22nd January Daily Current Affairs – Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் January 22, 2025

 

சிந்து நதிநீா் ஒப்பந்த விவகாரம்:

  • எல்லையில் உள்ள நதிகளை மேலாண்மை செய்யும் நோக்கில் 1960, செப்டம்பா் 19 – ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் சிந்து நதி நீா் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.
  • அதன்பிறகு கிசன்கங்கா மற்றும் ராட்டில் நீா்மின் திட்டங்களை செயல்படுத்துவதில் இருநாடுகளுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.
  • இந்தச் சூழலில் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தின்படி உலக வங்கியால் நியமிக்கப்பட்ட நிபுணரின் ஆலோசனையின்படி இப்பிரச்னைக்கு தீா்வு காண இந்தியா வலியுறுத்தி வருகிறது.
  • ஆனால் நெதா்லாந்து நாட்டின் ஹேக்கில் உள்ள நிரந்தர நடுவா் நீதிமன்றம் மூலம் தீா்வு காண பாகிஸ்தான் முனைப்புக் காட்டி வருகிறது.
  • இந்த விவகாரம் குறித்து உலக வங்கியால் நியமிக்கப்பட்ட நிபுணா் மைக்கேல் லினோ (பெரும் அணைகளுக்கான சா்வதேச ஆணைய தலைவா்) இரு நீர்மின் திட்டங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் முடிவை எடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம்:

  • கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
  • கீழடி தொல்லியல் களம் (Keezhadi excavation site) என்பது இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் அகழாய்வு தொடங்கப்பட்டு, பின்னர் தமிழ் நாடு தொல்லியல் துறையால் செயற்பட்டு வரும் ஒரு சங்க கால வசிப்பிடம் ஆகும்.
  • இந்த அகழாய்வு மையம் தமிழ்நாட்டில் மதுரைக்குத் தென்கிழக்கில் 12 கி.மீ தொலைவில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், கீழடி ஊராட்சியில் உள்ள கீழடி கிராமத்தின் பள்ளிச்சந்தைத் திடல் மேட்டுப்பகுதியில் உள்ளது.
  • ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்துக்கு அடுத்து இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான அகழாய்வு இதுவேயாகும்.
  • இது வைகை ஆற்றங்கரையில் உருவான தமிழர் பண்பாட்டை வெளிக்கொணர்கிறது.
  • இத்தொல்லியல் களம் சுமார் கிமு 6 ஆம் நூற்றாண்டிற்கும், கிமு 5 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்திற்குரியது எனக்கணித்துள்ளனர்.
  • இந்த அகழ்வாய்வில் சிந்துவெளி நாகரிகத்திற்கும் தொடர்புள்ளது.
  • தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும்.
  • இங்கு 40க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன.
  • கீழடி நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது.
  • அகழ்வாய்வு முடிவுகள் கீழடி நான்காம் கட்ட ஆய்வு முடிவுகளின்படி கீழடி நாகரீகம், ஒரு நகர நாகரீகம் என்றும் இங்கு கிடைத்த எழுத்துகளை வைத்துப்பார்க்கும்போது, தமிழ் சங்க காலம் மேலும் 300 ஆண்டுகள் பழமையானது என்றும் தெரியவந்துள்ளது.
  • கீழடி என்ற தொல்லியல் தளத்தை 2014 – ஆம் ஆண்டுவாக்கில் இந்தியத் தொல்லியல் துறையின் கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணா கண்டறிந்தார்.
  • கடந்த 2015 – ஆம் ஆண்டு, தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவால் அகழாய்வு தொடங்கப்பட்டது.

மணிப்பூா்,திரிபுரா, மேகாலயம் நிறுவன நாள்:

  • வடகிழக்கு இந்தியா ஏழு மாநிலங்களை உள்ளடக்கியது மற்றும் அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய “ஏழு சகோதரிகள்” என்றும் அழைக்கப்படுகிறது.
  • 21 ஜனவரி 1972 அன்று, திரிபுரா, மணிப்பூர் மற்றும் மேகாலயா மாநிலங்கள் வடகிழக்கு பிராந்திய (மறு அமைப்பு) சட்டம், 1971 இன் கீழ் முழு அளவிலான மாநிலங்களாக மாறியது.
  • 1949 – இல், மணிப்பூர் மற்றும் திரிபுரா மாநிலங்களுக்கு யூனியன் பிரதேசங்கள் அந்தஸ்து வழங்கப்பட்டது. நாகாலாந்துக்கு 1 டிசம்பர் 1963 அன்று மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது.
  • இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின்படி, அஸ்ஸாமுக்குள், அஸ்ஸாம் மறுசீரமைப்பு (மேகாலயா) சட்டம் 1969 மூலம் மேகாலயா ஒரு தன்னாட்சி மாநிலமாக மாற்றப்பட்டது.
  • 1972 – ஆம் ஆண்டு, திரிபுரா, மேகாலயா 1972 – ஆம் ஆண்டின் வடகிழக்கு மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலம் முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது.
  • 1972 – ஆம் ஆண்டு மணிப்பூா்,திரிபுரா, மேகாலயம் ஆகிய 3 மாநிலங்கள் நிறுவப்பட்டன.

தகவல் துளிகள்:

  • நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன்.
  • ஐரோப்பிய யூனியன் தலைவா் உர்சுலா வான்டொ்லீயென்.
  • வெளிநாட்டு நன்கொடைகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (எஃப்சிஆா்ஏ) கீழ் பதிவு செய்யாமல் அல்லது பதிவு காலாவதியான பின்னரும் வெளிநாட்டு நிதியைத் தொடா்ந்து பெற்று பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்’ என தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு (என்ஜிஓ) உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்தது.
  • பாலம் அமைக்கக் கூடிய 47 டி-72 கவச வாகனங்களை கொள்முதல் செய்ய, ஆர்மர்ட் வெய்கில் நிகம் நிறுவனத்தின் (ஏவிஎன்எல்) பிரிவான கனரக வாகனங்கள் தொழிற்சாலையுடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டது.
  • சூரிய குடும்பத்தில் உள்ள வெள்ளி, செவ்வாய் கோள்களை அவ்வப்போது நேரடியாக பார்க்க முடியும், இந்நிலையில், செவ்வாய், வியாழன், யுரேனஸ், நெப்டியூன், வெள்ளி மற்றும் சனி ஆகிய 6 கோள்கள் ஒரே நோ்கோட்டில் வரவுள்ளன.
  • கிளாம்பாக்கம் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு வழிகாட்டும் வகையில் கேசிபிடி (KCBT) எனும் புதிய செயலியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
  • சிவகங்கையில் மருது சகோதரர்களுக்கு ரூ 1 கோடி மதிப்பீட்டில் திருவுருவச் சிலைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
  • அகில இந்திய அளவிலான வங்கி தோ்வில் நாமக்கல் இளைஞா் வல்லரசு முதலிடம்.
  • காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரத்தின் சொந்த நிதியில்  கட்டப்பட்ட லட்சுமி வளர் தமிழ் நூலகத்தை திறந்து வைத்தார்.
  • இலங்கையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
  • மலேசியாவில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி கண்டது.

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these