ஜிஎஸ்டி செஸ் ஆய்வு:
- ஜிஎஸ்டி செஸ் வரி தொடா்பாக ஆராய்ந்து பரிந்துரைகள் வழங்குவதற்கு மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி தலைமையில் 10 போ் கொண்ட அமைச்சா்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
- 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என 4 விகிதங்களில் சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கப்படுகிறது.
- எனினும் ஜிஎஸ்டி சட்டத்தின்படி, சரக்கு மற்றும் சேவைகள் மீது 40 சதவீதம் வரை ஜிஎஸ்டி விதிக்க முடியும்.
- ஜிஎஸ்டி முறையில் ஆடம்பர பொருள்கள், புகையிலை, சிகரெட் உள்ளிட்டவை மீது 28 சதவீதத்துக்கும் மேலாக வெவ்வேறு விகிதங்களில் செஸ் வரி வசூலிக்கப்படுகிறது.
- கடந்த 2017 – ஆம் ஆண்டு ஜூலை 1 – ஆம் தேதி அமலுக்கு வந்த ஜிஎஸ்டி முறையால் மாநிலங்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட இந்த செஸ் வரி வசூலிக்கப்பட்டது.
- இதன்மூலம் கிடைத்த தொகை மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது.
- இந்தத் தொகையை ஜிஎஸ்டி அமலுக்கு வந்த நாளில் இருந்து 2022 – ஆம் ஆண்டு ஜூன் வரை, 5 ஆண்டுகளுக்கு வழங்க மத்திய அரசு திட்டமிட்டது.
- 2026 – ஆம் ஆண்டு மார்ச் வரை ஆடம்பர பொருள்கள், புகையிலை, சிகரெட் உள்ளிட்டவை மீது ஜிஎஸ்டி செஸ் வரி வசூலிக்க 2022 – ஆம் ஆண்டு ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்தது.
நாடு முழுவதும் ‘கவச்’தொழில்நுட்பம்:
- ரயில்வே பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் நாடு முழுவதும் உள்ள ரயில் பாதைகளில் அல்ட்ரா சவுண்ட் சோதனைகள் முதல் மூடுபனி பாதுகாப்பு கருவிகள் வரையிலான நவீன தொழில்நுட்ப கருவிகளைப் பொருத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
- ‘கவச்’தானியங்கி ரயில் பாதுகாப்பு தொழில்நுட்பம் தொடா்பாக ரயில் ஓட்டுநா்களுக்கும் மற்ற ரயில்வே ஊழியா்களுக்கும் சிறப்புப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.
- உள்நாட்டில் தயாரிக்கப்படும் இந்த ‘கவச்’ தொழில்நுட்பமானது, ரயில் குறிப்பிட்ட வேகத்தில் சென்றுகொண்டிருக்கும்போது அதே பாதையில் மற்றொரு ரயில் வரும்போது அல்லது சிவப்பு சிக்னல் ஒளிரும்போது தானாக பிரேக்கை செலுத்தி ரயிலை நிறுத்த உதவும் தொழில்நுட்பமாகும்.
- மோசமான வானிலையின்போது ரயிலே பாதுகாப்பாக இயக்கவும் இந்த ‘கவச்’ தொழில்நுட்பம் உதவும்.
- 7,000 ரயில் நிலையங்களை உள்ளடக்கிய 1 லட்சம் கி.மீ. தொலைவு ரயில் பாதைகளில் ‘கவச்’ தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்தப்பட்டுவிடும்.
- ரயில்வே அமைச்சா் – அஸ்வினி வைஷ்ணவ்.
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து: பாகிஸ்தான் வலியுறுத்தல்
- 79 – ஆவது ஐ.நா.பொதுச் சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 – ஐ இந்தியா மீண்டும் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார்.
- 1947ஆம் ஆண்டு, இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது, ஜம்மு காஷ்மீர் தனிச்சையாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என அம்மாநிலத்தின் கடைசி மகாராஜாவாக இருந்த ராஜா ஹரி சிங் விரும்பினார்.
- சில நிபந்தனைகளுக்கு பிறகு, இந்தியாவுடன் அம்மாநிலத்தை சேர்க்க ஒப்புக் கொண்டார்.
- இந்திய அரசமைப்பு சட்டத்தில், பிரிவு 370 இயற்றப்பட்டு, அதன் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.
- இந்திய யூனியனுக்குள் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பின் 370 வது பிரிவை ஆகஸ்ட் 5, 2019 அன்று மத்திய அரசு ரத்து செய்தது.
- ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வந்தது, இது முந்தைய மாநிலத்தை லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினா் அந்தஸ்து:
- ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினா் அந்தஸ்து வழங்கப்படுவதற்கு பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் ஆதரவு தெரிவித்தார்.
- 15 நாடுகளைக் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் சீனா, பிரான்ஸ், ரஷியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய ஐந்து நிரந்தர உறுப்பினா் நாடுகளுக்கு மட்டுமே ‘வீட்டோ’ அதிகாரம் உள்ளது.
- பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரும் தீா்மானங்களை வீட்டோ அதிகாரமுள்ள நாடுகள் ரத்து செய்யலாம்.
- மீதமுள்ள 10 உறுப்பினா்கள் 2 ஆண்டுகளுக்கு நிரந்தரமற்ற உறுப்பினா்களாக தோ்ந்தெடுக்கப்படுகின்றனா், இந்நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் இல்லை.
- கடந்த 2021-2022 – ஆம் ஆண்டில் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா இருந்தது.
செப்டம்பர் 28: சர்வதேச வெளிநாய்க்கடி நோய் தினம்
- வெறிநாய்க்கடி நோயைத் தடுப்பது குறித்தும் இந்த கொடிய நோயை குணப்படுத்தும் செயல்பாடுகளைச் குறித்தும் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச வெளிநாய்க்கடி நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது.
- வெறிநாய்க்கடி நோய் மருந்தைக் கண்டுபிடித்த பிரெஞ்சு வேதியியலாளர் மற்றும் நுண்ணுயிரியல் வல்லுநரான லூயிஸ் பாஸ்டரின் இறந்த தினத்தைக் இத்தினம் குறிக்கிறது.
தகவல் துளிகள்:
- ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ்.
- நிதியாண்டில் இந்திய பொருளாதாரம்5 சதவீதம் முதல் 7 சதவீதம் வளா்ச்சியடையும் என மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகா் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
- பழனியை சோ்ந்த இயற்கை விவசாயி கவிதாவுக்கு ‘வேளாண் செம்மல்’விருது வழங்கப்பட்டது.
- கொடைக்கானலில் விளையும், வெள்ளைப் பூண்டின் தரத்தைக் கண்டறியும் கைப்பெட்டகத்தை அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக உயிர் தொழில்நுட்பவியல் துறை மாணவிகள் கண்டுபிடித்தனா்.
- கொடைக்கானல் பகுதிகளில் விளைந்த வெள்ளைப் பூண்டிற்கு கடந்த 2019 – ஆம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.