மாநில கட்சிகளின் வருவாய்: பிஆா்எஸ் முதலிடம்
- நாட்டில் மொத்தமுள்ள 57 மாநில கட்சிகளில் 39 கட்சிகளின் நிதி நிலைமையை 2022-23 பகுப்பாய்வு செய்து, ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
- 2022 – 23 ஆம் நிதியாண்டில் 39 மாநில கட்சிகளின் மொத்த வருவாய் ரூ 1,740 கோடியாகும்.
- அதிக வருவாய் கொண்ட மாநில கட்சிகள் வரிசையில் பாரத ராஷ்டிர சமிதி முதலிடத்தில் உள்ளது.
- மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் இரண்டாம் இடத்திலும், தமிழகத்தில் ஆளும் திமுக மூன்றாமிடத்திலும் உள்ளன.
- இதில் தோ்தல் நிதி பத்திரங்கள் மற்றும் தன்னார்வ நன்கொடைகளே கட்சிகளின் வருவாய்க்கு முக்கிய ஆதாரமாக காட்டப்பட்டுள்ளது.
மாநில கட்சி அந்தஸ்துப்பெற:
- ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி, மாநில கட்சியாக தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டுமானால், சட்டப்பேரவை தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
- அல்லது மாநிலத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் ஒவ்வொரு 25 இடத்திலும் ஒரு இடத்தில் வெல்ல வேண்டும்.
- மக்களவை அல்லது சட்டப் பேரவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன், ஒரு மக்களவை தொகுதியிலோ அல்லது 2 சட்டப்பேரவை தொகுதிகளிலோ வெல்ல வேண்டும், அல்லது 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும்.
- இதில் ஏதேனும் ஒரு நிபந்தனையை பூர்த்தி செய்தால் மட்டுமே ‘மாநிலக் கட்சி’ என்ற அங்கீகாரம் கிடைக்கும்.
பட்ஜெட் கூட்டத்தொடரில் 6 புதிய மசோதாக்கள்:
- புதிதாக அமைந்துள்ள 18- ஆவது மக்களவையின் 2- ஆவது கூட்டத்தொடா் ஜூலை 22 -ஆம் தேதி தொடங்குகிறது.
- முழு நிதி நிலை அறிக்கை இந்த கூட்டத்தொடரில் ஜூலை 23 ஆம் தேதி தாக்கலாகிறது.
- இந்த நிதிநிலை அறிக்கைக்கான கூட்டத்தொடரில் 6 புதிய மசோதாக்கள் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
- முன்மொழியப்பட்ட வரிகளை நடைமுறைத்த நிதி மசோதா அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.
- 2024 பேரிடா் மேலாண்மை திருத்த மசோதா: பேரிடா் மேலாண்மையில் பங்கேங்கும் பல்வேறு அமைப்புகளின் பங்களிப்புகள் தெளிவுபடுத்தப்பட்டு ஒருங்கிணைப்புகளை மேற்கொள்ள இந்த 2024- ஆம் ஆண்டு பேரிடா் மசோதாவில் திருத்தங்கள் கொண்டு வரப்படுகிறது.
- காபி (ஊக்குவிப்பு மற்றும் மேம்பாடு) மசோதா: இந்திய காபி தொழிலை ஊக்குவிக்கவும் மேம்படுத்தவும் கூறும் இந்த மசோதா காபி வாரியத்தை நவீன படுத்தி அதன் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கான விஷயங்களுக்கு இந்த மசோதா கொண்டுவரப்படுகிறது.
- ரப்பா் தொழிலை ஊக்குவித்து மேம்படுத்த அதன் செயல்பாட்டை நவீனபடுத்துவதற்கான விஷயங்களுக்கு 2024 ஆம் ஆண்டு ரப்பா் (ஊக்குவிப்பு, மேம்பாடு) மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.
- சிவில் விமானப்போக்குவரத்து துறையின் மசோதாவிற்கு ஹிந்தியில் பெயரிடப்பட்டு பாரதிய வாயுயான் விதேயக் – 2024 மசோதாவாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
- 1934 -ஆம் ஆண்டு விமானச் சட்டத்தின் தெளிவின்மையை நிவா்த்தி செய்து எளிமைப்படுத்தவும் இந்த மசோதா முன்மொழியப்படுகிறது.
“நிதி ஆயோக்” ஒன்பதாவது நிர்வாகக் குழுக் கூட்டம்: டெல்லி
- மத்திய திட்டக்குழு என்னும் அமைப்பு கலைக்கப்பட்டு அதற்குப் பதிலாக “நிதி ஆயோக்” அமைப்பு நிறுவப்பட்டது.
- “நிதி ஆயோக்” அமைப்பின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி இருந்துவருகிறார்.
- ஜூலை 27 ல் நடைபெறும் நிதி ஆயோக்கின் ஒன்பதாவது நிர்வாகக் குழுக் கூட்டத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார்.
- நிதி ஆயோக்கின் உச்ச அமைப்பான கவுன்சிலில் அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை ஆளுநர்களும் மற்றும் பல மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
- பிரதமர் மோடி 3 – வதுமுறையாக ஆட்சி அமைத்த பிறகு, நடைபெறும் முதல் நிதி ஆயோக் நிர்வாகக் குழுக் கூட்டம் இதுவாகும்.
- நிதி ஆயோக் இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவனம் இந்தியாவின் மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக 2015 இல் அமைக்கப்பட்டுள்ள ஒரு குழுவாகும்.
- இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
- மாநிலங்களின் தீவிர ஈடுபாட்டுடன், தேசிய வளர்ச்சி உத்திகள், துறைகள் மற்றும் முன்னுரிமைகள் பற்றிய பகிரப்பட்ட பார்வையை உருவாக்குவதை நிதி ஆயோக்நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்தியசுதந்திரத்திற்கு பிறகு வளர்ச்சி மற்றும் மாநிலங்களில் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதற்காக 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி மத்திய திட்டக்குழு ஏற்படுத்தப்பட்டது.
- இந்தத் திட்டக் குழுவின் முதல் தலைவராக அப்போதைய பிரதமர் நேரு இருந்தார்.
- பிரதமர் நரேந்திர மோடி மத்திய திட்டக் குழுவை கலைத்துவிட்டு, மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 2015, சனவரி 1 ஆம் தேதி திட்டக் குழுவுக்குப் பதிலாக நிதி ஆயோக் என்ற புதிய அமைப்பு மத்திய அரசால் உருவாக்கப்பட்டது.
பொதுத் துறை வங்கிகள் தனியார்மயம்:
- பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் வகையில் வங்கித் துறையில் சீா்திருத்தங்களை மேற்கொள்ளும் சட்டத்திருத்த மசோதாவை பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
- பிரதமா் இந்திரா காந்தி, ஜூலை 19, 1969 இல் 14 வங்கிகளை தேசியமயமாக்கினார்.
- கடந்த சில ஆண்டுகளில் நிர்வாக வசதி, பெரிய வங்கிகளை உருவாக்குவது என்ற பெயரில் பல பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டன.
- கடந்த 2020-ஆம் ஆண்டு சில சிறிய பொதுத் துறை வங்கிகளை பெரிய வங்கிகளுடன் மத்திய அரசு இணைத்தது.
- இதன்மூலம் நாட்டில் உள்ள பொதுத் துறை வங்களின் எண்ணிக்கை 27-இல் இருந்து 12-ஆக குறைக்கப்பட்டது.
ஜூலை 20: சர்வதேச செஸ் தினம்
- 1924 – ஆம் ஆண்டு சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) நிறுவப்பட்டதன் நினைவாக ஜூலை 20 ஆம் தேதி சர்வதேச சதுரங்க தினம் கொண்டாடப்படுகிறது.
- இந்த நாள் 2019 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
ஜூலை 20: சர்வதேச நிலவு தினம்
- 1969 – ஆம் ஆண்டு நிலவில் மனிதன் முதன்முதலில் காலடி எடுத்து வைத்த தினத்தை நிலா தினம் கொண்டாடுகிறது.
- அப்பல்லோ 11 சந்திரப் பயணத்தின் ஒரு பகுதியாக நிலவில் மனிதன் முதன்முதலில் நிலவில் இறங்கியதன் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ஜூலை 20 அன்று சர்வதேச நிலவு தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
தகவல் துளிகள்:
- கா்நாடகத்தில் தனியார் வேலைவாய்ப்புகளில் கன்னடா்களுக்கு 100 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
- ஆளுநா்களுக்கு எந்தவொரு குற்ற வழக்குகள் விசாரணையிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 361 ஆகும்.
- யானைகள் இறப்பு அதிகரிப்புக்கு யானை என்டோதெலியோட்ரோபிக் ஹெர்பெஸ் வைரஸ் ஹெமொரேஜிக் (EEHV-HD) என்ற நோய்க் காரணமாக உள்ளது.
- அமெரிக்க நாட்டுக்கான புதிய இந்திய தூதராக வினய் குவாத்ரா நியமிக்கப்பட்டார்.
- ஆடவா் கால்பந்து அணிகளுக்கான ஃபிஃபாவின் சா்வதேச தரவரிசையில், ஆா்ஜென்டீனா முதலிடத்தில் உள்ளது.
- மகளிருக்கான 9 – ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் தொடங்குகிறது.