குடியரசுத் தலைவர் மாளிகை தர்பார் ஹால், அசோக் ஹால் பெயர் மாற்றம்:
- குடியரசுத் தலைவர் மாளிகையின் முக்கியமான இரண்டு அரங்குகளான ‘தர்பார் ஹால்’ மற்றும் ‘அசோக் ஹால்’ ஆகியவற்றை ‘கணதந்திர மண்டபம்’ மற்றும் ‘அசோக் மண்டபம்’ என பெயர் மாற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முடிவு செய்துள்ளார்.
- தர்பார் ஹால் என்பது தேசிய விருதுகள் வழங்குவது போன்ற முக்கியமான விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களின் இடமாகும்.
- கணதந்திரம் என்பது குடியரசு, மக்கள் ஆட்சி எனப் பொருள் தருகிறது.
- அசோக் ஹால் முதலில் ஒரு ‘பால்ரூம்’ எனப்படும் நடன மண்டபமாகும்.
- அசோக் என்ற வார்த்தை “எல்லா துன்பங்களிலிருந்தும் விடுபட்டவர்” அல்லது “எந்த துக்கமும் இல்லாதவர்” என்று பொருள்படும்.
- அசோகா என்பது ஒற்றுமை, அமைதியான வாழ்வின் சின்னமான அசோக பேரரசரைக் குறிக்கிறது.
- குடியரசுத் தலைவர் மாளிகையின் முகலாய தோட்டம் ‘அமிர்தி பூங்கா’ எனப் பெயர் மாற்றப்பட்டது.
கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம்: உச்சநீதிமன்றம்
- கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
- அரசியலமைப்பின் பட்டியல் 2, பிரிவு 50-இன் கீழ் கனிம வளங்களுக்கு விதிக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை.
- மாநிலங்களில் உள்ள கனிம வளங்களுக்காக மத்திய அரசிடம் இருந்து பெறும் ராயல்டியை வரியாக கருத முடியாது.
- கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது.
- சுரங்கங்கள், தாதுக்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்ட விதிமுறைகளில் மாநிலங்களுக்கான உரிமைகளை கட்டுப்படுத்தும் பிரிவுகள் எதுவும் இல்லை.
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பை வழங்கியது.
கோவையில் நிரந்தர தொழில் மேம்பாட்டு மையம்:
- மத்திய பிரதேச மாநில அரசு சார்பில் கோவையில் நிரந்தர தொழில் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும் என்று அம்மாநில முதல்வா் மோகன் யாதவ் தெரிவித்தார்.
- ஆசியாவில் முக்கிய ஜவுளி உற்பத்தி மையமாக திருப்பூா் உள்ளது.
- ஆட்டோமொபைல், பொறியியல், பம்ப் செட் உற்பத்தியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.
- மத்திய பிரதேசத்துடன், தமிழகத்தின் தொழில் நிறுவனங்களை இணைக்கும் வகையில் கோவையில் நிரந்தர தொழில் மேம்பாட்டு மையம் அமைக்கப்பட உள்ளது.
- பருத்தி உற்பத்தி, கவா்ச்சிகரமான நிதி பலன் ஆகிய காரணிகளால் பெரிய ஜவுளி நிறுவனங்கள் மத்திய பிரதேசத்தில் முதலீடு செய்துள்ளன.
- மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிக்க இந்தூரில் புதிய ஆலை அமைக்கப்படவுள்ளது.
‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம்:
- கல்லூரி மாணவா்களுக்கும் மாதம் ரூ1,000 அளிக்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தால், உயா் கல்வி சோ்க்கை 10 சதவீதம் அதிகரிக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- தமிழ்ப் புதல்வன் திட்டம் அடுத்த மாதம் நடைமுறைக்கு வரவுள்ளது.
- தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் இணையவுள்ள மாணவா்களின் எண்ணிக்கை தோராயமாக 28 லட்சம் இருக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
- 6 – ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று உயா் கல்வி பயிலும் மாணவா்களுக்கு மாதம் ரூ 1,000 வழங்கப்பட உள்ளது.
- ஒரே குடும்பத்தில் இருந்து எத்தனை மாணவா்கள் தகுதி பெற்றிருந்தாலும் அனைவரும் திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
ஜூலை 26: கார்கில் விஜய் திவாஸ்
- விஜய் நடவடிக்கையின் வெற்றிக்குப் பின்பு கார்கில் விஜய் திவாஸ் என்று பெயரிடப்பட்டது.
- 1999 – ஆம் ஆண்டு ஜூலை 26 அன்று பாகிஸ்தான் ஊடுருவல்காரர்கள் கைப்பற்றிய மிக உயர்ந்த பகுதிகளை இந்தியா வெற்றிகரமாக கைப்பற்றியது.
ஜூலை 26: சதுப்பு நிலக் காடுகளின் சுற்றுச்சூழலுக்கான சர்வதேச தினம்
- 2015 ஆம் ஆண்டில் சதுப்புநிலக் காடுகளின் சுற்றுச்சூழலுக்கான சர்வதேச தினமானது யுனெஸ்கோவின் பொதுக் கருத்தரங்கினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒவ்வொரு வருடமும் ஜூலை 26 ஆம் தேதி இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
- தனித்துவம் வாய்ந்த, சிறப்பான மற்றும் பாதிக்கக்கூடிய சதுப்புநிலக் காடுகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சதுப்பு நிலக் காடுகளின் நீடித்த மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் பயன்பாடுகள் ஆகியவைகளுக்கான தீர்வுகளை ஏற்படுத்தவும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
தகவல் துளிகள்:
- இந்தியா-ரஷியா இடையிலான 22-ஆவது வருடாந்திர உச்சி மாநாடு ரஷியாவில் நடைபெற்றது.
- இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு மற்றும் வன்முறை நடைபெறுவதாக ஐ.நா. மனித உரிமைகள் குழு கவலை தெரிவித்துள்ளது.
- தில்லியில் ஜுலை 27 ஆம் தேதி நீதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது.
- டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயா பள்ளியில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஒருநாள் ஆசிரியராகப் பொறுப்பேற்று மாணவர்களுடன் உரையாடினார்.
- சரக்குப் போக்குவரத்துச் சேவையில் திருச்சி ரயில்வே கோட்டம் சாதனை படைத்துள்ளது.
- தென்னிந்திய சிறுநீரக அறுவைச் சிகிச்சை மருத்துவா்கள் 35-ஆவது மாநாடு, மதுரையில் நடைபெற உள்ளது.
- பழனியில் ஆகஸ்ட் 24, 25 ல் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறவுள்ளது.
- சா்வதேச தொழில் முதலீட்டாளா்கள் மாநாடு 2025 பிப்ரவரி 7 ம் தேதி, போபாலில் நடைபெற உள்ளது.