பொது சிவில் சட்டம்:
- திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, வாரிசுரிமை ஆகிய விவகாரங்களில் ஒவ்வொரு மதத்திலும் தனித்தனி சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன.
- இதை மாற்றி, அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தைப் பின்பற்றும் வகையில் நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
- பொது சிவில் சட்ட வரைவை உருவாக்க கடந்த 2022, மே 27-இல் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் நிபுணா் குழு அமைக்கப்பட்டது.
- இதையடுத்து, உத்தரகண்டில் மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா கடந்த ஆண்டு பிப்ரவரியில் நிறைவேற்றப்பட்டது.
- பின்னா், சட்ட அமலாக்கத்துக்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை வகுக்க முன்னாள் தலைமைச் செயலா் சத்ருஹன் சிங் தலைமையில் நிபுணா் குழு அமைக்கப்பட்டது.
- உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் ஜனவரி 27 முதல் அமலுக்கு வருவதாக முதல்வா் புஷ்கா் சிங் தாமி அறிவித்தார்.
- சுதந்திர இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலம் உத்தரகண்ட்.
ஒரே நாடு ஒரே நேரம்:
- நாடு முழுவதும் உள்ள அனைத்து அதிகாரபூா்வ மற்றும் வா்த்தக பயன்பாடுகளில் இந்திய நிலையான நேரம் (ஐஎஸ்டி) பின்பற்றுவதை கட்டாயமாக்கும் வரைவு விதிகளை மத்திய அரசு வெளியிட்டது.
- தொலைத்தொடா்பு, வங்கி, பாதுகாப்பு, 5ஜி மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) என தேச உள்கட்டமைப்பில் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஒரே நேரத்தை பின்பற்றுவதை உறுதிப்படுத்த சட்டபூா்வ வானிலை (ஐஎஸ்டி) வரைவு விதிகள், 2024 வெளியிடப்பட்டது.
- இது அதிகாரபூா்வ, வா்த்தக, நிதி, நிர்வாகம், சட்ட ஒப்பந்தங்கள் என அனைத்து விதமான பயன்பாடுகளிலும் ஐஎஸ்டியை மட்டுமே பின்பற்ற வலியுறுத்துகிறது. ஐஎஸ்டி தவிர பிற நேர திட்டங்களைப் பின்பற்றுவதற்கு இந்த விதிகளின்கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- மேலும், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஐஎஸ்டியை காட்சிப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் வரைவு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
- வானியல், கடற்பயணம், அறிவியல் ஆய்வு உள்பட குறிப்பிட்ட சில துறைகளுக்கு மட்டும் அரசின் முன் அனுமதியுடன் இந்த விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
- தேசிய இயற்பியல் ஆய்வகம் மற்றும் இஸ்ரோவுடன் இணைந்து மத்திய நுகா்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் துல்லியமான நேரத்தைக் கணக்கிட்டு வெளியிடும் பணியை மேற்கொண்டு வருகிறது.
வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த சுடுமண் பொருள்கள்:
- விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை 3 – ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட மனித உருவ கால் பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- வெம்பக்கோட்டை வைப்பாற்றின் கரையோரம் உச்சிமேடு பகுதியில் முதலாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன.
- இதில் 3,254 பொருள்கள் கண்டறியப்பட்டு, அதே பகுதியில் கண்காட்சி அமைக்கப்பட்டது.
- இதே பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கியது.
- விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டு நுண் கற்காலத்தை அறியும் வகையில், வைப்பாற்றின் வடகரையில் மேட்டுகாடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஜூன் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
ஜனவரி 27: சர்வதேச இனப் படுகொலை நினைவு தினம்.
- ஜனவரி 27 – ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச இனப் படுகொலை நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
தகவல் துளிகள்:
- தெலங்கானா மாநிலத்தில் 6,000 ஆண்டுகள் பழமையான கல் கோடாரி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் ஜனவரி 27 முதல் அமலுக்கு வருவதாக முதல்வா் புஷ்கர் சிங் தாமி அறிவித்தார்.
- சுதந்திர இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலம் உத்தரகண்ட்.
- நாகாலாந்து மாநிலத்தில் நடமாடும் ‘ஆபரேஷன் தியேட்டா்’ (அறுவைச் சிகிச்சை அரங்கு) திட்டம் தொடங்கப்பட்டது.
- நாகாலாந்து மாநில ஆளுநா் இல.கணேசன், நாகாலாந்து முதல்வா் நைபியு ரியோ.
- தமிழகத்தில் குற்றத்தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் சிறந்த விளங்கிய, மதுரை எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்துக்கு தமிழத்தின் சிறந்த காவல்நிலையத்துக்குரிய விருதை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
- ஐசிஎஃப் கடந்த ஆண்டு 75,000 ரயில் பெட்டிகளைத் தயாரித்து சாதனை படைத்தது, நமோ பாரத் என அழைக்கப்படும் வந்தே மெட்ரோ ரயில்களும் ஐசிஎஃப்-இல் தயாரிக்கப்படுகின்றன.
- ஐசிசியின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதினை இலங்கை அணியின் இளம் வீரர் கமிந்து மெண்டிஸ் வென்றுள்ளார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் யானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.