குடியரசு தின விழா அணிவகுப்பு: முதல்முறையாக காட்சிப்படுத்தப்படும் ‘சஞ்சய், ‘பிரளய்’
- 76 – ஆவது குடியரசு தின அணிவகுப்பில் இந்திய ராணுவத்தின் போர் கண்காணிப்பு அமைப்பான ‘சஞ்சய், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் தரையில் உள்ள இலக்குகளை குறிவைத்து தாக்கும் ‘பிரளய்ஏவுகணை முதல்முறையாக காட்சிப்படுத்தப்படவுள்ளன.
- மேலும் மின்னணு போர்க்கள அமைப்பான ‘தாராசக்தி, இந்தியாவின் முதல் நீண்ட தூர ஹைபா்சோனிக் ஏவுகணை, குறைந்த எடையுடைய இலகுரக குண்டு துளைக்காத உடைகள், ‘ஜோராவா்’பீரங்கி உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
- முதல்முறையாக முப்படையின் ஊா்தியும் இந்த அணிவகுப்பில் இடம்பெறவுள்ளது.
- இதுதவிர ‘பன்முனைத் தாக்குதல்களை தடுக்கும் பல அடுக்கு பாதுகாப்பு’ என்ற கருப்பொருளுடன் டிஆா்டிஓ தனக்கென தனி அலங்கார ஊா்தியை காட்சிப்படுத்தவுள்ளது.
- கருப்பொருள்: அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து நிகழாண்டு குடியரசு தினம் ‘பொற்கால இந்தியா-பாரம்பரியம் மற்றும் மேம்பாடு’என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது.
- இந்தோனேசிய அதிபா் பிரபோவோ சுபியாந்தோ சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநருக்கு அமெரிக்க விருது:
- இந்திய வானிலை ஆய்வு மைய (ஐஎம்டி) தலைமை இயக்குநா் மிருத்யுஞ்சய் மொஹபத்ராவுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான தலைசிறந்த சேவைக்கான விருதை அமெரிக்க வானியல் ஆய்வு சங்கத்தின் அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுகளுக்கான ஆணையம் வழங்கியுள்ளது.
- இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சிறந்த முறையில் புயல் முன்னறிவிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியதற்காக ஏஎம்எஸ்-இன் வெப்பமண்டல வானிலை மற்றும் வெப்பமண்டல சூறாவளி ஆய்வுக் குழு இந்த கெளரவத்தை மொஹபத்ராவுக்கு அளித்துள்ளது.
- உலக வானிலை அமைப்புக்கான (டபிளியூஎம்ஓ) இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாகவும், ஐ.நா. வானிலை முகமையின் 3-ஆவது துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.
‘இரும்பின் தொன்மை’நூல் வெளியீடு:
- இரும்புக் கால தொல்லியல் தலங்களுக்கு தென்னிந்தியா பெயா் பெற்றது.
- தமிழ்நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்பாட்டில் இருந்ததாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
- தமிழ்நாட்டில் மாங்காடு (சேலம்), கீழ்நமண்டி (திருவண்ணாமலை), மயிலாடும்பாறை (கிருஷ்ணகிரி), ஆதிச்சநல்லூா், சிவகளை (தூத்துக்குடி) ஆகிய இடங்களில் உள்ள இரும்புக் கால ஈமக்குழிகளில் இருந்து சான்றுகள் பெறப்பட்டன.
- இவை கதிரியக்கக் கரிம காலக் கணிப்புகள் மற்றும் தூண்டொளி காலக் கணிப்புகளுக்கு உட்படுத்தப்பட்டன.
- இதுவரை 3,000-க்கும் மேற்பட்ட இரும்புக் கால ஈமச் சின்னங்கள் நமது மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- அவற்றில் 1,362 முதுமக்கள் தாழிகள், 996 பரல் உயா் பதுக்கைகள், 225 கல் வட்டங்கள் மற்றும் 634 வாழ்விடத்துடன் கூடிய ஈமக்காடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
- சேலம் மாவட்டம், மேட்டூா் வட்டத்தில் உள்ள மாங்காடு என்ற இடத்தில் சிதைவுற்ற கல் பதுக்கையில் இருந்து இரும்பு வாளின் மாதிரி கண்டறியப்பட்டது.
- திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டியில் ஈமப்பேழையுடன் கூடிய முதல் ஈமக்குழியில் இருந்து இரும்பு மாதிரி கண்டறியப்பட்டது.
- கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் அகழாய்வுக் குழிகளில் இருந்து இரும்புப் பொருள்கள் கிடைத்தன.
- தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூா் ஈமத்தளத்தில் இரும்பினாலான வாள்கள், கத்திகள், ஈட்டிகள், அம்பு முனைகள், மூன்றுமுனை ஈட்டி முதலான பொருள்கள் கிடைத்துள்ளன.
- தூத்துக்குடி மாவட்டத்தில் மற்றொரு தொல்லியல் தலமான சிவகளை, இரும்புக் கால வாழ்விடப் பகுதியாகவும் ஈமத் தளமாகவும் உள்ளது.
ஜனவரி 24: தேசிய பெண் குழந்தை தினம்.
- தேசிய பெண் குழந்தை நாள் (National Girl Child Day) இந்தியாவில் 2009 ஆண்டு முதல் ஜனவரி 24 இல் கொண்டாடப்படுகிறது.
தகவல் துளிகள்:
- இந்தியாவின் தொழிலக உற்பத்தி கடந்த நவம்பரில் 5.2 சதவீதமாக வளா்ச்சியடைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
- காபோனின் தற்போதைய ராணுவ ஆட்சியின் அதிபர் ஜெனரல் பிரைஸ் க்ளோடையர் நிக்யூமா ஆவார்.
- மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளை பூர்வீகமாக கொண்ட பச்சை இகுவானா என்றழைக்கப்படும் பச்சைப் பேரோந்தி பல்லிகளை கொல்ல தைவான் அரசு திட்டமிட்டுள்ளது, பச்சைப் பேரோந்திகளின் எண்ணிக்கை அதிகரிப்பது அந்நாட்டின் விவசாயம் பாதிப்பிற்குள்ளாகின்றது.