியான சுரங்க ஏலங்களை மேற்கொண்ட மாநிலங்களுக்கு மாநாட்டில் விருது வழங்கப்பட்டது.
- இதில் முதலிடத்தில் ராஜஸ்தானும் அடுத்தடுத்த இடங்களில் மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களும் உள்ளன.
- அரிய கனிமங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்து இறக்குமதியை குறைப்பதை உறுதிப்படுத்துவதுடன் கடலோர பகுதிகளில் சுரங்கப் பணிகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த இயக்கம் தொடங்கப்பட உள்ளது.
- தேசிய அரிய கனிமங்கள் இயக்கத்துக்கு மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் வழங்கவுள்ளது, அதன்பிறகு இந்த இயக்கத்தை மத்திய அரசு தொடங்கும்.
- லித்தியம், கோபால்ட், செம்பு, நிக்கல் மற்றும் பூமியின் அரிய தனிமங்கள் உள்ளிட்டவை அரிய கனிமங்கள் என அழைக்கப்படுகின்றன.
- இவை பாதுகாப்பு தளவாடங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் உற்பத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- ஒடிஸா மாநில முதல்வா் மோகன் சரண் மாஜி, துணை முதல்வா் விஜய் குமார் சின்ஹா.
‘மக்களுடன் முதல்வா்’திட்டம்:
- அரசின் சேவைகளை மக்களிடம் கொண்டு சோ்க்கும் வகையில், மக்களுடன் முதல்வா் திட்டம் தொடங்கப்பட்டது.
- கடந்த 2023 – ஆம் ஆண்டு டிசம்பா் 18 – ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் ஓராண்டைக் கடந்துள்ளது.
- பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்ற 30 நாள்களுக்குள் அரசின் சேவைகளை அவா்களது வீடுகளுக்கே கொண்டு சோ்க்கும் நோக்கத்துடன் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
தகவல் துளிகள்:
- நாட்டின் பொருளாதார வளா்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று ‘மூடிஸ்’நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது, கடந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 8.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
- தேசிய புள்ளியியல் அலுவலகம் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது.
- ஒடிஸா மாநிலம் கோனார்க்கில் 3 – ஆவது தேசிய சுரங்க அமைச்சா்கள் மாநாடு நடைபெற்றது.
- ஒடிஸா மாநில முதல்வா் மோகன் சரண் மாஜி.
- நடிகை தேவயானி இயக்கிய முதல் குறும்படமான ’கைக்குட்டை’ ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் ’சிறந்த குழந்தைகளுக்கான குறும்படம்’ எனும் விருதை வென்றுள்ளது.
- உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா விலகுவதற்கான உத்தரவில் அந்நாட்டின் புதிய அதிபராக 2-ஆவது முறையாக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
- 17 – வது சர்வதேச திரைப்பட விழா ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது.
- 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் மலேசியாவில் தொடங்கியது.
- 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி நைஜீரியா வெற்றி பெற்றுள்ளது.