உலகின் கடல்சார் சக்தி இந்தியா:
- ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்ஷீர் ஆகிய 3 போர்க்கப்பல்களை மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் பிரதமா் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- ஒரு பெரிய ரக தாக்குதல் போர்க்கப்பல் (ஐஎன்எஸ் சூரத்), சிறிய ரக போர்க்கப்பல் (ஐஎன்எஸ் நீலகிரி), அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல் (ஐஎன்எஸ் வாக்ஷீர்) ஆகிய மூன்றும் ஒரே நேரத்தில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.
- இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் வெளிப்படைத் தன்மை, பாதுகாப்பு மற்றும் வளமைக்கே இந்தியா எப்போதும் ஆதரவளிக்கிறது.
- இந்திய பெருங்கடலில் முதன்மையான பொறுப்பு நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
- கடந்த 10 ஆண்டுகளில் இந்திய கடற்படையில் 33 கப்பல்களும் 7 நீர்மூழ்கி கப்பல்களும் இணைக்கப்பட்டுள்ளன.
- இந்த 40 கப்பல்களில் 39 கப்பல்கள் இந்தியாவில் கட்டப்பட்டுள்ளன.
- ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்ஷீர் ஆகிய 3 போர்க்கப்பல்களும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவையாகும், ‘தற்சார்பு இந்தியா’ முன்னெடுப்பு, கீழ் கட்டப்பட்டது.
- இதில், ‘பி15பி’ ஏவுகணை அழிப்பு போர்க்கப்பல் திட்டத்தின்கீழ் நான்காவது மற்றும் இறுதிக் கப்பலான ஐஎன்எஸ் சூரத், உலகின் மிகப்பெரிய மற்றும் அதிநவீன தாக்குதல் போர்க்கப்பல்களில் ஒன்றாகும்.
- இக்கப்பல் 75 சதவீதம் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டது.
- ‘பி17ஏ’ போர்க்கப்பல் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட முதல் கப்பல் ஐஎன்எஸ் நீலகிரி.
- அதிநவீன உபகரணங்களுடன் கூடிய இக்கப்பலில் எம்ஹெச்-60ஆர் ரக ஹெலிகாப்டர் உள்பட பல்வேறு ரக ஹெலிகாப்டர்களை இயக்க முடியும்.
- இவ்விரண்டு போர்க் கப்பல்களும் இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பிரிவால் வடிவமைக்கப்பட்டு, மஸகான் கப்பல் கட்டும் நிறுவனத்தால் கட்டப்பட்டதாகும்.
- ‘பி75’ ஸ்கார்பீன் திட்டத்தின் ஆறாவது மற்றும் கடைசி நீா்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் வாக்ஷீா், பிரான்ஸ் கடற்படையுடன் இணைந்து வடிவமைக்கப்பட்டு, மஸகான் கப்பல் கட்டும் நிறுவனத்தால் கட்டப்பட்டது.
மக்கள் வசிக்காத தொலைதூர தீவுகளுக்கு ராஜ ராஜ சோழன் பெயர்:
- கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பெருங்கடலில் மக்கள் வசிக்காத தொலைதூர தீவுகள் கண்காணிக்கப்பட்டு, பெயரிடப்பட்டு வருகின்றன.
- இதேபோல், இந்தியாவின் முன்னெடுப்பின்கீழ் இந்திய பெருங்கடலில் உள்ள ஆழ்கடல் மலைகளுக்கு ராஜராஜ சோழன், அசோகா், ஹர்ஷவர்தன், சந்திரகுப்தர் ஆகிய பேரரசர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
சமுத்திரயான்’ திட்டம்:
- கடலுக்கு அடியில் 6,000 மீட்டர் ஆழம் வரை சென்று ஆய்வு மேற்கொள்வதற்கா ன திட்டம் சமுத்திரயான் திட்டம் ஆகும்.
- சமுத்திராயன் திட்டம் என்பது, ஆழ்கடலை ஆராய இந்தியா மேற்கொள்ளும் முதல் மனிதர்கள் பங்கேற்கும் திட்டம்.
- இந்த திட்டத்தை, சென்னையில் உள்ள தேசியக் கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT) வடிவமைத்து வருகிறது.
- இந்த திட்டத்தின் மூலம், நீரில் மூழ்கக்கூடிய வாகனத்தில் மனிதர்களை ஆழ்கடலுக்கு அனுப்பி ஆய்வு செய்யப்படும்.
- இந்த திட்டம் 2026-ம் ஆண்டுக்குள் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் முதல்முறையாக தேசிய மஞ்சள் வாரியம் தொடக்கம்:
- இந்தியாவில் முதல்முறையாக தேசிய மஞ்சள் வாரியம் தொடங்கப்பட்டுள்ளது.
- நிஸாமாபாத்தில் தேசிய மஞ்சள் வாரியத்தை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்.
- மஞ்சள் வாரிய தலைவராக பல்லே கங்கா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
- உலகளாவிய மஞ்சள் உற்பத்தியில் 70 சதவிகிதம் இந்தியாவில் மேற்கொள்ளப்படுகிறது.
- இந்தியாவில் 30 வகையான மஞ்சள் உற்பத்தி செய்யப்படுகிறது.
- தமிழகம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் உள்ள மஞ்சள் விவசாயிகளின் நலனில் சிறப்பு கவனம் செலுத்தும் நோக்கில் தெலங்கானா மாநிலம் நிஸாமாபாத்தில் தேசிய மஞ்சள் வாரியம் தொடங்கப்பட்டுள்ளது.
நாக் மார்க் 2 ஏவுகணை சோதனை வெற்றி:
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) சார்பில் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ‘நாக் மார்க்-2’ என்ற புதிய பதிப்பு பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில், நீண்ட தூர மற்றும் குறுகிய தூர இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணையின் திறன் பரிசோதிக்கப்பட்டது.
- இதன் மூலம் இந்த ஏவுகணையின் ஒட்டுமொத்த தொகுப்பும், ராணுவ பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்வதற்கு தயார் நிலையை எட்டியுள்ளது.
ஜனவரி 15: இந்திய ராணுவ தினம்
- ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 இந்திய இராணுவ தினமாக அனுசரிக்கப்படுகிறது.
- இந்த நாளில் 1949 இல் பீல்ட் மார்ஷல் கோதண்டேரா எம் கரியப்பா, கடைசி பிரிட்டிஷ் தளபதியான ஜெனரல் சர் பிரான்சிஸ் புட்சரிடமிருந்து இந்திய இராணுவத்தின் முதல் தளபதியாக பொறுப்பேற்றார்.
ஜனவரி 16: தேசிய தொடக்க நாள்
- பிரதமர் நரேந்திர மோடி 2021 ஆம் ஆண்டில் ஜனவரி 16 ஆம் தேதியை தேசிய தொடக்க தினமாக அறிவித்தார்.
தகவல் துளிகள்:
- கடந்த 1949 – ஆம் ஆண்டில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதியாக ஜெனரல் கே.எம்.கரியப்பா பொறுப்பேற்றதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 15 – ஆம் தேதி ராணுவ தினமாக அனுசரிக்கப்படுகிறது.
- மலையாள இசையமைப்பாளரும் பாடலாசிரியருமான கைதப்புறம் தாமோதரன் நம்பூதிரிக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.
- மூன்றாம் ஆண்டு காசி-தமிழ் சங்கம நிகழ்ச்சி, உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் பிப்ரவரி 15 முதல் 24 வரை நடைபெறவுள்ளது.
- இஸ்ரோவின் 10 – ஆவது தலைவராக இருந்து வந்த சோம்நாத்தின் பதவிக்காலம் முடிவடைந்ததால், புதிய தலைவராக வி. நாராயணன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
- கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஸ்பெயின் நாட்டுத் தூதரகம் திறக்கப்படும் என ஸ்பெயின் சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
- சேலம், தலைவாசலில் ரூ 564 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- 2025 – ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது செந்தமிழ்ச் செம்மல் பெரும் புலவர் மு. படிக்கராமுவுக்கும், 2024-ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது எல். கணேசனுக்கும், பெருந்தலைவர் காமராசர் விருது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே.வி. தங்கபாலுவுக்கும், மகாகவி பாரதியார் விருது கவிஞர் கபிலனுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிதைப் பேரொளி பொன். செல்வகணபதிக்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது மருத்துவர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்துக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது வே.மு.பொதியவெற்பனுக்கும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
- ஜனவரியை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்கக் கோரி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- நிலவில் இறங்கி ஆய்வு செய்வதற்காக இரு தனியார் விண்கலங்களை அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்குக்குச் சொந்தமான விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ் விண்ணில் செலுத்தியது.
- ஐசிசி டிசம்பர் மாத சிறந்த வீரர் விருதை ஜஸ்பிரித் பும்ரா வென்றுள்ளார்.